குவைத்தின் சால்மியாவில் 37 பொட்டலங்கள் போதைப்பொருட்களுடன் இரு இலங்கையர்கள் கைது: குவைத் உள்துறை அமைச்சு உத்தியோகபூர்வ தகவல்
குவைத்தின் சால்மியாவில் 37 பொட்டலங்கள் போதைப்பொருட்களுடன் இரு இலங்கையர்கள் கைது: குவைத் உள்துறை அமைச்சு உத்தியோகபூர்வ தகவல்
செய்தியாளர்: பர்ஹானா பதுறுதீன்
குவைத்தின் சால்மியா பகுதியில் 37 பொட்டலங்கள் கொண்ட போதைப்பொருட்களுடன் இரண்டு இலங்கை நாட்டவர்கள் பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு உள்துறை அமைச்சு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. ஹவாலி ஆளுநரக பாதுகாப்புப் பிரிவின் ரோந்துப் படையினர் அப்பகுதியில் வழமையான கண்காணிப்புப் பணிகளில் ஈடுபட்டிருந்த வேளையிலேயே சந்தேகநபர்கள் இருவரும் பிடிபட்டுள்ளனர்.
சால்மியா பகுதியிலுள்ள திறந்தவெளி நிலப்பரப்பொன்றில் இவ்விரு நபர்களும் சந்தேகத்திற்குரிய முறையில் எதையோ தோண்டிக் கொண்டிருந்ததை அவதானித்த ரோந்துப் படையினர், விசாரணைக்காக அவர்களை அணுகியுள்ளனர். இதன்போது சந்தேகநபர்களில் ஒருவர் அங்கிருந்து தப்பியோட முற்பட்ட போதிலும், பாதுகாப்பு அதிகாரிகள் அவரை விரட்டிச் சென்று மடக்கிப் பிடித்துள்ளனர்.
இதனையடுத்து அவர்களிடம் முன்னெடுக்கப்பட்ட தீவிர சோதனையின் போது, முதல் சந்தேகநபரிடமிருந்து 27 பொட்டலங்களும், இரண்டாவது சந்தேகநபரிடமிருந்து 10 பொட்டலங்களுமாக மொத்தம் 37 போதைப்பொருள் பொட்டலங்கள் அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டன. கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களுடன் கைது செய்யப்பட்ட இரு இலங்கையர்களும் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக அந்நாட்டு உரிய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
கே ஆர் டி வி நெட்வொர்க் - சர்வதேச செய்தி / குற்றவியல் செய்தி
කුවේටයේ සල්මියා හිදී මත්ද්රව්ය පාර්සල් 37ක් සමඟ ශ්රී ලාංකිකයින් දෙදෙනෙකු අත්අඩංගුවට: කුවේට් අභ්යන්තර කටයුතු අමාත්යාංශය තහවුරු කරයි
වාර්තාකරු: ෆර්හානා බදුර්දීන්
කුවේටයේ සල්මියා ප්රදේශයේදී මත්ද්රව්ය අඩංගු පාර්සල් 37ක් සමඟ ශ්රී ලාංකිකයින් දෙදෙනෙකු ආරක්ෂක අංශ විසින් අත්අඩංගුවට ගෙන ඇති බව කුවේට් අභ්යන්තර කටයුතු අමාත්යාංශය නිවේදනය කර තිබේ. හවාලි ආරක්ෂක අධ්යක්ෂ මණ්ඩලයේ නිලධාරීන් විසින් එම ප්රදේශයේ සිදුකරන ලද සාමාන්ය මුර සංචාරයක් අතරතුරදී මෙම සැකකරුවන් නීතියේ රැහැනට හසුකර ගැනීමට හැකිවී ඇත.
මුර සංචාරයේ නිරතව සිටි නිලධාරීන් සල්මියා හි විවෘත භූමියක සැකකටයුතු අයුරින් යමක් හාරමින් සිටි පුද්ගලයින් දෙදෙනෙකු දැක ප්රශ්න කිරීම සඳහා ළඟාවෙද්දී, එක් සැකකරුවෙකු පලා යාමට උත්සාහ කර ඇත. කෙසේ වෙතත්, ආරක්ෂක අංශ නිලධාරීන් වහා ක්රියාත්මක වී ඔහුව ලුහුබැඳ ගොස් අල්ලා ගැනීමට සමත්විය.
අනතුරුව සිදුකරන ලද පරීක්ෂාවේදී එක් සැකකරුවෙකු සතුව තිබී මත්ද්රව්ය පාර්සල් 27ක්ද, අනෙක් සැකකරු සතුව තිබී පාර්සල් 10ක්ද වශයෙන් සමස්තයක් ලෙස මත්ද්රව්ය පාර්සල් 37ක් සොයාගනු ලැබීය. අත්අඩංගුවට ගත් මත්ද්රව්ය තොගය සහ ශ්රී ලාංකික සැකකරුවන් දෙදෙනා ඉදිරි නීතිමය පියවර ගැනීම සඳහා අදාළ විශේෂ විමර්ශන අංශ වෙත භාරදීමට පියවර ගෙන තිබේ.
කේ ආර් ටී වී නෙට්වර්ක් - ජාත්යන්තර පුවත් / අපරාධ පුවත්
Two Sri Lankans Arrested in Salmiya Kuwait with 37 Packets of Narcotics: Interior Ministry Confirms
Reporter: Farhana Badurdeen
Two Sri Lankan nationals were apprehended in the Salmiya district of Kuwait in possession of 37 illicit parcels of narcotics, the Kuwaiti Ministry of Interior officially announced. The arrests were affected during regular preventive surveillance patrols coordinated by personnel attached to the Hawalli Governorate Security Directorate.
Operational patrol officers intercepted the individuals after observing them acting suspiciously while digging in an open field. Upon the approach of security personnel to conduct field verifications, one suspect attempted to flee the scene on foot but was swiftly chased down and restrained by perimeter patrol units.
A subsequent physical search yielded 37 contraband packets, comprising 27 packets recovered from the first individual and 10 packets found on the second suspect. The seized narcotic substances alongside the two detainees have been formally handed over to specialized legal enforcement directorates to facilitate necessary judicial proceedings.
KR TV Network - International News / Crime News











Comments