Skip to main content
Breaking news · In-depth coverage · Analysis
Breaking news · In-depth coverage · Analysis
● Breaking
Latest headlines

மட்டக்களப்பு சந்திவெளியில் பேருந்துடன் மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதி விபத்து: கிரான்குளத்தைச் சேர்ந்த 22 வயது இளைஞன் பரிதாபமாக உயிரிழப்பு



 மட்டக்களப்பு சந்திவெளியில் பேருந்துடன் மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதி விபத்து: கிரான்குளத்தைச் சேர்ந்த 22 வயது இளைஞன் பரிதாபமாக உயிரிழப்பு


மட்டக்களப்பு - சந்திவெளிப் பகுதியில் இன்று (09) அதிகாலை இடம்பெற்ற கோர விபத்தில் கிரான்குளத்தைச் சேர்ந்த 22 வயதான இளைஞர் ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். பாசிக்குடாவிலுள்ள சுற்றுலா விடுதி ஒன்றில் கடமையாற்றி வந்த குறித்த இளைஞன், தனது இரவுப் பணிகளை முடித்துக்கொண்டு தனது சொந்தக் கிராமத்திலுள்ள ஆலயம் ஒன்றின் கும்பாபிஷேக நிகழ்வில் கலந்துகொள்வதற்காக மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிக் கொண்டிருந்தபோதே இவ்விபத்து நேர்ந்துள்ளது. மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞன் சந்திவெளி பகுதியை அடைந்தபோது, எதிரே வந்த பேருந்து ஒன்றுடன் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளதுடன், விபத்து தொடர்பாக சந்திவெளிப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.


கே ஆர் டி வி நெட்வொர்க் - உள்நாட்டுச் செய்தி / விபத்துச் செய்தி


මඩකලපුව සන්දිවේලි ප්‍රදේශයේදී බස් රථයක යතුරුපැදියක් මුහුණට මුහුණ ගැටී අනතුරක්: ක්‍රාන්කුලම් ප්‍රදේශයේ 22 හැවිරිදි තරුණයෙකු ජීවිතක්ෂයට


මඩකලපුව සන්දිවේලි ප්‍රදේශයේදී අද (09) අලුයම සිදුවූ බරපතළ රිය අනතුරකින් ක්‍රාන්කුලම් ප්‍රදේශයේ පදිංචි 22 හැවිරිදි තරුණයෙකු එම ස්ථානයේදීම අවාසනාවන්ත ලෙස ජීවිතක්ෂයට පත්ව ඇත. පාසිකුඩා ප්‍රදේශයේ හෝටලයක සේවය කරන මෙම තරුණයා රාත්‍රී සේවා මුරය අවසන් කර සිය ගම්මානයේ පිහිටි කෝවිලක පැවැත්වෙන කුම්භාභිෂේක උත්සවයකට සහභාගී වීම සඳහා යතුරුපැදියකින් නිවස බලා ගමන් කරමින් සිටියදී මෙම අනතුර සිදුවී තිබේ. ඔහු සන්දිවේලි ප්‍රදේශය පසුකරමින් සිටියදී ඉදිරියෙන් පැමිණි බස් රථයක මුහුණට මුහුණ ගැටීමෙන් බරපතළ තුවාල ලබා එම ස්ථානයේදීම මියගොස් ඇත. සිද්ධිය සම්බන්ධයෙන් සන්දිවේලි පොලිසිය වැඩිදුර විමර්ශන පවත්වාගෙන යනු ලබයි.


කේ ආර් ටී වී නෙට්වර්ක් - දේශීය පුවත් / අනතුරු පුවත්


Tragic Road Collision at Sandiveli in Batticaloa: 22-Year-Old Motorcyclist from Kirankulam Dies on the Spot Following Crash with Bus


A 22-year-old youth from Kirankulam died instantly in a head-on collision between a motorcycle and a bus along the main transit stretch in Sandiveli, Batticaloa during the early hours of Wednesday (09). The deceased, an employee attached to a hospitality establishment in Pasikudah, was returning home upon finishing his night shift to attend a temple festival in his native village when the unfortunate incident transpired. Upon negotiating the Sandiveli corridor, the motorcycle sustained a severe direct collision with an oncoming bus, resulting in fatal trauma at the scene. The Sandiveli Police have initiated inquiries into the dynamics of the collision.


KR TV Network - Local News / Accident News

Comments