Skip to main content
Breaking news · In-depth coverage · Analysis
Breaking news · In-depth coverage · Analysis
● Breaking
Latest headlines

சவுதி அரேபியாவில் ஒரே வாரத்தில் 14,165 சட்டவிரோதக் குடியேறிகள் கைது: உள்துறை அமைச்சு விடுத்துள்ள கடும் எச்சரிக்கை

 


சவுதி அரேபியாவில் ஒரே வாரத்தில் 14,165 சட்டவிரோதக் குடியேறிகள் கைது: உள்துறை அமைச்சு விடுத்துள்ள கடும் எச்சரிக்கை


சவுதி அரேபியாவில் பாதுகாப்புப் படையினர் மற்றும் தொடர்புடைய அரச நிறுவனங்கள் இணைந்து முன்னெடுத்த அதிரடி கூட்டுச் சோதனைகளில், ஒரே வாரத்தில் மொத்தம் 14,165 சட்டவிரோதக் குடியேறிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக சவுதி உள்துறை அமைச்சு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. ஆகஸ்ட் 27 முதல் செப்டம்பர் 2 வரையிலான காலப்பகுதியில் முன்னெடுக்கப்பட்ட இந்நடவடிக்கைகளில், குடியிருப்புச் சட்டங்களை மீறிய 7,121 பேரும், எல்லைப் பாதுகாப்புச் சட்டங்களை மீறிய 3,636 பேரும், தொழில் சட்டங்களை மீறிய 3,408 பேரும் உள்ளடங்குகின்றனர். இவர்களில் 12,363 சட்டவிரோதக் குடியேறிகள் ஏற்கனவே நாடுகடத்தப்பட்டுள்ளனர். மேலும் எல்லை வழியாக நாட்டிற்குள் அத்துமீறி நுழைய முயன்ற 1,315 பேரும், சட்டவிரோதமாக வெளியேற முயன்ற 42 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். சட்டவிரோதமாக நுழைபவர்களுக்குப் போக்குவரத்து, அடைக்கலம் அல்லது வேலைவாய்ப்பு வழங்குபவர்களுக்கு 15 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை மற்றும் 10 இலட்சம் சவுதி ரியால் வரை அபராதம் விதிக்கப்படுவதுடன், அவர்களின் வாகனங்கள் மற்றும் தங்குமிடங்கள் பறிமுதல் செய்யப்படும் என உள்துறை அமைச்சு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.


கே ஆர் டி வி நெட்வொர்க் - சர்வதேச செய்தி


සෞදි අරාබියේදී එක් සතියක් තුළ නීතිවිරෝධී පදිංචිකරුවන් 14,165ක් අත්අඩංගුවට: නීති කඩකරන්නන්ට එරෙහිව දැඩි දඬුවම්


සෞදි ආරක්ෂක අංශ සහ අදාළ රාජ්‍ය ආයතන එක්ව සිදුකරන ලද ඒකාබද්ධ මෙහෙයුම් මාලාවකදී පසුගිය සතිය තුළ පමණක් නීතිවිරෝධී පදිංචිකරුවන් 14,165 දෙනෙකු අත්අඩංගුවට ගෙන ඇති බව සෞදි අභ්‍යන්තර කටයුතු අමාත්‍යාංශය නිවේදනය කර තිබේ. අගෝස්තු 27 සිට සැප්තැම්බර් 02 දක්වා වූ කාලය තුළ මෙම මෙහෙයුම් ක්‍රියාත්මක වූ අතර, පදිංචි නීති උල්ලංඝනය කළ 7,121ක්, දේශසීමා ආරක්ෂණ නීති උල්ලංඝනය කළ 3,636ක් සහ කම්කරු නීති කඩකළ 3,408ක් ඒ අතර වෙති. මීට අමතරව නීතිවිරෝධී ලෙස රට තුළට ඇතුළුවීමට උත්සාහ කළ පුද්ගලයින් 1,315ක් අත්අඩංගුවට ගෙන ඇති අතර, නීති විරෝධී පදිංචිකරුවන් 12,363ක් මේ වන විටත් පිටුවහල් කර ඇත. මෙවැනි පුද්ගලයින්ට නවාතැන්, ප්‍රවාහන හෝ රැකියා පහසුකම් සපයන පාර්ශවයන්ට වසර 15ක සිරදඬුවම් සහ සෞදි රියාල් මිලියනයක දඩ මුදලක් පනවන බවත්, ඔවුන්ගේ දේපළ රාජසන්තක කරන බවත් අභ්‍යන්තර කටයුතු අමාත්‍යාංශය දැඩිව අවධාරණය කර සිටියි.


කේ ආර් ටී වී නෙට්වර්ක් - ජාත්‍යන්තර පුවත්


Saudi Security Forces Apprehend 14,165 Undocumented Residents in One Week: Interior Ministry Issues Stern Legal Directives


Joint security inspections conducted across the Kingdom of Saudi Arabia in coordination with relevant state ministries yielded the arrest of 14,165 violators of residency, border, and labour regulations within a single week, the Ministry of Interior confirmed on Saturday. Carried out between 27 August and 2 September, the operations detained 7,121 individuals for residency law infractions, 3,636 for border security violations, and 3,408 for labour law breaches, leading to the immediate deportation of 12,363 illegal residents. Concurrently, 1,315 persons attempting irregular border entry—primarily Ethiopian and Yemeni nationals—were intercepted, alongside 42 individuals attempting unlawful exit. The Ministry reaffirmed that anyone facilitating unlawful entry, transportation, or shelter to undocumented migrants faces up to 15 years in prison, maximum fines of SR1 million, and vehicle or property confiscation.


KR TV Network - International News

Comments