Skip to main content
Breaking news · In-depth coverage · Analysis
Breaking news · In-depth coverage · Analysis
● Breaking
Latest headlines

கிழக்கு மாகாண காணிகளைப் பாதுகாப்பதற்காக நியமிக்கப்பட்ட விசேட குழு இரண்டாவது தடவையாகக் கூடல் - சட்டவிரோதக் கட்டடங்கள் குறித்து 2 மாதங்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவு!


 கிழக்கு மாகாண காணிகளைப் பாதுகாப்பதற்காக நியமிக்கப்பட்ட விசேட குழு இரண்டாவது தடவையாகக் கூடல் - சட்டவிரோதக் கட்டடங்கள் குறித்து 2 மாதங்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவு!


கிழக்கு மாகாண காணிகளைப் பாதுகாப்பதற்காக நியமிக்கப்பட்ட குழு, ஜனாதிபதி பணிக்குழு பிரதான செயலாளர் சந்திரகாந்தி பெரேரா தலைமையில் நேற்று (16) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இரண்டாவது தடவையாகவும் கூடியுள்ளது.


சட்டவிரோத காணி ஆக்கிரமிப்புகளைத் தடுத்தல், கடற்கரையைப் பாதுகாத்தல் மற்றும் சம்பந்தப்பட்ட அரச நிறுவனங்களை ஒருங்கிணைத்துக் காணிப் பிரச்சினைகளுக்கு விரைவான தீர்வுகளை வழங்குவதற்காக இக்குழு நியமிக்கப்பட்டுள்ளது. கிழக்கு மாகாண கடற்கரைகளில் உள்ள சட்டவிரோத நிர்மாணங்கள், அரச மற்றும் வனஜீவராசித் திணைக்களக் காணிகளை ஆக்கிரமித்தல் தொடர்பில் தகவல்கள் கோரப்பட்டுள்ளதுடன், அது குறித்து இரண்டு மாதங்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.


அருகம்புலி கடற்கரையில் உள்ள சட்டவிரோத நிர்மாணங்கள் குறித்து இடைக்கால அறிக்கையைப் பெறுவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளதுடன், மாவட்ட மற்றும் பிரதேச செயலாளர்களிடமிருந்தும் தகவல்கள் பெறப்படவுள்ளன. இக்கூட்டத்தில் கிழக்கு மாகாண காணிப் பாதுகாப்புக் குழுவின் தலைவர் சேனக பல்லியகுருகே மற்றும் கடற்தொழில் பாதுகாப்பு, வனப் பாதுகாப்பு, வனஜீவராசிகள் திணைக்களங்களின் உயர் அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.


கே.ஆர்.டி.வி. நெட்வொர்க் | தேசிய / காணி மற்றும் சூழல் செய்தி


නැගෙනහිර පළාතේ ඉඩම් ආරක්ෂා කිරීම සඳහා පත් කළ කමිටුව දෙවැනි වරටත් රැස්වෙයි - නීතිවිරෝධී ඉදිකිරීම් පිළිබඳව මාස දෙකක් ඇතුළත වාර්තාවක් ලබා දෙන ලෙස නියෝග!


නැගෙනහිර පළාතේ ඉඩම් ආරක්ෂා කිරීම සඳහා පත් කරන ලද කමිටුව, ජනාධිපති කාර්ය සාධක බලකායේ ප්‍රධාන ලේකම් චන්ද්‍රකාන්ති පෙරේරා මහත්මියගේ ප්‍රධානත්වයෙන් ජනාධිපති කාර්යාලයේදී ඊයේ (16) පස්වරුවේ දෙවැනි වරටත් රැස් විය.


නීතිවිරෝධී ඉඩම් අල්ලා ගැනීම් වැළැක්වීම, වෙරළ තීරය ආරක්ෂා කිරීම සහ අදාළ රජයේ ආයතන සම්බන්ධීකරණය කරමින් ඉඩම් ගැටලු සඳහා ඉක්මන් විසඳුම් ලබා දීම මෙම කමිටුවේ අරමුණයි. නැගෙනහිර පළාත් වෙරළ තීරයන්හි නීතිවිරෝධී ඉදිකිරීම්, රජයේ සහ වනජීවී දෙපාර්තමේන්තුවට අයත් ඉඩම් නීතිවිරෝධී ලෙස අල්ලා ගැනීම් සම්බන්ධයෙන් අදාළ නිලධාරීන්ගෙන් තොරතුරු ඉල්ලා ඇති අතර, ඒ පිළිබඳව මාස දෙකක් ඇතුළත වාර්තාවක් ලබා දෙන ලෙස නියෝග කර ඇත.


ආරුගම්බේ වෙරළ තීරයේ පවතින නීතිවිරෝධී ඉදිකිරීම් සම්බන්ධයෙන් අතුරු වාර්තාවක් ලබා ගැනීමටත්, දිස්ත්‍රික් සහ ප්‍රදේශ ලේකම්වරුන්ගෙන් ද තොරතුරු ලබා ගැනීමටත් මෙහිදී තීරණය විය. නැගෙනහිර පළාත් ඉඩම් ආරක්ෂණ කමිටුවේ සභාපති සේනක පල්ලියගුරුගේ මහතා ඇතුළු ධීවර, වන සංරක්ෂණ සහ වනජීවී දෙපාර්තමේන්තුවල උසස් නිලධාරීහු පිරිසක් මෙම අවස්ථාවට එක් වූහ.


කේ.ආර්.ටී. වි. නෙට්වර්ක්   ජාතික / පරිසර පුවත්


Special Committee Appointed to Protect Eastern Province Lands Convenes for the Second Time; Report on Illegal Constructions Ordered Within Two Months!


The committee appointed to safeguard lands in the Eastern Province met for the second time yesterday (16) afternoon at the Presidential Secretariat, under the leadership of Presidential Task Force Chief Secretary Chandrakanthi Perera.


The committee has been established to prevent illegal land encroachments, protect coastal belts, and coordinate relevant state institutions to provide swift solutions to land-related issues. Authorities have been instructed to submit a comprehensive report within two months regarding illegal constructions, state land encroachments, and unauthorized occupation of Wildlife Department lands in the Eastern Province.


It was also decided to obtain an interim report regarding illegal structures along the Arugam Bay coastal area, incorporating data from District and Divisional Secretaries. The meeting was attended by Eastern Province Land Protection Committee Chairman Senaka Palliyaguruge, alongside senior officials from the Department of Coast Conservation, Forest Department, and Department of Wildlife Conservation.


KRTV Network | National / Environmental News

Comments