Skip to main content
Breaking news · In-depth coverage · Analysis
Breaking news · In-depth coverage · Analysis
● Breaking
Latest headlines

நாட்டை விட்டே தப்பியோட முயன்றவர்களுக்கு வினையான போலி ஆவணங்கள்: காவல்துறையிடம் சிக்கிய அதிநவீன மோசடி வலையமைப்பு மற்றும் 27 வயது இளைஞர் கைது!


 நாட்டை விட்டே தப்பியோட முயன்றவர்களுக்கு வினையான போலி ஆவணங்கள்: காவல்துறையிடம் சிக்கிய அதிநவீன மோசடி வலையமைப்பு மற்றும் 27 வயது இளைஞர் கைது!


செய்தியாளர்: பர்ஹானா பதுர்தீன்


கம்பஹா, இம்புல்கொட பகுதியில் உள்ள வாடகை வீடு ஒன்றில், போலிப் பட்டச் சான்றிதழ்கள், உத்தியோகபூர்வ ஆவணங்கள் மற்றும் நிறுவனங்களின் முத்திரைகளைப் பாரிய அளவில் தயாரிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்ட 27 வயது இளைஞர் ஒருவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.


 கம்பஹா காவல்துறைப் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த ரகசியத் தகவலை அடுத்து முன்னெடுக்கப்பட்ட சோதனையின்போது இந்த மோசடி வலையமைப்பு கண்டறியப்பட்டுள்ளது.


 தங்காலையைச் சேர்ந்த குறித்த சந்தேக நபர், மாதம்தோறும் 35,000 ரூபா வாடகைக்குப் பெறப்பட்ட வீடு ஒன்றிலிருந்து இந்தச் சட்டவிரோதச் செயல்களை இயக்கி வந்துள்ளார்.


சோதனையின் போது இரண்டு மடிக்கணினிகள், இரண்டு கைபேசிகள், ஒரு அச்சுப்பொறி, 35 போலிச் சான்றிதழ்கள், பல்வேறு நிறுவனத் தலைவர்களின் 51 உத்தியோகபூர்வ முத்திரைகள் மற்றும் 3 புடைப்பு முத்திரைகள் காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.


 உள்நாட்டு இறைவரித் திணைக்களம், பரீட்சைத் திணைக்களம் மற்றும் பேராதனை, ஸ்ரீ ஜயவர்தனபுர, களனி, மொரட்டுவ, ரஹுணு, ரஜரட்ட, வயம்ப மற்றும் ஊவா வெல்லஸ்ஸ உள்ளிட்ட பல அரச மற்றும் தனியார் பல்கலைக்கழகங்கள் மற்றும் வங்கிகளுடன் தொடர்புடைய முத்திரைகளும் கடிதத் தலைப்புகளும் இங்கு தயாரிக்கப்பட்டுள்ளதாகக் காவல்துறையினர் தெரிவித்தனர்.


 கடந்த ஒரு வருடமாக இந்த மோசடியில் ஈடுபட்டு வந்துள்ள சந்தேக நபர், சாதாரண போலிச் சான்றிதழ்களை 25,000 ரூபா முதல் 50,000 ரூபா வரை விற்றுள்ளார்.


குறிப்பாக ஜப்பான் போன்ற நாடுகளுக்குச் செல்வதற்காகத் தயாரிக்கப்பட்ட போலிச் சான்றிதழ்கள் 400,000 ரூபா வரை விற்பனை செய்யப்பட்டுள்ளதுடன், இதன் மூலம் சுமார் 200 பேர் வரை வெளிநாடுகளுக்குச் சென்றிருக்கலாம் எனச் சந்தேக நபர் விசாரணைகளின் போது தெரிவித்துள்ளார். யக்கலை காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


கே.ஆர்.டி.வி. நெட்வொர்க் | தேசிய / குற்றவியல் & புலனாய்வுச் செய்தி


රටින් පලා යාමට උත්සාහ කළ අයට උගුලක් වූ ව්‍යාජ ලේඛන: පොලිස් අත්අඩංගුවට පත් නවීන ජාවාරම් ජාලය!


වාර්තාකරු:ෆර්හානා බදුර්දීන්


ගම්පහ, ඉඹුල්ගොඩ ප්‍රදේශයේ කුලී නිවසක් තුළ ව්‍යාජ උපාධි සහතික, නිල ලේඛන සහ ආයතනවල මුද්‍රා විශාල වශයෙන් සකස් කිරීමේ ජාවාරමක නිරත වූ 27 හැවිරිදි තරුණයෙක් පොලිසිය විසින් අත්අඩංගුවට ගෙන ඇත.


 ගම්පහ පොලිස් බුද්ධි අංශයට ලැබුණු තොරතුරකට අනුව සිදු කරන ලද වැටලීමකදී මෙම ජාවාරම අනාවරණය කරගෙන තිබේ.


තංගල්ල ප්‍රදේශයේ පදිංචි සැකකරු මාසිකව රුපියල් 35,000ක කුලියට ගත් නිවසක සිට මෙම ජාලය පවත්වාගෙන ගොස් ඇත.


මෙහිදී ලැප්ටොප් පරිගණක දෙකක්, ජංගම දුරකථන දෙකක්, මුದ್ರණ යන්ත්‍රයක්, ව්‍යාජ සහතික 35ක්, විවිධ ආයතන ප්‍රධානීන්ගේ නිල මුද්‍රා 51ක් සහ එම්බොස් මුද්‍රා 3ක් පොලිසිය භාරයට ගෙන ඇත.


දේශීය ආදායම් දෙපාර්තමේන්තුව, විභාග දෙපාර්තමේන්තුව සහ පේරාදෙණිය, ශ්‍රී ජයවර්ධනපුර, කැලණිය, මොරටුව, රුහුණ, රජරට, වයඹ සහ ඌව වෙල්ලස්ස ඇතුළු රාජ්‍ය හා පෞද්ගලික විශ්වවිද්‍යාල සහ බැංකු ආශ්‍රිත මුද්‍රා හා ලිපි ශීර්ෂ මෙහි සකස් කර ඇති බව පොලිසිය පවසයි.


පසුගිය වසරක කාලය තුළ මෙම ජාවාරම පවත්වාගෙන ගොස් ඇති සැකකරු, සාමාන්‍ය ව්‍යාජ සහතිකයක් රුපියල් 25,000ත් 50,000ත් අතර මුදලකට අලෙවි කර ඇත.


විශේෂයෙන් ජපානය වැනි රටවල් වෙත යාම සඳහා සකස් කරන ලද ව්‍යාජ සහතික රුපියල් 400,000ක් දක්වා විකුණා ඇති අතර, මෙමඟින් පුද්ගලයන් 200ක් පමණ විදේශගත වන්නට ඇතැයි සැකකරු ප්‍රකාශ කර ඇති බව පොලිසිය සඳහන් කරයි. යක්කල පොලිසිය වැඩිදුර විමර්ශන පවත්වයි.


කේ.ආර්.ටී. වි. නෙට්වර්ක්   ජාතික / අපරාධ සහ ගවේෂණ පුවත්


 Fake Documents Trap Those Attempting to Flee the Country: Sophisticated Fraud Network Busted by Police with the Arrest of a 27-Year-Old!


Reporter: Farhana bathurdeen


Police have arrested a 27-year-old man who operated a large-scale operation producing fake degree certificates, official documents, and institutional stamps from a rented house in the Imbulgoda area of Gampaha.


Acting on a tip-off received by the Gampaha intelligence unit, law enforcement authorities raided the premises to uncover the syndicate.


Hailing from Tangalle, the suspect had been running this elaborate fraud network from a house rented at Rs. 35,000 per month.


During the raid, police seized two laptops, two mobile phones, a printer, 35 fake certificates, 51 official seals of various institutional heads, and 3 embossing seals.


Stamps and letterheads linked to the Inland Revenue Department, Department of Examinations, and major universities such as Peradeniya, Sri Jayewardenepura, Kelaniya, Moratuwa, Ruhuna, Rajarata, Wayamba, and Uva Wellassa, alongside banks and private entities, were discovered.


Operating for over a year, the suspect sold standard fake certificates ranging from Rs. 25,000 to Rs. 50,000.


Fake certificates tailored for travel to countries like Japan were sold for up to Rs. 400,000, with the suspect admitting during interrogations that approximately 200 people may have used these forged documents to leave the country. Yakkala Police are conducting further investigations.


KRTV Network | National / Crime & Investigative News

Comments