தோப்பாகிய தனிமரம்: பெருந்தலைவர் எம். எச். எம். அஷ்ரபின் 26ஆவது நினைவேந்தல் மாநாடு காத்தான்குடியில் ஏற்பாடு
தோப்பாகிய தனிமரம்: பெருந்தலைவர் எம். எச். எம். அஷ்ரபின் 26ஆவது நினைவேந்தல் மாநாடு காத்தான்குடியில் ஏற்பாடு
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவரும் முன்னாள் அமைச்சருமான பெருந்தலைவர் எம். எச். எம். அஷ்ரப் அவர்களின் 26ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு "தோப்பாகிய தனிமரம்" எனும் தலைப்பில் எதிர்வரும் செப்டம்பர் 16 ஆம் திகதி புதன்கிழமை பிற்பகல் 3.30 மணிக்கு காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் கலாசார மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் தலைமையில் இடம்பெறவுள்ள இந்நிகழ்வில், தமிழ்நாடு சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் ஏ. எம். ஷாஜஹான் மற்றும் இந்திய பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ்நாடு வக்ஃப் வாரியத் தலைவருமான கே. நவாஸ் கனி ஆகியோர் விசேட அதிதிகளாகக் கலந்துகொள்ளவுள்ளனர். முஸ்லிம் சமூகத்தின் உரிமைகளுக்காகவும் தேசிய ஒற்றுமைக்காகவும் குரல்கொடுத்த பெருந்தலைவர் அஷ்ரபின் அரசியல் ஆளுமை மற்றும் சமூகப் பணிகளை நினைவுகூரும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்நிகழ்வில் கட்சிப் பிரதிநிதிகள், உலமாக்கள், முக்கிய பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்துகொள்ளவுள்ளனர்.
கே ஆர் டி வி நெட்வொர்க் - உள்நாட்டுச் செய்தி / அரசியல் மற்றும் நினைவேந்தல் செய்தி
මහා නායක එම්. එච්. එම්. අෂ්රෆ් මහතාගේ 26 වන ගුණ සමරුව කාත්තන්කුඩියේදී
ශ්රී ලංකා මුස්ලිම් කොංග්රසයේ නිර්මාතෘ නායක මෙන්ම හිටපු අමාත්යවරයෙකු වූ එම්. එච්. එම්. අෂ්රෆ් මහතාගේ 26 වන ගුණ සැමරුම් වැඩසටහන එළඹෙන සැප්තැම්බර් 16 වන බදාදා පස්වරු 3.30ට කාත්තන්කුඩි හිස්බුල්ලා සංස්කෘතික ශ්රවණාගාර පරිශ්රයේදී පැවැත්වීමට කටයුතු යොදා තිබේ.
ශ්රී ලංකා මුස්ලිම් කොංග්රසයේ නායක රවුෆ් හකීම් මහතාගේ ප්රධානත්වයෙන් පැවැත්වෙන මෙම අනුස්මරණ අවස්ථාව සඳහා තමිල්නාඩු සුළුතර සුබසාධන අමාත්ය ඒ. එම්. ෂාජහාන් සහ ඉන්දීය පාර්ලිමේන්තු මන්ත්රී මෙන්ම තමිල්නාඩු වක්ෆ් මණ්ඩල සභාපති කේ. නවාස් ගනී යන මහත්වරුන් විශේෂ ආරාධිතයන් ලෙස එක්වීමට නියමිතය. ශ්රී ලාංකීය දේශපාලනය තුළ සුවිශේෂී සලකුණක් තැබූ අෂ්රෆ් මහතාගේ ජාතික හා සමාජ මෙහෙවර සිහිපත් කිරීම වෙනුවෙන් සංවිධානය කර ඇති මෙම අවස්ථාව සඳහා පාර්ලිමේන්තු මන්ත්රීවරුන්, ආගමික නායකයින් සහ ප්රදේශවාසී මහජනතාව සහභාගී වීමට නියමිතයි.
කේ ආර් ටී වී නෙට්වර්ක් - දේශීය පුවත් / දේශපාලන හා සැමරුම් පුවත්
26th Death Anniversary Commemoration of Late Leader M. H. M. Ashraff Scheduled in Kattankudy
The 26th death anniversary memorial commemoration of the founding leader of the Sri Lanka Muslim Congress and former Cabinet Minister, the late M. H. M. Ashraff, is scheduled to be held on Wednesday, 16 September 2026, at 3:30 PM at the Hizbullah Cultural Hall in Kattankudy.
Presided over by Sri Lanka Muslim Congress Leader Rauff Hakeem, the commemorative gathering will feature distinguished international guests including Tamil Nadu Minister for Minorities Welfare A. M. Shahjahan and Member of the Indian Parliament and Chairman of the Tamil Nadu Waqf Board K. Nawaz Kani. The event convenes to honor the political legacy, legislative contributions, and national advocacy championed by the late leader, bringing together community leaders, parliamentarians, scholars, and delegates from across the island.
KR TV Network - Local News / Political and Commemorative Event

Comments