ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் 32வது பேராளர் மாநாடு: காத்தான்குடியில் முன்னேற்பாட்டுக் கூட்டம்
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் 32வது பேராளர் மாநாடு: காத்தான்குடியில் முன்னேற்பாட்டுக் கூட்டம்
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் 32வது பேராளர் மாநாடு மற்றும் கட்சியின் மறைந்த பெருந்தலைவர் மர்ஹூம் எம்.எச்.எம். அஷ்ரஃப் அவர்களின் 26வது நினைவேந்தல் நிகழ்வுகளை முன்னிட்டு ஏற்பாடுகள் தொடர்பான முன்னேற்பாட்டுக் கூட்டம் காத்தான்குடியில் நடைபெற்றது.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான சட்ட முதுமானி அல்ஹாஜ் ரவூப் ஹக்கீம் தலைமையில், காத்தான்குடியில் அமைந்துள்ள பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்வின் அலுவலகத்தில் இக்கலந்துரையாடல் இடம்பெற்றது.
இக்கூட்டத்தில் கட்சியின் பிரதித் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ், கட்சியின் பிரதித் தேசிய அமைப்பாளர் எம்.எஸ். உதுமாலெப்பை, எம்.எஸ். அப்துல் வாசித், கட்சியின் தேசிய இளைஞர் அமைப்பாளரும் பொத்துவில் பிரதேச சபையின் தலைவருமான எஸ்.எம்.எம். முஷாரப் முதுநபீன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் ஏறாவூர் நகர சபையின் தவிசாளருமான எம்.எஸ். நளீம், காத்தான்குடி நகர சபையின் தவிசாளர் எஸ்.எச்.எம். அஸ்பர், கட்சியின் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள், உயர்பீட உறுப்பினர்கள் மற்றும் முக்கியஸ்தர்கள் பலர் கலந்துகொண்டனர்.
எதிர்வரும் 16.09.2026 அன்று நடைபெறவுள்ள ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் 32வது பேராளர் மாநாடு மற்றும் மர்ஹூம் எம்.எச்.எம். அஷ்ரஃப் அவர்களின் 26வது நினைவேந்தல் நிகழ்வுகளை மிகச் சிறப்பாகவும் ஒழுங்கமைக்கப்பட்ட முறையிலும் நடத்துவது குறித்து விரிவாக ஆராயப்பட்டு முக்கிய தீர்மானங்கள் எட்டப்பட்டன.
கே ஆர் டி வி நெட்வொர்க் - உள்நாட்டுச் செய்தி
ශ්රී ලංකා මුස්ලිම් කොංග්රසයේ 32 වන මහා සම්මේලනය: කාත්තන්කුඩියේදී මූලික සූදානම් රැස්වීමක්
ශ්රී ලංකා මුස්ලිම් කොංග්රසයේ 32 වන මහා සම්මේලනය සහ පක්ෂයේ නිර්මාතෘ මර්හූම් එම්.එච්.එම්. අෂ්රෆ් මහතාගේ 26 වන ගුණ සැමරුම් උත්සවය වෙනුවෙන් වූ මූලික සංවිධාන කටයුතු පිළිබඳ සාකච්ඡාවක් කාත්තන්කුඩියේදී පවත්වා තිබේ.
ශ්රී ලංකා මුස්ලිම් කොංග්රසයේ නායක සහ පාර්ලිමේන්තු මන්ත්රී නීතිඥ රවුෆ් හකීම් මහතාගේ ප්රධානත්වයෙන්, කාත්තන්කුඩියේ පිහිටි පාර්ලිමේන්තු මන්ත්රී ආචාර්ය එම්.එල්.ඒ.එම්. හිස්බුල්ලා මහතාගේ කාර්යාලයේදී මෙම රැස්වීම පැවැත්විණි.
මෙම අවස්ථාවට පක්ෂයේ නියෝජ්ය නායක පාර්ලිමේන්තු මන්ත්රී ආචාර්ය එම්.එල්.ඒ.එම්. හිස්බුල්ලා, පක්ෂයේ නියෝජ්ය ජාතික සංවිධායක එම්.එස්. උදුමාලෙබ්බේ, එම්.එස්. අබ්දුල් වාසිත්, පක්ෂයේ ජාතික තරුණ සංවිධායක සහ පොතුවිල් ප්රාදේශීය සභාවේ සභාපති එස්.එම්.එම්. මුෂාරෆ් මුදුනබීන්, හිටපු පාර්ලිමේන්තු මන්ත්රී එම්.එස්. නලීම්, කාත්තන්කුඩි නගර සභාවේ සභාපති එස්.එච්.එම්. අස්ෆර් ඇතුළු පළාත් පාලන නියෝජිතයින්, පක්ෂයේ උත්තරීතර මණ්ඩල සභිකයින් සහ ප්රධාන ක්රියාකාරීන් රැසක් එක්ව සිටියහ.
එළඹෙන 2026 සැප්තැම්බර් 16 වන දින පැවැත්වීමට නියමිත ශ්රී ලංකා මුස්ලිම් කොංග්රසයේ 32 වන ජාතික නියෝජිත මහා සම්මේලනය සහ මර්හූම් එම්.එච්.එම්. අෂ්රෆ් මහතාගේ 26 වන ගුණානුස්මරණ වැඩසටහන් විධිමත්ව හා සාර්ථකව පැවැත්වීම සඳහා මෙහිදී දීර්ඝ වශයෙන් සාකච්ඡා කර තීරණ කිහිපයක් ගෙන ඇත.
කේ ආර් ටීවී නෙට්වර්ක් - දේශීය පුවත්
Sri Lanka Muslim Congress 32nd General Convention: Preparatory Meeting Held in Kattankudy
A preparatory meeting was held in Kattankudy regarding arrangements for the upcoming 32nd General Convention of the Sri Lanka Muslim Congress (SLMC) and the 26th commemoration ceremony of its late founding leader, M.H.M. Ashraff.
The discussion took place under the leadership of SLMC National Leader and Member of Parliament Rauff Hakeem at the office of Member of Parliament Dr. M.L.A.M. Hizbullah in Kattankudy.
The meeting was attended by SLMC Deputy Leader and MP Dr. M.L.A.M. Hizbullah, Deputy National Organizer M.S. Uthumalebbe, M.S. Abdul Wasith, National Youth Organizer and Chairman of the Pottuvil Pradeshiya Sabha S.M.M. Muszhaaraff Muthunabeen, former MP M.S. Naleem, Chairman of the Kattankudy Urban Council S.H.M. Asfar, along with local council representatives, high command members, and key party officials.
Detailed discussions were held concerning the event arrangements scheduled for September 16, 2026, marking both the 32nd convention and the 26th death anniversary commemoration of late leader M.H.M. Ashraff, with several key organizational decisions reached to ensure its smooth coordination.
KR TV Network - Local News













Comments