Skip to main content
Breaking news · In-depth coverage · Analysis
Breaking news · In-depth coverage · Analysis
● Breaking
Latest headlines

ஊழல் மோசடிகளுக்கு எதிரான நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தி, உத்தேச 22ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தை உடனடியாக நிறைவேற்றுவோம்: புலத்சிங்ஹல பேரணியில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க திட்டவட்டம்

 


ஊழல் மோசடிகளுக்கு எதிரான நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தி, உத்தேச 22ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தை உடனடியாக நிறைவேற்றுவோம்: புலத்சிங்ஹல பேரணியில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க திட்டவட்டம்


களுத்துறை மாவட்டம் புலத்சிங்ஹல பகுதியில் நடைபெற்ற மாபெரும் மக்கள் பேரணியில் உரையாற்றிய ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க பல முக்கிய விடயங்களை வெளிப்படுத்தியுள்ளார். உத்தேச 22ஆவது அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பில் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு கிடைத்தவுடன், எவ்வித தாமதமுமின்றி அதனைப் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து நிறைவேற்ற அரசாங்கம் உடனடி நடவடிக்கை எடுக்கும் என அவர் தெரிவித்தார். நாட்டில் இடம்பெற்றுள்ள மோசடிகள் குறித்து மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகளில் பெருமளவிலான முறைகேடுகள் அம்பலமாகி வருவதாகவும், அனைத்தின் மீதும் சட்டப்படி முழுமையாக நடவடிக்கை எடுக்கப்பட்டால் பொறுப்பானவர்களில் எவரும் மிஞ்ச மாட்டார்கள் என்றும் அவர் சுட்டிக்காட்டினார். மேலும், நாட்டின் பொருளாதாரத்தையும் நிர்வாகத்தையும் சீரழித்த கறுப்பு ராஜ்யத்தை அரசாங்கம் வேரோடு அகற்றும் என்றும், அதனால் பயன் அடைந்தவர்களும் அதன் பாதுகாப்பில் இருந்தவர்களும் தற்போது அச்சமடைந்து தூதரகங்களை நோக்கியும் சர்வதேச அமைப்புகளுக்கும் ஓடி வருவதாகவும் குறிப்பிட்ட ஜனாதிபதி, மக்களின் நலனைக் கருத்திற்கொண்டு எடுக்கப்படும் எந்தவொரு முடிவிலிருந்தும் அரசாங்கம் ஒருபோதும் பின்வாங்காது என ஆணித்தரமாக வலியுறுத்தினார்.


கே ஆர் டி வி நெட்வொர்க் - உள்நாட்டுச் செய்தி / அரசியல் செய்தி


දූෂණ විමර්ශන දැඩි කරමින් 22 වන සංශෝධනය වහාම සම්මත කරන බවත් කිසිදු තීරණයක් ආපසු නොගන්නා බවත් බුලත්සිංහල රැලියේදී ජනාධිපති අනුර කුමාර දිසානායක අවධාරණය කරයි


කළුතර දිස්ත්‍රික්කයේ බුලත්සිංහල ප්‍රදේශයේ පැවති දැවැන්ත ජන හමුව අමතමින් ජනාධිපති අනුර කුමාර දිසානායක මහතා ප්‍රධාන කරුණු කිහිපයක් පිළිබඳව අදහස් පළ කළේය. යෝජිත 22 වන ආණ්ඩුක්‍රම ව්‍යවස්ථා සංශෝධනය සම්බන්ධයෙන් ශ්‍රේෂ්ඨාධිකරණ තීන්දුව ලැබුණු වහාම එය කිසිදු ප්‍රමාදයකින් තොරව පාර්ලිමේන්තුවට ඉදිරිපත් කර සම්මත කරගැනීමට රජය කටයුතු කරන බව හෙතෙම ප්‍රකාශ කළේය. රට තුළ සිදුවූ අක්‍රමිකතා පිළිබඳව සිදුකරන විමර්ශනවලදී අතිවිශාල දූෂණ ප්‍රමාණයක් අනාවරණය වෙමින් පවතින බවත්, එම සියලු කරුණු ඔස්සේ නීතිය ක්‍රියාත්මක කළහොත් වගකිවයුත්තන්ගෙන් කිසිවෙකු හෝ ඉතිරි නොවනු ඇති බවත් ජනාධිපතිවරයා පෙන්වා දුන්නේය. මෙතෙක් කල් රට වෙළාගෙන තිබූ අඳුරු කළු රාජ්‍යය සම්පූර්ණයෙන්ම මුලිනුපුටා දැමීමට රජය පියවර ගන්නා බවත්, එමගින් වරප්‍රසාද ලැබූ පාර්ශවයන් මේ වන විට බියට පත්ව තානාපති කාර්යාල හා ජාත්‍යන්තර සංවිධාන වෙත ලිපි යොමු කරමින් සිටින බවත් සඳහන් කළ ඔහු, ජනතා සුබසිද්ධිය වෙනුවෙන් ගත් කිසිදු තීරණයක් කිසිසේත්ම ආපසු නොහරවන බව අවධාරණය කළේය.


කේ ආර් ටී වී නෙට්වර්ක් - දේශීය පුවත් / දේශපාලන පුවත්


President Anura Kumara Dissanayake Outlines Key Stances at Bulathsinhala Rally: Pledges Immediate Enactment of 22A and Uprooting of "Black State"


Addressing an extensive public gathering in Bulathsinhala within the Kalutara district, President Anura Kumara Dissanayake outlined several core governance determinations. Regarding the proposed 22nd Amendment to the Constitution, the President affirmed that the administration will table and pass the legislative draft in Parliament immediately upon receiving the formal determination from the Supreme Court. Touching upon ongoing anti-corruption probes, he stated that investigations continue to uncover massive wrongdoing, noting that if full accountability is legally pursued across all cases, hardly anyone among those responsible would remain untouched. He pledged to completely uproot the entrenched corrupt "black state," observing that those previously shielded by it are succumbing to panic and petitioning foreign missions. Emphasizing administrative resolve, the President maintained that the executive will make no policy reversals on decisions systematically executed in the public interest.


KR TV Network - Local News / Political News

Comments