Skip to main content
Breaking news · In-depth coverage · Analysis
Breaking news · In-depth coverage · Analysis
● Breaking
Latest headlines

இலங்கையின் காலநிலை நடவடிக்கைகள் மற்றும் குளிரூட்டல் கொள்கைகளுக்கு சர்வதேச அரங்கில் பாராட்டு: ஐக்கிய நாடுகள் சபையின் ஒத்துழைப்புடன் 'உலகளாவிய குளிரூட்டல் உறுதிமொழி மாநாடு 2026' வெற்றிகரமாக நிறைவு!





 இலங்கையின் காலநிலை நடவடிக்கைகள் மற்றும் குளிரூட்டல் கொள்கைகளுக்கு சர்வதேச அரங்கில் பாராட்டு: ஐக்கிய நாடுகள் சபையின் ஒத்துழைப்புடன் 'உலகளாவிய குளிரூட்டல் உறுதிமொழி மாநாடு 2026' வெற்றிகரமாக நிறைவு!


உலகளாவிய ரீதியில் அதிகரித்து வரும் தீவிர வெப்ப அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் நோக்கில், ஐக்கிய நாடுகள் சூழல் திட்டம் (UNEP) மற்றும் Cool Coalition அமைப்பு இணைந்து ஏற்பாடு செய்த "உலகளாவிய குளிரூட்டல் உறுதிமொழி மாநாடு 2026" (Global Cooling Pledge Assembly 2026) செப்டம்பர் 15 முதல் 18 வரை வெற்றிகரமாக இடம்பெற்றது. இம்மாநாட்டில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி சுற்றாடல் பிரதி அமைச்சர் அன்டன் ஜயகொடி கலந்துகொண்டார்.


மாநாட்டிற்கு இணையாக இடம்பெற்ற ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்தின் (UNDP) தலைவர்களுடனான இருதரப்புச் சந்திப்பின்போது, உலக வெப்பமயமாதலைக் கட்டுப்படுத்தத் தற்போதைய அரசாங்கம் முன்னெடுத்து வரும் காத்திரமான நடவடிக்கைகள் பாராட்டப்பட்டன.


குறிப்பாக, நாட்டின் மொத்த மின்னுற்பத்தியில் 70% வரை மீள்புதுப்பிக்கத்தக்க மற்றும் நிலைபேறான வலுச்சக்தி மூலம் பூர்த்தி செய்வதற்கான அரசாங்கத்தின் திட்டமிட்ட நகர்வுகள் மற்றும் பசுமை எண்ணக்கருக்கள் விசேட கவனத்தைப் பெற்றன.


காலநிலை நடவடிக்கைகள் மற்றும் எதிர்காலப் பசுமைக் காலநிலைக் கொள்கைகளைச் (Green Climate Policy) செயற்படுத்துவதற்குத் தேவையான நிதி மானியங்கள் (Grants) மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்புகளைத் தாராளமாக வழங்கத் தயார் என UNDP பிரதிநிதிகள் உறுதியளித்தனர்.


வாயுச்சீராக்கி (A/C) பாவனைக்கு மாற்றீடாக, இயற்கையான முறைகளில் கட்டடங்களின் உள்ளக வெப்பநிலையை 23–25°C வரை பேணக்கூடிய ‘செயலூக்கமற்ற குளிரூட்டல்’ (Passive Cooling) தொழில்நுட்பங்களின் முக்கியத்துவம் இம்மாநாட்டில் சுட்டிக்காட்டப்பட்டது.


காபனிரொட்சைட்ட வெளியீடுகளைக் குறைத்தல் மற்றும் உலகளாவிய வெப்பநிலையைக் கட்டுப்படுத்துவதற்குத் துணைபுரியும் ‘தேசிய குளிரூட்டல் கொள்கை’யை (National Cooling Policy) உருவாக்குவதில் இலங்கையின் முன்னுரிமைகள் சர்வதேச அரங்கில் விரிவாக எடுத்துரைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


கே.ஆர்.டி.வி. நெட்வொர்க் | தேசிய / சுற்றுச்சூழல் & பன்னாட்டுச் செய்தி


 ශ්‍රී ලංකාවේ දේශගුණික ක්‍රියාමාර්පත් සහ සිසිලන ප්‍රතිපත්ති ජාත්‍යන්තර පැසසුමට: එක්සත් ජාතීන්ගේ සහයෝගය ඇතිව 'ගෝලීය සිසිලන ප්‍රතිඥා සමුළුව 2026' සාර්ථකව අවසන්!


ගෝලීය වශයෙන් වේගයෙන් ඉහළ යමින් පවතින අන්ත දේශගුණික උණුසුම් තත්ත්වයට මුහුණ දීම සඳහා එක්සත් ජාතීන්ගේ පරිසර වැඩසටහන (UNEP) සහ Cool Coalition සංවිධානය එක්ව සංවිධානය කරන ලද "ගෝලීය සිසිලන ප්‍රතිඥා සමුළුව 2026" (Global Cooling Pledge Assembly 2026) සැප්තැම්බර් 15 සිට 18 දක්වා පැවැත්විණි. මෙම සමුළුව සඳහා පරිසර නියෝජ්‍ය අමාත්‍ය ඇන්ටන් ජයකොඩි මහතා සහභාගී විය.


සමුළුවට සමාන්තරව එක්සත් ජාතීන්ගේ සංවර්ධන වැඩසටහනේ (UNDP) නායකයින් සමඟ පැවති ද්විපාර්ශ්වික සාකච්ඡාවකදී, ගෝලීය උණුසුම පාලනය කිරීම සඳහා වත්මන් රජය ක්‍රියාත්මක කරන ප්‍රශංසනීය ක්‍රියාමාර්පත් UNDP නිලධාරීන්ගේ ඇගයීමට ලක් විය.


විශේෂයෙන්ම, මෙරට මුළු විදුලි උත්පාදනයෙන් 70%ක් පුනර්ජනනීය සහ තිරසාර බලශක්තිය හරහා සපුරා ගැනීමට රජය ගෙන යන වැඩපිළිවෙළ සහ හරිත සංකල්ප ක්‍රියාත්මක කිරීමේ කැපවීම මෙහිදී විශේෂ අවධානයට ලක් විය.


දේශගුණික ක්‍රියාමාර්පත් සහ හරිත දේශගුණික ප්‍රතිපත්ති (Green Climate Policy) සාර්ථකව ක්‍රියාත්මක කිරීම සඳහා අවශ්‍ය මූල්‍ය ආධාර (Grants) සහ තාක්ෂණික සහයෝගීතාව ලබා දීමට ඔවුන් එකඟතාව පළ කළහ.


වායු සමීකරණ (A/C) භාවිතයට විකල්පයක් ලෙස, ගොඩනැගිලිවල අභ්‍යන්තර උෂ්ණත්වය ස්වභාවික ක්‍රම මඟින් 23–25°C දක්වා පවත්වා ගැනීමට උපකාරී වන ‘අක්‍රීය සිසිලන’ (Passive Cooling) තාක්ෂණයන් ජාතික මට්ටමින් භාවිත කිරීමේ වැදගත්කම පෙන්වා දෙන ලදී.


කාබන්ඩයොක්සයිඩ් විමෝචනය අවම කිරීමට සහ ගෝලීය උෂ්ණත්වය පාලනය කිරීමට උපකාරී වන ‘ජාතික සිසිලන ප්‍රතිපත්තියක්’ (National Cooling Policy) සැකසීමේදී ශ්‍රී ලංකාවේ ප්‍රමුඛතා මෙම සමුළුවේදී පුළුල් ලෙස සාකච්ඡා කෙරිණි.


කේ.ආර්.ටී. වි. නෙට්වර්ක්   ජාතික / පරිසර සහ ජාත්‍යන්තර පුවත


Sri Lanka’s Climate Action and Cooling Policies Commended Globally: 'Global Cooling Pledge Assembly 2026' Concludes Successfully with UN Support!


To address escalating global heat stress and expand sustainable cooling solutions internationally, the "Global Cooling Pledge Assembly 2026"—organized jointly by the United Nations Environment Programme (UNEP) and the Cool Coalition—was held from September 15 to 18, 2026. Deputy Minister of Environment Anton Jayakody participated in the high-level summit.


On the sidelines of the assembly, the Deputy Minister engaged in critical bilateral discussions with leaders of the United Nations Development Programme (UNDP).


The current government’s robust initiatives to meet up to 70% of the nation's total electricity generation through renewable and sustainable energy, alongside its commitment to green concepts at the national level, drew high praise from UNDP officials.


Acknowledging past implementation gaps, UNDP representatives pledged generous financial grants and technical cooperation to successfully advance Sri Lanka’s climate actions and green climate policies.


The discussions highlighted the importance of adopting traditional and modern technologies—such as ‘passive cooling’ methods—to maintain indoor building temperatures naturally at 23–25°C as an eco-friendly alternative to air conditioning (A/C).


Sri Lanka’s strategic priorities in formulating a comprehensive ‘National Cooling Policy’ to mitigate carbon dioxide emissions and combat global warming were extensively underscored during the global event.


KRTV Network | National / Environment & International News

Comments