புத்துயிர்க்கும் புது நகரம்: காத்தான்குடியில் உள்ளூராட்சி வாரம் 2026 க்கான விரிவான முன்னேற்பாடுகள் மற்றும் வேலைத்திட்டங்கள்
புத்துயிர்க்கும் புது நகரம்: காத்தான்குடியில் உள்ளூராட்சி வாரம் 2026 க்கான விரிவான முன்னேற்பாடுகள் மற்றும் வேலைத்திட்டங்கள்
வளமான நாடு, அழகான வாழ்வு என்ற தேசிய தொலைநோக்குத் திட்டத்திற்கு அமைவாக, புத்துயிர்க்கும் புது நகரம் எனும் தொனிப்பொருளின் கீழ் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள 2026 ஆம் ஆண்டுக்கான உள்ளூராட்சி வாரத்தை மிகச் சிறப்பாக முன்னெடுப்பதற்கான விசேட கலந்துரையாடல் ஒன்று காத்தான்குடி நகர சபையின் முதல்வர் அறையில் இன்று பிற்பகல் 3.00 மணிக்கு நடைபெற்றது.
பொது நிருவாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளரினால் வெளியிடப்பட்ட உத்தியோகபூர்வ சுற்றறிக்கைக்கு அமைவாக, எதிர்வரும் செப்டெம்பர் 14 ஆம் திகதி முதல் 19 ஆம் திகதி வரையான காலப்பகுதி நாடளாவிய ரீதியில் உள்ளூராட்சி வாரமாகப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இதனை முன்னிட்டு, காத்தான்குடி நகர சபையின் முதல்வர் எஸ்.எச்.எம். அஸ்பர் தலைமையில் நடைபெற்ற இக்கலந்துரையாடலில், நகர சபையுடன் இணைந்து செயற்படும் அரச திணைக்களங்களின் தலைவர்கள், அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள், ஊர் முக்கியஸ்தர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் பலரும் கலந்துகொண்டனர்.
இக்கலந்துரையாடலின் போது உள்ளூராட்சி வாரத்தில் நடைமுறைப்படுத்தப்படவுள்ள விரிவான வேலைத்திட்டங்கள் குறித்து நகர முதல்வரால் முழுமையான விளக்கம் அளிக்கப்பட்டது. இதற்கமைய, காத்தான்குடி எல்லைக்குட்பட்ட மையவாடிகளை முழுமையாகத் துப்புரவு செய்தல், பிரதான வீதிகள் மற்றும் உள்ளக வீதிகளைத் தூய்மைப்படுத்துதல், பருவமழை காலங்களில் வெள்ளப் பெருக்கு ஏற்படாதவாறு மழைநீர் வடிந்தோடும் வடிகான்கள் அனைத்தையும் துப்புரவு செய்து சீரமைத்தல் போன்ற சுற்றுச்சூழல் தூய்மைப்படுத்தல் பணிகள் முன்னுரிமை அடிப்படையில் மேற்கொள்ளப்படவுள்ளன.
அத்துடன், பொதுமக்களின் நல்வாழ்வைக் கருத்திற்கொண்டு மாபெரும் இரத்ததான முகாம்கள், இலவச மருத்துவப் பரிசோதனை நிகழ்வுகள், சமூக அபிவிருத்தி சார்ந்த விழிப்புணர்வுத் திட்டங்கள் என்பனவும் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளன. இளைஞர்கள் மற்றும் மாணவர்களின் ஆளுமை மற்றும் விளையாட்டுத் திறன்களை ஊக்குவிக்கும் வகையில் சைக்கிள் ஓட்டப் போட்டி, மரதன் ஓட்டப் போட்டி மற்றும் பல்வேறு மாணவர் போட்டி நிகழ்வுகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. நிகழ்வில் பங்கேற்ற திணைக்களப் பிரதிநிதிகள் மற்றும் ஊர் பிரமுகர்கள் விடுத்த பல்வேறு ஆக்கபூர்வமான கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளப்பட்டதுடன், ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கும் நகர முதல்வரினால் தெளிவான விளக்கங்கள் வழங்கப்பட்டன.
கே ஆர் டி வி நெட்வொர்க் - உள்நாட்டுச் செய்தி
නැවත පිබිදෙන නව නගරය: 2026 පළාත් පාලන සතිය නිමිත්තෙන් කාත්තන්කුඩියේදී පූර්ණ සාකච්ඡාවක් සහ පුළුල් වැඩසටහන් මාලාවක්
සෞභාග්යමත් දේශයක්, සුන්දර දිවියක් යන ජාතික දැක්මට අනුකූලව නැවත පිබිදෙන නව නගරය යන තේමාව යටතේ ප්රකාශයට පත් කර ඇති 2026 පළාත් පාලන සතිය අති උත්කර්ෂවත් අන්දමින් පැවැත්වීම සඳහා වූ විශේෂ සම්බන්ධීකරණ සාකච්ඡාවක් කාත්තන්කුඩි නගර සභාපති කාර්යාලයේදී අද පස්වරු 3.00 ට සාර්ථකව පැවැත්විණි.
රාජ්ය පරිපාලන, පළාත් සභා හා පළාත් පාලන අමාත්යාංශයේ ලේකම්වරයාගේ චක්රලේඛ නියෝගයන්ට අනුව එළඹෙන සැප්තැම්බර් මස 14 වනදා සිට 19 වනදා දක්වා කාලය දිවයින පුරා පළාත් පාලන සතිය ලෙස ක්රියාත්මක කෙරේ. මේ නිමිත්තෙන් කාත්තන්කුඩි නගර සභාවේ සභාපති එස්.එච්.එම්. අස්ෆර් මහතාගේ ප්රධානත්වයෙන් සංවිධානය කරන ලද මෙම හමුවට නගර සභාව හා එක්ව කටයුතු කරන රාජ්ය ආයතන නිලධාරීන්, රාජ්ය නොවන සංවිධානවල නියෝජිතයින්, ප්රදේශයේ ප්රභූවරුන් සහ මාධ්යවේදීන් විශාල පිරිසක් සහභාගී වූහ.
මෙහිදී පළාත් පාලන සතිය තුළ ක්රියාත්මක කිරීමට නියමිත බහුවිධ සංවර්ධන සහ ප්රජා සත්කාරක ව්යාපෘති පිළිබඳව සභාපතිවරයා විසින් දීර්ඝ විස්තරයක් ඉදිරිපත් කරන ලදී. ඒ අනුව කාත්තන්කුඩි බලප්රදේශයේ පිහිටි සුසාන භූමි ශ්රමදාන මඟින් පිරිසිදු කිරීම, ප්රධාන හා අතුරු මාර්ග පද්ධති පිරිසිදු කිරීම මෙන්ම ඉදිරි වැසි සමයේ ජල ගැලීම් වළක්වා ගැනීම සඳහා වැසි ජලය බැසයන කාණු පද්ධති සම්පූර්ණයෙන්ම ප්රතිසංස්කරණය කර පිරිසිදු කිරීම ප්රමුඛ කාර්යයන් ලෙස ක්රියාත්මක කෙරේ.
මීට අමතරව, මහජන සෞඛ්ය ප්රවර්ධනය වෙනුවෙන් දැවැන්ත ලේ දන්දීමේ කඳවුරු, නොමිලේ වෛද්ය පරීක්ෂණ සායන සහ සමාජ සුබසාධන වැඩසටහන් රැසක් සැලසුම් කර ඇත. තරුණ හා ශිෂ්ය ප්රජාව ඉලක්ක කරගනිමින් පාපැදි ධාවන තරග, මැරතන් තරග සහ පාසල් සිසුන් සඳහා වන විවිධ තරග ඉසව් මෙන්ම අධ්යාපනික වැඩසටහන් ද මෙහිදී ක්රියාත්මක කිරීමට නියමිතයි. සාකච්ඡාවට එක්වූවන් විසින් ඉදිරිපත් කරන ලද කාලෝචිත යෝජනා සහ ඉල්ලීම් සභාපතිවරයා විසින් පිළිගත් අතර මාධ්යවේදීන් නැගූ ප්රශ්නවලටද සවිස්තරාත්මකව කරුණු පැහැදිලි කරන ලදී.
කේ ආර් ටීවී නෙට්වර්ක් - දේශීය පුවත්
Revitalized New City: Full Comprehensive Plan and Stakeholder Conference for Local Government Week 2026 in Kattankudy
In alignment with the national development vision of "A Prosperous Country, A Beautiful Life," an extensive stakeholder consultation was convened today at 3:00 PM at the Chairman's Office of the Kattankudy Urban Council to launch the comprehensive program framework for Local Government Week 2026, held under the theme "Revitalized New City."
Following circular instructions issued by the Secretary to the Ministry of Public Administration, Provincial Councils, and Local Government, the nationwide Local Government Week is designated to be observed from September 14 to September 19. Presided over by the Chairman of the Kattankudy Urban Council, S.H.M. Asfar, the meeting witnessed active participation from heads of state institutions, non-governmental organizations, community leaders, and media representatives collaborating with the local authority.
Chairman Asfar presented a thorough briefing on the wide array of community development and environmental sanitation projects scheduled for the week. Key activities will focus on comprehensive cleanup drives across all public cemeteries, extensive sanitation and maintenance of main thoroughfares and access roads, and the thorough desilting and clearance of stormwater canal networks to ensure uninterrupted drainage during forthcoming monsoon rains.
Furthermore, community welfare initiatives including large-scale blood donation drives, free public medical screening clinics, and diverse social outreach programs have been formally scheduled. To promote youth engagement and healthy lifestyles, sporting events such as cycling races, marathon competitions, and student educational contests will also be conducted. Suggestions submitted by community stakeholders were accommodated into the master action plan, followed by an official media briefing where Chairman Asfar addressed key operational questions.
KR TV Network - Local News
Comments