Skip to main content
Breaking news · In-depth coverage · Analysis
Breaking news · In-depth coverage · Analysis
● Breaking
Latest headlines

கொழும்பில் நடைபெறவுள்ள எக்ஸ்போ ஸ்ரீலங்கா 2027 சர்வதேச கண்காட்சியில் பங்கேற்குமாறு சவூதி முதலீட்டாளர்களுக்கு இலங்கை தூதரகம் உத்தியோகபூர்வ அழைப்பு



 கொழும்பில் நடைபெறவுள்ள எக்ஸ்போ ஸ்ரீலங்கா 2027 சர்வதேச கண்காட்சியில் பங்கேற்குமாறு சவூதி முதலீட்டாளர்களுக்கு இலங்கை தூதரகம் உத்தியோகபூர்வ அழைப்பு


இலங்கையின் வர்த்தகம், நேரடி முதலீடுகள் மற்றும் கலாசார பன்முகத்தன்மையை உலகளவில் வெளிப்படுத்தும் நோக்கிலான "எக்ஸ்போ ஸ்ரீலங்கா 2027" (Expo Sri Lanka 2027) சர்வதேச வர்த்தகக் கண்காட்சியில் பங்கேற்குமாறு சவூதி அரேபிய நிறுவனங்களுக்கும் முதலீட்டாளர்களுக்கும் சவூதி அரேபியாவின் ரியாத் நகரிலுள்ள இலங்கைத் தூதரகம் உத்தியோகபூர்வ அழைப்பு விடுத்துள்ளது.


இம்மாபெரும் சர்வதேச கண்காட்சியானது எதிர்வரும் 2027 ஆம் ஆண்டு ஜனவரி 14 முதல் 17 வரை கொழும்பிலுள்ள பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் (BMICH) நடைபெறவுள்ளது. இதில் முன்னணி இலங்கை நிறுவனங்களின் 750 இற்கும் மேற்பட்ட வர்த்தக காட்சியறைகள் அமைக்கப்படவுள்ளன. தொழில்துறை, விவசாயத்துறை, ஏற்றுமதி சேவைகள் மற்றும் நிலைபேறான பசுமை புத்தாக்கம், தொழில்நுட்பம் போன்ற கருப்பொருள் கூடங்கள் (Thematic Pavilions) எனப் பல்வேறு துறைகள் இதில் உள்ளடக்கப்பட்டுள்ளன.


இக்கண்காட்சியில் பங்கேற்கும் சர்வதேச முதலீட்டாளர்களுக்கு இலங்கை ஏற்றுமதியாளர்களுடனான நேரடி வணிக சந்திப்புகள் (B2B Meetings), முதலீட்டு மாநாடுகள் மற்றும் கலாசார நிகழ்வுகளில் பங்கேற்கும் வாய்ப்புகள் வழங்கப்படவுள்ளன. அத்துடன் தெரிவுசெய்யப்படும் முக்கிய முதலீட்டாளர்களுக்கு நட்சத்திர ஹோட்டல் தங்குமிடம் உள்ளிட்ட விசேட சலுகைகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


கே ஆர் டி வி நெட்வொர்க் - சர்வதேச செய்தி / வர்த்தகம் மற்றும் பொருளாதார முதலீட்டுச் செய்தி


කොළඹදී පැවැත්වෙන "එක්ස්පෝ ශ්‍රී ලංකා 2027" ප්‍රදර්ශනයට එක්වන ලෙස සවුදි ආයෝජකයින්ට ශ්‍රී ලංකා තානාපති කාර්යාලයෙන් නිල ආරාධනා


ශ්‍රී ලංකාවේ වෙළෙඳ, ආයෝජන සහ සංස්කෘතික විවිධත්වයේ නව දොරටු විවර කරන "එක්ස්පෝ ශ්‍රී ලංකා 2027" (Expo Sri Lanka 2027) ජාත්‍යන්තර ප්‍රදර්ශනය සඳහා සහභාගී වන ලෙස සවුදි අරාබියේ සමාගම් සහ ආයෝජකයින් වෙත සවුදි අරාබියේ රියාද් නුවර පිහිටි ශ්‍රී ලංකා තානාපති කාර්යාලය නිල වශයෙන් ආරාධනා කර තිබේ.


මෙම දැවැන්ත ජාත්‍යන්තර වෙළෙඳ ප්‍රදර්ශනය එළඹෙන 2027 ජනවාරි මස 14 වන දින සිට 17 වන දින දක්වා කොළඹ බණ්ඩාරනායක අනුස්මරණ ජාත්‍යන්තර සම්මන්ත්‍රණ ශාලා (BMICH) පරිශ්‍රයේදී පැවැත්වීමට නියමිතය. මෙරට ප්‍රමුඛ පෙළේ සමාගම් නියෝජනය කරන ප්‍රදර්ශන කුටි 750කට අධික සංඛ්‍යාවක් මීට ඇතුළත් වන අතර කාර්මික, කෘෂිකාර්මික, තොරතුරු තාක්ෂණ හා සේවා අපනයන ක්ෂේත්‍ර රැසක නිෂ්පාදන මෙහිදී ප්‍රදර්ශනය කෙරේ.


මෙහිදී සහභාගී වන ජාත්‍යන්තර ගැනුම්කරුවන් සහ ආයෝජකයින් සඳහා ශ්‍රී ලාංකික අපනයනකරුවන් සමඟ සෘජු ව්‍යාපාරික හමුවීම් (B2B), ආයෝජන සංසද සහ සංස්කෘතික අංගයන්ට එක්වීමේ අවස්ථාව හිමිවේ. තවද තෝරාගත් ප්‍රමුඛ පෙළේ විදේශීය ගැනුම්කරුවන් සඳහා සුඛෝපභෝගී හෝටල් නවාතැන් පහසුකම් ඇතුළු විශේෂ වරප්‍රසාද රැසක් සලසා දීමටද සංවිධායක මණ්ඩලය පියවර ගෙන ඇත.


කේ ආර් ටී වී නෙට්වර්ක් - ජාත්‍යන්තර පුවත් / වෙළෙඳ හා ආර්ථික ආයෝජන පුවත්


Sri Lanka Embassy in Riyadh Invites Saudi Companies and Investors to Expo Sri Lanka 2027 in Colombo


The Embassy of the Democratic Socialist Republic of Sri Lanka in the Kingdom of Saudi Arabia has formally invited Saudi corporate entities, prospective buyers, and investors to participate in "Expo Sri Lanka 2027," positioned as a premier strategic gateway to explore international trade, capital investments, and cultural diversity.


The multi-sectoral international exhibition is scheduled to take place from 14 to 17 January 2027 at the Bandaranaike Memorial International Conference Hall (BMICH) in Colombo, Sri Lanka. Featuring more than 750 exhibitors from leading Sri Lankan enterprises, the exposition will span industrial manufacturing, agricultural and processed food production, ICT and export services, alongside dedicated thematic pavilions focusing on sustainability, technology, and global partnerships.


International buyers and investors participating in the summit will gain access to pre-arranged B2B matching sessions with leading Sri Lankan exporters, bilateral investment forums, and sectorial conferences. Furthermore, exclusive benefits including complimentary star-class hotel accommodations have been arranged for selected international delegates subject to evaluation terms.


KR TV Network - International News / Trade and Investment Affairs

Comments