புத்துயிர்க்கும் புது நகரம்: காத்தான்குடியில் உள்ளூராட்சி வாரம் 2026 க்கான விரிவான வேலைத்திட்டங்கள் மற்றும் முன்னேற்பாடுகள்
புத்துயிர்க்கும் புது நகரம்: காத்தான்குடியில் உள்ளூராட்சி வாரம் 2026 க்கான விரிவான வேலைத்திட்டங்கள் மற்றும் முன்னேற்பாடுகள்
வளமான நாடு, அழகான வாழ்வு என்ற தேசிய தொலைநோக்குத் திட்டத்திற்கு அமைவாக, புத்துயிர்க்கும் புது நகரம் எனும் தொனிப்பொருளின் கீழ் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள 2026 ஆம் ஆண்டுக்கான உள்ளூராட்சி வாரத்தை முன்னிட்டு காத்தான்குடி நகர சபையின் முதல்வர் அறையில் விசேட ஆலோசனைக் கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றது.
பொது நிருவாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளரினால் வெளியிடப்பட்ட சுற்றறிக்கைக்கு அமைவாக, எதிர்வரும் செப்டெம்பர் 14 ஆம் திகதி முதல் 19 ஆம் திகதி வரையான காலப்பகுதி நாடளாவிய ரீதியில் உள்ளூராட்சி வாரமாகப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இதனை முன்னிட்டு, காத்தான்குடி நகர சபையின் முதல்வர் எஸ்.எச்.எம். அஸ்பர் தலைமையில் நடைபெற்ற இக்கலந்துரையாடலில் அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள், ஊர் முக்கியஸ்தர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் கலந்துகொண்டனர்.
இக்கலந்துரையாடலில் உள்ளூராட்சி வாரத்தை முன்னிட்டு முன்னெடுக்கப்படவுள்ள விசேட தூய்மைப்படுத்தல் பணிகள் குறித்து விரிவாக விளக்கப்பட்டது. குறிப்பாக, மூன்று வட்டாரங்களில் முழுமையாக அகற்றப்படாமல் தேங்கியுள்ள குப்பைகளை உடனடியாக அகற்றுவதற்கும், ஏனைய அனைத்து வட்டாரங்களிலும் திண்மக்கழிவு சேகரிப்பை முறைப்படுத்துவதற்கும் விசேட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மழைநீர் வடிந்தோடும் வடிகான்கள் மற்றும் மயானங்களைத் துப்புரவு செய்யும் பணிகளும் மேற்கொள்ளப்படவுள்ளன.
மேலும், பசுமை நகர (Green City) திட்டத்தின் கீழ் போதுமான இடவசதியுள்ள வீதியோரங்கள் மற்றும் பொது இடங்களில் மரக்கன்றுகளை நடும் திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதுடன், மர நடுகையை ஊக்குவிக்கும் நோக்கில் பொதுமக்களுக்கு மரக்கன்றுகளுடன் உர வகைகளும் வழங்கி வைக்கப்படவுள்ளன. அத்துடன், மாபெரும் இரத்ததான முகாம், விசேட இரத்தப் பரிசோதனைகள் உள்ளிட்ட இலவச மருத்துவ முகாம்கள், விளையாட்டுப் போட்டிகள் மற்றும் மாணவர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்வுகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இந்நடவடிக்கைகளில் அர்ப்பணிப்புடன் சிறப்பாகப் பங்கெடுக்கும் நபர்களுக்கு விசேட கௌரவிப்பு வழங்கப்படவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
கே ஆர் டி வி நெட்வொர்க் - உள்நாட்டுச் செய்தி
නැවත පිබිදෙන නව නගරය: 2026 පළාත් පාලන සතිය නිමිත්තෙන් කාත්තන්කුඩියේදී පුළුල් වැඩසටහන් මාලාවක්
සෞභාග්යමත් දේශයක්, සුන්දර දිවියක් යන ජාතික සංකල්පයට අනුකූලව නැවත පිබිදෙන නව නගරය තේමාව යටතේ ක්රියාත්මක වන 2026 පළාත් පාලන සතිය වෙනුවෙන් වූ විශේෂ සම්බන්ධීකරණ සාකච්ඡාවක් කාත්තන්කුඩි නගර සභාපති කාර්යාලයේදී පැවැත්විණි.
රාජ්ය පරිපාලන, පළාත් සභා හා පළාත් පාලන අමාත්යාංශයේ චක්රලේඛ නියෝගයන්ට අනුව එළඹෙන සැප්තැම්බර් මස 14 වනදා සිට 19 වනදා දක්වා කාලය දිවයින පුරා පළාත් පාලන සතිය ලෙස නම් කර ඇත. කාත්තන්කුඩි නගර සභාවේ සභාපති එස්.එච්.එම්. අස්ෆර් මහතාගේ ප්රධානත්වයෙන් පැවති මෙම හමුව සඳහා රාජ්ය නිලධාරීන්, සිවිල් සංවිධාන නියෝජිතයින් සහ මාධ්යවේදීහු එක්ව සිටියහ.
මෙහිදී නගරයේ කසළ කළමනාකරණය විධිමත් කිරීම කෙරෙහි විශේෂ අවධානයක් යොමු විය. ඒ අනුව කොට්ඨාස තුනක සම්පූර්ණයෙන්ම ඉවත් කර නොමැති කසළ කඩිනමින් ඉවත් කිරීමටත්, සෙසු කොට්ඨාසවල කසළ එකතු කිරීමේ කටයුතු ක්රමවත් කිරීමටත් සැලසුම් කර ඇත. ඊට අමතරව වැසි ජලාපවහන පද්ධති සහ සුසාන භූමි පිරිසිදු කිරීමද සිදුකෙරේ.
එසේම, හරිත නගර (Green City) සංකල්පය යටතේ ඉඩකඩ පවතින මාර්ග දෙපස සහ පොදු ස්ථානවල පැළ සිටුවීමේ ව්යාපෘති ක්රියාත්මක කෙරෙන අතර, රුක් රෝපණය දිරිමත් කිරීම වෙනුවෙන් ජනතාවට පැළ සමඟ පොහොර වර්ග නොමිලේ ලබාදීමටද තීරණය කර තිබේ. ලේ දන්දීමේ වැඩසටහන්, රුධිර පරීක්ෂණ ඇතුළු නොමිලේ වෛද්ය සායන, ක්රීඩා තරගාවලි සහ ශිෂ්ය තරග ඉසව් රැසක්ද මෙයට සමගාමීව පැවැත්වේ. මෙම ප්රජා සත්කාරක සේවාවන් සඳහා විශිෂ්ට දායකත්වයක් දක්වන පුද්ගලයින් ඇගයීමට ලක් කරමින් විශේෂ උපහාර පිදීමටද නියමිතයි.
කේ ආර් ටීවී නෙට්වර්ක් - දේශීය පුවත්
Revitalized New City: Broad Action Plan and Tree Planting Drive Announced for Local Government Week 2026 in Kattankudy
In alignment with the national development framework of "A Prosperous Country, A Beautiful Life," a stakeholder planning conference was held at the Chairman's Office of the Kattankudy Urban Council to unveil the expanded program agenda for Local Government Week 2026 under the theme "Revitalized New City."
Pursuant to directives issued by the Secretary to the Ministry of Public Administration, Provincial Councils, and Local Government, the official week is scheduled to take place from September 14 to September 19. The consultation was chaired by the Chairman of the Kattankudy Urban Council, S.H.M. Asfar, bringing together public sector officials, community representatives, and media personnel.
The finalized operational plan places strong emphasis on comprehensive waste disposal. Urgent measures will be deployed to clear uncollected garbage across three designated wards, alongside regularized waste collection mechanisms across all remaining sectors. In addition, extensive canal clearance and cemetery maintenance initiatives will be executed.
Under the "Green City" initiative, roadside and public space tree planting campaigns will be launched, with organic fertilizers distributed alongside saplings to encourage community participation. The council has also finalized arrangements for mass blood donation drives, free medical screening camps featuring diagnostic blood testing, athletic marathons, and educational student competitions. Individuals demonstrating outstanding civic service during these community initiatives will be awarded special formal recognition.
KR TV Network - Local News















Comments