Skip to main content
Breaking news · In-depth coverage · Analysis
Breaking news · In-depth coverage · Analysis
● Breaking
Latest headlines

அமெரிக்க ஜனநாயகக் கட்சியின் பிரதிநிதி இல்ஹான் உமர் மீது தாக்குதல் நடத்திய நபருக்கு 14 மாத சிறைத் தண்டனை விதித்து அமெரிக்க நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.


அமெரிக்க ஜனநாயகக் கட்சியின் பிரதிநிதி இல்ஹான் உமர் மீது தாக்குதல் நடத்திய நபருக்கு 14 மாத சிறைத் தண்டனை விதித்து அமெரிக்க நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.


அமெரிக்காவின் மின்னியாபொலிஸ் நகரில் கடந்த ஜனவரி 27 அன்று நடைபெற்ற மக்கள் சந்திப்புக் கூட்டத்தில் (Town Hall meeting), அந்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர் இல்ஹான் உமர் உரையாற்றிக் கொண்டிருந்தபோது கூட்டத்திலிருந்து எழுந்த 56 வயதுடைய அந்தோனி ஜேம்ஸ் காஸ்மியர்சாக் (Anthony James Kazmierczak) என்பவர் உமர் மீது ஆப்பிள் சைடர் வினிகர் கலவையை சிரிஞ்ச் மூலம் பீய்ச்சியடித்துத் தாக்கினார். சம்பவ இடத்தில் உமரின் பாதுகாப்புப் பிரிவினரால் உடனடியாகக் கைது செய்யப்பட்ட அவர் மீது, அமெரிக்க அரசு அதிகாரியைத் தாக்கிய குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது.


அரசியல் முரண்பாடு மற்றும் காழ்ப்புணர்ச்சி காரணமாகவே இத்தாக்குதலை திட்டமிட்டு நடத்தியதாக குற்றத்தை ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து, அமெரிக்க மாவட்ட நீதிபதி ஜோன் என். எரிக்சன் (Joan N. Ericksen) அவருக்கு 14 மாத சிறைத் தண்டனையும், விடுதலைக்குப் பின் 3 ஆண்டுகள் கண்காணிப்புடன் இல்ஹான் உமரைத் தொடர்புகொள்ளக் கூடாது என்ற நிபந்தனையையும் விதித்து தீர்ப்பளித்தார்.


கே ஆர் டி வி நெட்வொர்க் - சர்வதேச செய்தி / அமெரிக்க நீதித்துறை மற்றும் அரசியல் விவகாரம்


ඇමෙරිකානු කොන්ග්‍රස් මන්ත්‍රීනී ඉල්හාන් ඕමාර්ට පහරදුන් පුද්ගලයාට මාස 14ක සිරදඬුවමක්


ඇමෙරිකානු ඩිමොක්‍රටික් පක්ෂ කොන්ග්‍රස් සභික ඉල්හාන් ඕමාර් (Ilhan Omar) වෙත විනාකිරි මිශ්‍ර දියර ප්‍රහාරයක් එල්ල කළ පුද්ගලයෙකුට මාස 14ක සිරදඬුවම් නියම කිරීමට ඇමෙරිකානු දිස්ත්‍රික් අධිකරණය පියවර ගෙන තිබේ.


පසුගිය ජනවාරි 27 වන දින මිනියාපොලිස් හි පැවති මහජන හමුවකදී ඕමාර් මෙනවිය අමතමින් සිටියදී, සභාව තුළින් නැගී සිටි 56 හැවිරිදි ඇන්තනි ජේම්ස් කස්මියර්සාක් (Anthony James Kazmierczak) නැමැත්තා සිරින්ජයක් ආධාරයෙන් ඇය දෙසට ඇපල් සයිඩර් විනාකිරි දියරය විද පහර දී තිබුණි. ඇමෙරිකානු නිලධාරියෙකුට පහරදීමේ චෝදනාවට වරද පිළිගැනීමෙන් අනතුරුව, අධිකරණය විසින් මෙම සිරදඬුවම නියම කළ අතර දඬුවම් කාලය අවසන් වීමෙන් පසු වසර තුනක කාලයක් අධීක්ෂණය යටතේ තැබීමටද නියෝග කර ඇත.


කේ ආර් ටී වී නෙට්වර්ක් - ජාත්‍යන්තර පුවත් / අමෙරිකානු දේශපාලන හා අධිකරණ පුවත්


Man Who Attacked US Representative Ilhan Omar Sentenced to 14 Months in Prison


Anthony James Kazmierczak, the man who targeted and sprayed liquid at Democratic US Representative Ilhan Omar during a town hall meeting in Minneapolis, has been sentenced to 14 months in federal prison.


The incident occurred on January 27, 2026, when 56-year-old Kazmierczak discharged a water and apple cider vinegar solution from a syringe at the congresswoman, later admitting to politically motivated opposition. Handing down the sentence, US District Judge Joan N. Ericksen condemned the planned assault on an elected official and ordered Kazmierczak to undergo three years of supervised release following his term, which includes a strict no-contact order regarding Representative Omar.


KR TV Network - International News / US Judicial and Political Affairs

Comments