Skip to main content
Breaking news · In-depth coverage · Analysis
Breaking news · In-depth coverage · Analysis
● Breaking
Latest headlines

கிழக்குப் புற்றுநோயாளர் பராமரிப்பு நிலையத்தின் எதிர்கால மக்கள் நலத் திட்டங்களை மக்கள் மயப்படுத்தும் நோக்கில் மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர்களுடன் விசேட சந்திப்பு!

 








கிழக்குப் புற்றுநோயாளர் பராமரிப்பு நிலையத்தின் எதிர்கால மக்கள் நலத் திட்டங்களை மக்கள் மயப்படுத்தும் நோக்கில் மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர்களுடன் விசேட சந்திப்பு!


கிழக்குப் புற்றுநோயாளர் பராமரிப்பு நிலையத்தின் எதிர்கால மக்கள் நலத் திட்டங்களை ஊடகங்கள் வாயிலாகப் பொதுமக்களிடம் கொண்டு சேர்க்கும் நோக்கில், மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களைச் சேர்ந்த ஊடகவியலாளர்களுடனான விசேட சந்திப்பு நேற்று (20) குறித்த நிலையக் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றுள்ளது.


சந்திப்பின் ஆரம்பத்தில் மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களைச் சேர்ந்த 55 ஊடகவியலாளர்கள் நிலைய வளாகத்தைப் பார்வையிட்டதுடன், அங்கு சிகிச்சை பெறும் நோயாளர்களின் நிலவரங்களையும் அவதானித்தனர்.


இந்நிகழ்வில் கிழக்குப் புற்றுநோயாளர் பராமரிப்பு நிலையத்தின் இயக்குனர் சபை உறுப்பினரும் ஓய்வுநிலை அதிபருமான எம். ஜலால்தீன் வரவேற்புரையையும், தாதிய உத்தியோகத்தர் எஸ். றிஸ்ரான் பராமரிப்புப் பணிகள் குறித்த புள்ளிவிபரங்களையும் சமர்ப்பித்தனர்.


மேலும், நிலையத்தின் அறிமுக உரையைப் பொறியியலாளர் எஸ்.எல். கால்டனும், திட்ட விளக்கவுரையைத் திட்ட ஆலோசகர் யு. முஜிமுரகுமானும், தேசிய தொழில் தகைமைச் சான்றிதழ் (NVQ) தொடர்பான விளக்கவுரையை இலங்கை தொழிற் கல்வி பயிற்சி அதிகார சபையின் பிரதிப் பணிப்பாளர் வி. கனகசுந்தரமும் வழங்கினர். அமைப்பின் தவிசாளர் அல்ஹாஜ் எஸ்.எல்.எம். பெளஸீம் விசேட உரையாற்றினார்.


எதிர்வரும் முதலாம் திகதியன்று புதிய கற்கை நெறிக்கான நேர்முகப் பரீட்சையும், அது தொடர்பான தெளிவூட்டல் கருத்தரங்கும் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்நிகழ்வில் நிலைய ஊழியர்கள் பலரும் கலந்துகொண்டனர்.


கே.ஆர்.டி.வி. நெட்வொர்க் | தேசிய / சமூக நலம் & ஊடகச் செய்தி


 නැගෙනහිර පිළිකා රෝගීන්ගේ සුභසාධන මධ්‍යස්ථානයේ අනාගත ජනතා හිතවාදී වැඩසටහන් ජනගත කිරීමේ අරමුණින් මඩකලපුව සහ අම්පාර දිස්ත්‍රික් මාධ්‍යවේදීන් හමුවෙයි!

නැගෙනහිර පිළිකා රෝගීන්ගේ සුභසාධන මධ්‍යස්ථානයේ අනාගත ජනතා සුභසාධන ව්‍යාපෘති මාධ්‍ය හරහා පුළුල් ලෙස ජනතාව වෙත ගෙන යාමේ අරමුණින්, මඩකලපුව සහ අම්පාර දිස්ත්‍රික්කවල මාධ්‍යවේදීන් සමඟ පැවති විශේෂ හමුවක් ඊයේ (20) දින අදාළ මධ්‍යස්ථාන ශ්‍රවණාගාරයේදී පවත්වන ලදී.


මෙම හමුවේ ආරම්භයක් ලෙස මඩකලපුව සහ අම්පාර දිස්ත්‍රික්ක නියෝජනය කරමින් මාධ්‍යවේදීන් 55 දෙනෙකුගෙන් යුත් කණ්ඩායමක් මධ්‍යස්ථාන පරිශ්‍රය සහ රෝගීන් නිරීක්ෂණය කිරීමට එක් වූහ.


මෙහිදී නැගෙනහිර පිළිකා රෝගීන්ගේ සුභසාධන මධ්‍යස්ථානයේ අධ්‍යක්ෂ මණ්ඩල සාමාජික හා විශ්‍රාමික විදුහල්පති එම්. ජලාල්දීන් මහතා විසින් வரவேற்பු කතාව සිදු කරන ලද අතර, හෙද නිලධාරී එස්. රිස්තාන් මහතා විසින් සේවා සැපයීමේ සංඛ්‍යාලේඛන ඉදිරිපත් කරන ලදී.


තවද, මධ්‍යස්ථානය පිළිබඳ හැඳින්වීම ඉංජිනේරු එස්.එල්. කාල්ටන් මහතා විසින්ද, ව්‍යාපෘති පැහැදිලි කිරීම් උපදේශක යੂ. මුජිබුර් රහ්මාන් මහතා විසින්ද, ජාතික වෘත්තීය සුදුසුකොටස් (NVQ) පිළිබඳව ශ්‍රී ලංකා වෘත්තීය පුහුණු අධිකාරියේ නියෝජ්‍ය අධ්‍යක්ෂ වී. කනකසුන්දරම් මහතා විසින්ද, විශේෂ දේශනය මධ්‍යස්ථානයේ සභාපති අල්හාජ් එස්.එල්.එම්. නෞෂාඩ් (පවුසි) මහතා විසින්ද පවත්වන ලදී.


එළඹෙන 01 වන දින නව පාඨමාලා සඳහා වන සම්මුඛ පරීක්ෂණ සහ දැනුවත් කිරීමේ සම්මන්ත්‍රණයක් පැවැත්වීමට නියමිත බව මෙහිදී සඳහන් කෙරිණි. ආයතනයේ කාර්ය මණ්ඩලය ඇතුළු පිරිසක් මෙම අවස්ථාවට සහභාගී වූහ.


කේ.ආර්.ටී. වි. නෙට්වර්ක්   ජාතික / සමාජ සුභසාධන සහ මාධ්‍ය පුවත්


Special Meeting Held with Batticaloa and Kalmunai Journalists to Publicize Future Welfare Initiatives of the Eastern Cancer Patients Care Center!

Aiming to propagate the future community welfare initiatives of the Eastern Cancer Patients Care Center through media channels, a special consultative meeting with journalists from the Batticaloa and Ampara districts was held yesterday (20) at the center's auditorium.


At the outset of the gathering, 55 journalists representing the Batticaloa and Ampara districts toured the care center premises and observed patient conditions.


The welcoming remarks were delivered by Mr. M. Jalaldeen, Board Member of the Center and retired principal, followed by nursing officer S. Risthan presenting institutional care statistics.


Additionally, Engineer S.L. Calton introduced the center's overview, Project Consultant U. Mujibur Rahman presented project insights, and Mr. V. Kanakasundaram, Deputy Director of the Tertiary and Vocational Education Commission / National Apprentice and Industrial Training Authority (VTA representation), explained National Vocational Qualifications (NVQ). The Chairman of the organization, Alhaj S.L.M. Fawzy, delivered the special address.


It was highlighted that interviews and an orientation seminar for the newly introduced courses will take place on the upcoming 1st. Staff members of the organization were also in attendance.


KRTV Network | National / Social Welfare & Media News

Comments