15ஆம் திகதி முதல் இலங்கையர்களுக்கு விசா கட்டாயம்: தாய்லாந்து அரசு அதிரடி அறிவிப்பு!
15ஆம் திகதி முதல் இலங்கையர்களுக்கு விசா கட்டாயம்: தாய்லாந்து அரசு அதிரடி அறிவிப்பு!
இலங்கை கடவுச்சீட்டு வைத்திருப்பவர்களுக்கு இதுவரை வழங்கப்பட்டு வந்த விசா விலக்குத் திட்டம் இரத்துச் செய்யப்பட்டுள்ள நிலையில், எதிர்வரும் 15ஆம் திகதி முதல் தாய்லாந்து செல்வதற்கு விசா பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
முன்னதாக நடைமுறையில் இருந்த 60 நாட்கள் தங்கியிருப்பதற்கான விசா விலக்குத் திட்டம் முழுமையாக இரத்துச் செய்யப்பட்டுள்ளதுடன், குறுகிய கால விசா இல்லா அனுமதி வழங்கப்படும் நாடுகளின் பட்டியலும் திருத்தியமைக்கப்பட்டுள்ளது.
இதன்படி, வரும் 15ஆம் திகதிக்குப் பிறகு தாய்லாந்திற்குப் பயணம் செய்யத் திட்டமிடுபவர்கள் முன்கூட்டியே விசாவைப் பெற்றாக வேண்டும். கொழும்பில் உள்ள தாய்லாந்து தூதரகம் நேரடியாக விசா விண்ணப்பங்களைப் பொறுப்பேற்காது என்பதால், பயணிகள் அனைவரும் உத்தியோகபூர்வ இணையவழி e-Visa முறைமையின் ஊடாகவே விண்ணப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கே.ஆர்.டி.வி. நெட்வொர்க் | உள்நாட்டுச் செய்தி
15 වන දින සිට ශ්රී ලංකා පුරවැසියන්ට වීසා ලබා ගැනීම අනිවාර්යයි: තායිලන්ත රජයෙන් දැඩි නිවේදනයක්!
ශ්රී ලංකා ගමන් බලපත්ර හිමියන් සඳහා මීට පෙර ක්රියාත්මක වූ දින 60 ක වීසා නිදහස් කිරීමේ ක්රමවේදය අහෝසි කර ඇති අතර, එළඹෙන 15 වන දින සිට තායිලන්තය වෙත සංචාරය කිරීම සඳහා වීසා ලබා ගැනීම අනිවාර්ය කර තිබේ.
මීට පෙර පැවති දින 60 ක වීසා රහිතව රැඳී සිටීමේ පහසුකම සම්පූර්ණයෙන්ම ඉවත් කර ඇති අතර, කෙටිකාලීන වීසා රහිත අවසර ලබන රටවල ලැයිස්තුවද යළි සංශෝධනය කර ඇත.
ඒ අනුව, එළඹෙන 15 වන දිනෙන් පසු තායිලන්තය වෙත යාමට අපේක්ෂා කරන ශ්රී ලංකා පුරවැසියන් කල්තියාම වීසා ලබා ගත යුතුය. කොළඹ පිහිටි තායිලන්ත තානාපති කාර්යාලය විසින් සෘජුවම වීසා අයදුම්පත් භාර නොගන්නා බැවින්, සියලුම අයදුම්කරුවන් නිල e-Visa ක්රමය හරහා මාර්ගගතව අයදුම් කළ යුතු බව දන්වා ඇත.
කේ.ආර්.ටී.වී. නෙට්වර්ක්
දේශීය පුවත්
Visa Mandatory for Sri Lankans Starting the 15th: Major Announcement by the Thai Government!
The previous 60-day visa exemption scheme for Sri Lankan passport holders has been revoked, and obtaining a visa in advance is now mandatory for traveling to Thailand starting from the 15th of this month.
The previously active policy allowing a 60-day stay without a visa has been completely cancelled, alongside a comprehensive revision of countries eligible for short-term visa-free entry.
Consequently, travelers planning to visit Thailand after the 15th must secure their visas beforehand. As the Thai Embassy in Colombo does not directly process visa applications over the counter, all applicants are required to apply exclusively through the official online e-Visa system.
KRTV Network | Local News

Comments