இலங்கை எக்ஸ்போ 2027 மற்றும் முதலீட்டு உச்சி மாநாட்டில் பங்கேற்குமாறு ரியாத் வர்த்தக சம்மேளனத்திற்கு இலங்கை தூதுவர் அழைப்பு
இலங்கை எக்ஸ்போ 2027 மற்றும் முதலீட்டு உச்சி மாநாட்டில் பங்கேற்குமாறு ரியாத் வர்த்தக சம்மேளனத்திற்கு இலங்கை தூதுவர் அழைப்பு
சவூதி அரேபியாவுக்கான இலங்கைத் தூதுவர் ஒ.எல். அமீர் அஜ்வத், ரியாத் வர்த்தக சம்மேளனத்தின் (Riyadh Chamber) தலைவர் பொறியியலாளர் அப்துல்லா அப்துல்ரஹ்மான் அல்-ஒபைக்கானைச் சந்தித்து இரு நாடுகளின் தனியார் துறைகளுக்கிடையிலான இருதரப்பு ஒத்துழைப்பு வாய்ப்புகள் குறித்து விரிவான கலந்துரையாடலை மேற்கொண்டார்.
இரு நாடுகளின் வர்த்தக சபைகளின் சம்மேளனங்களுக்கு இடையில் நிறுவப்பட்ட சவூதி-இலங்கை வர்த்தக சபை உள்ளிட்ட சமீபத்திய முன்னேற்றங்களை சுட்டிக்காட்டிய தூதுவர், கொழும்பில் 2027 ஜனவரி 14 முதல் 17 வரை நடைபெறவுள்ள "இலங்கை எக்ஸ்போ 2027" (Sri Lanka Expo 2027) சர்வதேச கண்காட்சியில் கலந்துகொள்ளுமாறு ரியாத் வர்த்தக சம்மேளனத்திற்கு உத்தியோகபூர்வ அழைப்பு விடுத்தார். அத்துடன், 2026 ஒக்டோபர் 12 மற்றும் 13 ஆகிய திகதிகளில் கொழும்பு ஷங்ரி-லா ஹோட்டலில் நடைபெறவுள்ள "இலங்கை பொருளாதார மற்றும் முதலீட்டு உச்சி மாநாட்டில்" பங்கேற்று இலங்கையிலுள்ள முதலீட்டு வாய்ப்புகளைப் பயன்படுத்துமாறும் அவர் அழைப்பு விடுத்தார்.
இச்சந்திப்பில் சவூதி-இலங்கை வரலாற்று ரீதியான உறவுகளை நினைவுகூர்ந்த ரியாத் வர்த்தக சம்மேளனத்தின் தலைவர், இலங்கையின் வர்த்தக மற்றும் முதலீட்டு முயற்சிகளுக்கு தமது சம்மேளனம் தொடர்ச்சியாக முழுமையான ஆதரவை வழங்கும் என உறுதியளித்தார். மேலும், இலங்கை எக்ஸ்போ 2027 நிகழ்வுக்கு இணையாக உயர் மட்ட சவூதி வர்த்தக தூதுக்குழுவொன்று இலங்கைக்கு விஜயம் மேற்கொள்வது குறித்தும் இருதரப்பும் ஆலோசித்தன.
கே ஆர் டி வி நெட்வொர்க் - சர்வதேச செய்தி / வர்த்தகம் மற்றும் பொருளாதார விவகாரம்
"ශ්රී ලංකා එක්ස්පෝ 2027" සහ ආයෝජන සමුළුවට එක්වන ලෙස රියාද් වාණිජ මණ්ඩලයට ශ්රී ලංකා තානාපතිගෙන් ආරාධනා
සවුදි අරාබියේ ශ්රී ලංකා තානාපති ඕ.එල්. අමීර් අජ්වඩ් මහතා, රියාද් වාණිජ මණ්ඩලයේ (Riyadh Chamber) සභාපති ඉංජිනේරු අබ්දුල්ලා අබ්දුල්රහ්මාන් අල්-ඔබයිකාන් මහතා හමුවී දෙරටේ පෞද්ගලික අංශයන් අතර සහයෝගීතාව පුළුල් කරගැනීම සම්බන්ධයෙන් සාකච්ඡා පවත්වා තිබේ.
දෙරට අතර ස්ථාපිත කර ඇති සවුදි-ශ්රී ලංකා ව්යාපාරික කවුන්සිලය ඇතුළු වෙළෙඳ සබඳතාවල වර්ධනයන් පිළිබඳව මෙහිදී කරුණු පැහැදිලි කළ තානාපතිවරයා, 2027 ජනවාරි 14 සිට 17 දක්වා කොළඹදී පැවැත්වීමට නියමිත "ශ්රී ලංකා එක්ස්පෝ 2027" (Sri Lanka Expo 2027) ප්රදර්ශනය සඳහා සහභාගී වන ලෙස රියාද් වාණිජ මණ්ඩලයේ සාමාජිකයින්ට නිල වශයෙන් ආරාධනා කළේය. එමෙන්ම 2026 ඔක්තෝබර් 12 සහ 13 යන දිනවල කොළඹ ෂැංග්රි-ලා හෝටලයේදී පැවැත්වෙන "ශ්රී ලංකා ආර්ථික හා ආයෝජන සමුළුව" සඳහා එක්වී මෙරට පවතින ආයෝජන අවස්ථා පිළිබඳව සොයා බලන ලෙසද තානාපතිවරයා ඉල්ලා සිටියේය.
මෙහිදී අදහස් දැක්වූ රියාද් වාණිජ මණ්ඩලයේ සභාපතිවරයා, සවුදි-ලංකා ඓතිහාසික මිත්රත්වය සිහිපත් කරමින් ශ්රී ලංකාවේ වෙළෙඳ සහ ආයෝජන ප්රවර්ධන කටයුතු වෙනුවෙන් රියාද් වාණිජ මණ්ඩලයේ අඛණ්ඩ සහයෝගය ලබාදෙන බවට යළි තහවුරු කළ අතර, එක්ස්පෝ 2027 ප්රදර්ශනයට සමගාමීව සවුදි ඉහළ පෙළේ ව්යාපාරික නියෝජිත පිරිසක් මෙරටට එවීමටද දෙපාර්ශ්වය අතර එකඟතාව පළවිය.
කේ ආර් ටී වී නෙට්වර්ක් - ජාත්යන්තර පුවත් / වෙළෙඳ සහ ආර්ථික පුවත්
Sri Lanka Ambassador Invites Riyadh Chamber to Participate in "Sri Lanka Expo 2027" and Investment Summit
Ambassador of Sri Lanka to Saudi Arabia, O.L. Ameer Ajwad, met with Eng. Abdullah Abdulrahman Al-Obaikan, Chairman of the Riyadh Chamber, to discuss bilateral collaboration between the private sectors of Sri Lanka and the Kingdom of Saudi Arabia.
Briefing the Chairman on institutional advancements including the establishment of the Saudi–Sri Lanka Business Council between the Federation of Saudi Chambers and FCCISL, the Ambassador formally invited the leadership and members of the Riyadh Chamber to visit Sri Lanka and participate in "Sri Lanka Expo 2027," scheduled for 14–17 January 2027 in Colombo. Furthermore, the Ambassador extended an invitation to potential Saudi investors to attend the "Sri Lanka Economic and Investment Summit," scheduled for 12–13 October 2026 at Shangri-La Colombo.
Reaffirming the historic relations between both nations, Eng. Al-Obaikan reiterated the Riyadh Chamber’s commitment to facilitating trade delegations, business-to-business engagements, and investment initiatives. Both parties also reviewed the proposed itinerary for a high-level Saudi–Sri Lanka Business Council delegation to visit Colombo to coincide with the Expo 2027 event.
KR TV Network - International News / Trade and Economic Diplomacy




Comments