Skip to main content
Breaking news · In-depth coverage · Analysis
Breaking news · In-depth coverage · Analysis
● Breaking
Latest headlines

2027 ஆம் ஆண்டு இறுதிக்குள் சர்வதேச நாணய நிதியத்தின் திட்டத்திலிருந்து இலங்கை விலகும்: பிரதி அமைச்சர் டி.பி. சரத் நம்பிக்கை


 2027 ஆம் ஆண்டு இறுதிக்குள் சர்வதேச நாணய நிதியத்தின் திட்டத்திலிருந்து இலங்கை விலகும்: பிரதி அமைச்சர் டி.பி. சரத் நம்பிக்கை


எதிர்வரும் 2027 ஆம் ஆண்டின் இறுதிக்குள் இலங்கை சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) திட்டத்திலிருந்து முழுமையாக விலகிக்கொள்ளும் என வீடமைப்பு, நிர்மாணத்துறை மற்றும் நீர்வழங்கல் பிரதி அமைச்சர் டி.பி. சரத் தெரிவித்துள்ளார். அரச ஊழியர்களின் திறனை அதிகரிக்கும் நோக்கில் தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததிலிருந்து பல கட்டங்களாகச் சம்பள உயர்வுகளை வழங்கி வருவதாகக் குறிப்பிட்ட அவர், எதிர்வரும் நவம்பர் மாதம் சமர்ப்பிக்கப்படவுள்ள வரவுசெலவுத் திட்டத்தின் ஊடாகவும் சுமார் 10,000 ரூபாய் சம்பள உயர்வு வழங்கப்படவுள்ளதாகக் கூறியுள்ளார். முன்னர் 17,000 ரூபாயாக இருந்த அரச சேவையின் குறைந்தபட்ச சம்பளம் அடுத்த ஆண்டில் 40,000 ரூபாயைத் தாண்டும் எனவும், நாட்டின் பொருளாதாரத்தால் தாங்கக்கூடிய உச்சக்கட்ட அளவிலேயே இந்த சம்பளத் திருத்தங்கள் முன்னெடுக்கப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். மேலும், 2027 ஆம் ஆண்டின் முடிவில் சர்வதேச நாணய நிதியத்தின் வேலைத்திட்டத்திலிருந்து விடுபட்ட பின்னர் மக்களுக்கு மேலதிக நிவாரணங்களை வழங்க அரசாங்கம் எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.


கே ஆர் டி வி நெட்வொர்க் - உள்நாட்டுச் செய்தி


2027 වසර අවසන් වන විට ශ්‍රී ලංකාව ජාත්‍යන්තර මූල්‍ය අරමුදලේ වැඩසටහනෙන් ඉවත්වන බව නියෝජ්‍ය අමාත්‍ය ටී.බී. සරත් පවසයි


එළඹෙන 2027 වසර අවසානය වන විට ශ්‍රී ලංකාව ජාත්‍යන්තර මූල්‍ය අරමුදලේ (IMF) වැඩසටහනෙන් සම්පූර්ණයෙන්ම ඉවත්වනු ඇතැයි නිවාස, ඉදිකිරීම් සහ ජල සම්පාදන නියෝජ්‍ය අමාත්‍ය ටී.බී. සරත් මහතා ප්‍රකාශ කර තිබේ. රාජ්‍ය සේවකයින්ගේ කාර්යක්ෂමතාව ඉහළ නැංවීමේ අරමුණින් වත්මන් රජය පත්වූ දා සිට අදියර කිහිපයකින් වැටුප් වැඩිවීම් ලබාදී ඇති බව පෙන්වා දුන් ඒ මහතා, ඉදිරි නොවැම්බර් මාසයේදී ඉදිරිපත් කිරීමට නියමිත අයවැය ලේඛනය මඟින්ද රුපියල් 10,000ක පමණ වැටුප් වැඩිවීමක් ලබාදීමට කටයුතු කරන බව සඳහන් කළේය. මීට පෙර රුපියල් 17,000ක් ලෙස පැවති රාජ්‍ය සේවයේ අවම වැටුප ලබන වසර වන විට රුපියල් 40,000 ඉක්මවා යනු ඇති බවත්, රටේ ආර්ථිකයට ඔරොත්තු දෙන උපරිම මට්ටමින් මෙම වැටුප් සංශෝධන සිදුකරන බවත් හෙතෙම පැවසීය. එමෙන්ම 2027 වසර අවසානයේදී IMF වැඩසටහනෙන් ඉවත්වීමෙන් පසුව ජනතාවට තවදුරටත් පුළුල් සහන ලබාදීමට රජය අපේක්ෂා කරන බවද නියෝජ්‍ය අමාත්‍යවරයා වැඩිදුරටත් පැවසීය.


කේ ආර් ටී වී නෙට්වර්ක් - දේශීය පුවත්


Sri Lanka to Conclude IMF Programme by End of 2027: Deputy Minister T.B. Sarath


Sri Lanka aims to successfully conclude and exit the International Monetary Fund (IMF) programme by the end of 2027, according to Deputy Minister of Housing, Construction and Water Supply T.B. Sarath. Underscoring initiatives to boost public sector productivity, the Deputy Minister affirmed that the incumbent administration has systematically rolled out incremental salary revisions since assuming office, with an additional public sector salary increment of approximately 10,000 rupees slated for introduction in the forthcoming November budget. He highlighted that the minimum entry-level state sector wage, which previously stood at 17,000 rupees, is poised to surpass 40,000 rupees within the coming year. Emphasizing that current fiscal adjustments reflect the maximum sustainable threshold of the national economy, the Deputy Minister added that the government intends to expand socioeconomic relief once the nation fully transitions out of the IMF programme by late 2027.


KR TV Network - Local News

Comments