Skip to main content
Breaking news · In-depth coverage · Analysis
Breaking news · In-depth coverage · Analysis
● Breaking
Latest headlines

நோர்வூட் பிரதேச செயலகத்தில் 2 கோடி ரூபாவிற்கும் அதிகமான அஸ்வெசும நிதி மோசடி: கைது செய்யப்பட்ட பெண் உத்தியோகத்தர்கள் இருவர் விளக்கமறியலில்; 6 ஆசிரியர்கள் பணி இடைநீக்கம்


 நோர்வூட் பிரதேச செயலகத்தில் 2 கோடி ரூபாவிற்கும் அதிகமான அஸ்வெசும நிதி மோசடி: கைது செய்யப்பட்ட பெண் உத்தியோகத்தர்கள் இருவர் விளக்கமறியலில்; 6 ஆசிரியர்கள் பணி இடைநீக்கம்


செய்தியாளர்: பர்ஹானா பதுறுதீன்


நோர்வூட் பிரதேச செயலகப் பிரிவில் அஸ்வெசும நலன்புரி திட்டத்தின் கீழ் 2 கோடி ரூபாவிற்கும் அதிகமான அரச நிதியை மோசடி செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இரண்டு பெண் பிரிவுப் பொறுப்பாளர்களையும் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 22 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க ஹட்டன் நீதவான் பீட்டர் போல் உத்தரவிட்டுள்ளார். ஸ்கைப் தொழில்நுட்பம் ஊடாக சந்தேகநபர்கள் இருவரும் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.


இம்மோசடியில் மோசடி செய்யப்பட்ட தொகையானது இரண்டு கோடி ரூபாவிற்கும் அதிகமாக உயர்வடைந்துள்ளதுடன், இதனுடன் தொடர்புடைய மேலும் 13 சந்தேகநபர்கள் கைது செய்யப்படவுள்ளதாக ஹட்டன் குற்ற விசாரணைப் பிரிவு நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளது. அத்துடன், வழக்கின் பாரதூரத்தன்மையைக் கருத்திற்கொண்டு மேலதிக விசாரணைகள் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடம் (CID) உத்தியோகபூர்வமாக ஒப்படைக்கப்பட்டுள்ளன.


இதனிடையே, நிதி அமைச்சு மற்றும் நுவரெலியா மாவட்ட செயலக அதிகாரிகள் மேற்கொண்ட விசேட விசாரணைகளில், ஹட்டன் வலயக் கல்வி அலுவலகத்தின் கீழ் பணியாற்றும் ஆறு ஆசிரியர்களின் வங்கிக் கணக்குகளுக்கு சந்தேகத்திற்கிடமான முறையில் பெருந்தொகை பணம் வரவு வைக்கப்பட்டுள்ளமை அம்பலமாகியுள்ளது. இதனையடுத்து, நுவரெலியா மாவட்ட செயலாளர் துஷாரி தென்னகோனின் பணிப்புரைக்கமைய குறித்த ஆறு ஆசிரியர்களினதும் சேவைகள் உடனடியாகத் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதுடன், அவர்களின் வங்கிக் கணக்குகள் மீதான பரிசீலனைகளும் முடுக்கிவிடப்பட்டுள்ளன.


மேலும், பிரதான பெண் சந்தேகநபர்களில் ஒருவரின் சகோதரரான நுவரெலியா மாவட்ட செயலக உயர் அதிகாரி ஒருவரின் வங்கிக் கணக்கிலும் சந்தேகத்திற்குரிய வகையில் பெரும் தொகை நிதி வரவு வைக்கப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டதை அடுத்து, அவரது பணியும் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் தொடர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.


கே ஆர் டி வி நெட்வொர்க் - உள்நாட்டுச் செய்தி / நிதி மோசடிச் செய்தி


නෝර්වුඩ් ප්‍රාදේශීය ලේකම් කාර්යාලයේ රුපියල් කෝටි දෙකකට අධික අස්වැසුම මූල්‍ය වංචාව: අත්අඩංගුවට ගත් කාන්තා නිලධාරිනියන් දෙදෙනා රක්ෂිත බන්ධනාගාරයට; ගුරුවරුන් 6 දෙනෙකුගේ වැඩ තහනම්


වාර්තාකරු: ෆර්හානා බදුර්දීන්


නෝර්වුඩ් ප්‍රාදේශීය ලේකම් කාර්යාලයේ අස්වැසුම සුබසාධන ප්‍රතිලාභ මුදල්වලින් රුපියල් කෝටි දෙකකට (රුපියල් මිලියන 20කට) අධික මුදලක් වංචා කිරීම සම්බන්ධයෙන් අත්අඩංගුවට ගත් අංශ භාර කාන්තා නිලධාරිනියන් දෙදෙනෙකු ලබන සැප්තැම්බර් 22 වනදා දක්වා රක්ෂිත බන්ධනාගාරගත කිරීමට හැටන් මහේස්ත්‍රාත් පීටර් පෝල් මහතා නියෝග කර තිබේ. ස්කයිප් තාක්ෂණය ඔස්සේ මෙම සැකකාරියන් දෙදෙනා අධිකරණයට ඉදිරිපත් කළ අවස්ථාවේදී මෙම නියෝගය නිකුත් කෙරිණි.


අදාළ මූල්‍ය වංචාවට සම්බන්ධ තවත් සැකකරුවන් 13 දෙනෙකු අත්අඩංගුවට ගැනීමට නියමිත බවත්, වංචා කරන ලද මුදල රුපියල් කෝටි දෙක ඉක්මවා ඇති බවත් හැටන් අපරාධ විමර්ශන අංශය අධිකරණයට දැනුම් දී ඇත. ඒ අනුව සිද්ධිය පිළිබඳ වැඩිදුර විමර්ශන අපරාධ පරීක්ෂණ දෙපාර්තමේන්තුව (CID) වෙත භාරදී තිබේ.


මේ අතර, මුදල් අමාත්‍යාංශය සහ නුවරඑළිය දිස්ත්‍රික් ලේකම් කාර්යාලය එක්ව සිදුකළ විමර්ශනවලදී, හැටන් කලාප අධ්‍යාපන කාර්යාලය යටතේ සේවය කරන ගුරුවරුන් 6 දෙනෙකුගේ පෞද්ගලික බැංකු ගිණුම් වෙත සැකකටයුතු අයුරින් අස්වැසුම මුදල් බැරවී ඇති බවට අනාවරණය වී ඇත. නුවරඑළිය දිස්ත්‍රික් ලේකම් තුෂාරි තෙන්නකෝන් මහත්මියගේ උපදෙස් මත එම ගුරුවරුන් 6 දෙනාගේ වැඩ තහනම් කර ඇති අතර ඔවුන්ගේ බැංකු ගිණුම් සම්බන්ධයෙන්ද පරීක්ෂණ අරඹා තිබේ.


මීට අමතරව, ප්‍රධාන සැකකාරියකගේ සහෝදරයෙකු වන නුවරඑළිය දිස්ත්‍රික් ලේකම් කාර්යාලයේ ඉහළ තනතුරක් දැරූ නිලධාරියෙකුගේ ගිණුමටද විශාල මුදලක් බැරවී ඇති බව හෙළිවීමත් සමඟ ඔහුගේද වැඩ තහනම් කිරීමට පියවර ගෙන ඇත. අපරාධ පරීක්ෂණ දෙපාර්තමේන්තුව මේ පිළිබඳව පුළුල් පරීක්ෂණ පවත්වයි.


කේ ආර් ටී වී නෙට්වර්ක් - දේශීය පුවත් / මූල්‍ය වංචා පුවත්


Over Rs. 20 Million Aswesuma Fund Embezzlement at Norwood Divisional Secretariat: Two Female Officers Remanded, Six Teachers Interdicted as CID Takes Over Probe


Reporter: Farhana Badurdeen


Two female sectional officers attached to the Norwood Divisional Secretariat arrested in connection with an alleged fraudulent misappropriation exceeding Rs. 20 million (200 lakhs) from the Aswesuma welfare fund have been remanded until 22 September by Hatton Magistrate Peter Paul. The judicial remand was ordered after the two suspects were produced before the magistrate via Skype video conferencing.


Investigating officers attached to the Hatton Crimes Investigation Division submitted to the court that the volume of embezzled state welfare finances has crossed Rs. 20 million, noting that 13 further individuals are slated to be arrested in connection with the fraudulent syndicate. In light of the scope of the offense, ongoing investigations have been formally transferred to the Criminal Investigation Department (CID) for an exhaustive probe.


Simultaneously, preliminary audits conducted by officers from the Ministry of Finance and the Nuwara Eliya District Secretariat revealed that substantial volumes of unauthorized welfare funds were funneled into private bank accounts belonging to six teachers serving under the Hatton Zonal Education Office. On the directives of Nuwara Eliya District Secretary Thushari Thennakoon, the services of all six teachers have been suspended pending comprehensive scrutiny of their bank accounts.


Furthermore, audits revealed that a substantial sum had similarly been deposited into the account belonging to the brother of a primary suspect, who served as a senior officer at the Nuwara Eliya District Secretariat, resulting in his immediate interdiction as well. The Criminal Investigation Department continues extensive inquiries to track all financial conduits.


KR TV Network - Local News / Financial Crime News

Comments