22ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்ட மூல மனு பரிசீலிக்கப்படாததற்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனு
22ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்ட மூல மனு பரிசீலிக்கப்படாததற்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனு
அரசாங்கத்தினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள அரசியலமைப்பின் 22ஆவது திருத்தச் சட்ட மூலத்தை சவாலுக்கு உட்படுத்தி தாம் தாக்கல் செய்த மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படாமையினால் தமது அடிப்படை மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதாகத் தீர்ப்பளிக்குமாறு கோரி உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
தேசிய அமைப்புகளின் ஒன்றியத்தின் அழைப்பாளர் துலார குணதிலக்க மற்றும் ஓய்வுபெற்ற விமானப்படை அதிகாரியான சாந்த ஜயதிலக்க ஆகியோரால் உயர் நீதிமன்றத்தில் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அரசாங்கத்தினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட 22ஆவது திருத்தச் சட்ட மூலத்திற்கு எதிராக துலார குணதிலக்கவினால் உயர் நீதிமன்றத்தில் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்ட போதிலும், அந்த மனு விசாரணைக்காக திறந்த நீதிமன்றத்தில் அழைக்கப்படவே இல்லை என மனுதாரர்கள் தெரிவித்துள்ளனர்.
இதன் ஊடாக தமது அடிப்படை மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதாகத் தீர்ப்பளிக்குமாறும், இந்த மனுவை விசாரித்து இறுதித் தீர்ப்பு வழங்கப்படும் வரை 22ஆவது திருத்தச் சட்ட மூலம் தொடர்பான உயர் நீதிமன்றத்தின் தீர்மானத்தை சபாநாயகருக்கு அறிவிப்பதைத் தடுக்கும் இடைக்கால உத்தரவொன்றைப் பிறப்பிக்குமாறும் மனுதாரர்கள் உயர் நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கே ஆர் டி வி நெட்வொர்க் - உள்நாட்டுச் செய்தி
22 වන ආණ්ඩුක්රම ව්යවස්ථා සංශෝධන පනත් කෙටුම්පතට එරෙහි පෙත්සම නොසලකා හැරීමට එරෙහිව ශ්රේෂ්ඨාධිකරණයට මූලික අයිතිවාසිකම් පෙත්සමක්
රජය විසින් පාර්ලිමේන්තුවට ඉදිරිපත් කර ඇති 22 වන ආණ්ඩුක්රම ව්යවස්ථා සංශෝධන පනත් කෙටුම්පත අභියෝගයට ලක් කරමින් තමන් ඉදිරිපත් කළ පෙත්සම විභාගයට නොගැනීමෙන් සිය මූලික අයිතිවාසිකම් උල්ලංඝනය වී ඇති බවට තීන්දුවක් ලබාදෙන ලෙස ඉල්ලා ශ්රේෂ්ඨාධිකරණය හමුවේ මූලික අයිතිවාසිකම් පෙත්සමක් ගොනු කර තිබේ.
ජාතික සංවිධාන එකමුතුවේ කැඳවුම්කරු දුලාර ගුණතිලක සහ විශ්රාමික ගුවන් හමුදා නිලධාරී ශාන්ත ජයතිලක යන මහත්වරුන් විසින් ශ්රේෂ්ඨාධිකරණය හමුවේ මෙම පෙත්සම ඉදිරිපත් කර ඇත.
පාර්ලිමේන්තුවට ඉදිරිපත් කළ 22 වන ආණ්ඩුක්රම ව්යවස්ථා සංශෝධන පනත් කෙටුම්පත අභියෝගයට ලක් කරමින් දුලාර ගුණතිලක මහතා විසින් ශ්රේෂ්ඨාධිකරණය හමුවේ පෙත්සමක් ගොනු කර තිබුණද, එම පෙත්සම විවෘත අධිකරණය හමුවේ කැඳවීමක් සිදුනොකළ බව පෙත්සම්කරුවෝ පෙන්වා දෙති.
මේ හරහා සිය මූලික මිනිස් අයිතිවාසිකම් උල්ලංඝනය වී ඇති බවට ප්රකාශ කරන ලෙසත්, මෙම පෙත්සම විභාග කර අවසන් තීන්දුව ප්රකාශයට පත් කරන තෙක් 22 වන ආණ්ඩුක්රම ව්යවස්ථා සංශෝධන පනත් කෙටුම්පත සම්බන්ධ ශ්රේෂ්ඨාධිකරණයේ තීරණය කථානායකවරයා වෙත දැනුම්දීම වළක්වාලන අතුරු නියෝගයක් නිකුත් කරන ලෙසත් පෙත්සම්කරුවන් ශ්රේෂ්ඨාධිකරණයෙන් වැඩිදුරටත් ඉල්ලා ඇත.
කේ ආර් ටීවී නෙට්වර්ක් - දේශීය පුවත්
Fundamental Rights Petition Filed in Supreme Court Over Unheard Challenge to 22nd Amendment Bill
A Fundamental Rights petition has been filed before the Supreme Court seeking a declaration that the fundamental rights of the petitioners were violated due to the failure to take up for hearing a petition previously filed challenging the government's 22nd Constitutional Amendment Bill.
The petition was filed by Dulara Gunathilake, Convener of the Collective of National Organizations, and retired Air Force officer Shantha Jayathilake.
The petitioners stated that although a petition challenging the proposed 22nd Amendment Bill presented to Parliament was duly filed by petitioner Dulara Gunathilake, the matter was never called for consideration in open court.
Asserting that this procedural lapse violated their fundamental human rights, the petitioners have requested the Supreme Court to issue an interim order preventing the communication of the Supreme Court's determination on the 22nd Amendment Bill to the Speaker of Parliament until the hearing and final determination of this petition.
KR TV Network - Local News

Comments