ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மற்றும் இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் இடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பு: 38 ஆண்டுகளுக்குப் பின்னரான வரலாற்று விஜயத்தில் 3 புதிய முக்கிய ஒப்பந்தங்கள் கைச்சாத்து மற்றும் 3 பெய்லி பாலங்கள் மக்கள் பயன்பாட்டிற்கு கையளிப்பு
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மற்றும் இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் இடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பு: 38 ஆண்டுகளுக்குப் பின்னரான வரலாற்று விஜயத்தில் 3 புதிய முக்கிய ஒப்பந்தங்கள் கைச்சாத்து மற்றும் 3 பெய்லி பாலங்கள் மக்கள் பயன்பாட்டிற்கு கையளிப்பு
இலங்கைக்கு உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய பாதுகாப்பு அமைச்சர் ஸ்ரீ ராஜ்நாத் சிங் மற்றும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க ஆகியோருக்கு இடையிலான உயர்மட்ட சந்திப்பு ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது. இரண்டு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்திக்கொள்ளும் நோக்கத்துடன் இடம்பெற்ற இந்த விஜயமானது, இந்திய பாதுகாப்பு அமைச்சர் ஒருவர் உத்தியோகபூர்வமாக இந்நாட்டிற்கு வருகை தந்துள்ளமை 38 ஆண்டுகளுக்குப் பின்னர் என்பது குறிப்பிடத்தக்க வரலாற்று முக்கியத்துவத்தைப் பெற்றுள்ளது.
இச்சந்திப்பின் போது இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையில் நிலவும் பாதுகாப்பு, பொருளாதாரம், சமுத்திர மற்றும் பிராந்திய பங்களிப்பு மற்றும் இரு நாடுகளுக்கும் இடையிலான வரலாற்றுத் தொடர்புகள் பரஸ்பர நன்மை கிடைக்கும் வகையில் மேலும் வலுப்படுத்தப்படுவது குறித்து விரிவாக கலந்துரையாடப்பட்டது. குறிப்பாக, இலங்கையில் போதைப்பொருள் வர்த்தகத்தைக் கட்டுப்படுத்துவதற்காக தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ள தேசியத் திட்டம் குறித்து ஜனாதிபதி இங்கு விளக்கமளித்ததுடன், இந்து சமுத்திர பிராந்தியம் போதைப்பொருள் வர்த்தகங்களின் மையமாக மாறியுள்ளதால், போதைப்பொருட்களை ஒழிக்கும் நடவடிக்கைகளுக்கு இந்தியாவின் ஒத்துழைப்பை எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார். மேலும், தற்போது இந்தியாவில் சிறை வைக்கப்பட்டுள்ள இலங்கை போதைப்பொருள் வர்த்தகர்களை மீண்டும் இலங்கைக்கு அழைத்து வருவதற்கு இந்தியாவின் முழுமையான ஒத்துழைப்பு கிடைக்கும் எனவும் ஜனாதிபதி நம்பிக்கை வெளியிட்டார்.
கடந்த காலங்களில் இலங்கை நெருக்கடிகளை எதிர்நோக்கிய ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் இந்தியா வழங்கிய ஆதரவை ஜனாதிபதி இதன்போது விசேடமாகப் பாராட்டினார். இந்து சமுத்திர பிராந்தியத்தின் அமைதியைப் பாதுகாப்பதற்காக இலங்கையின் தொடர்ச்சியான ஆதரவு வழங்கப்படும் எனக் குறிப்பிட்ட ஜனாதிபதி, தேசிய மற்றும் பிராந்தியத் தேவைகளுக்காக இலங்கை தனது முடிவுகளை எடுக்கும்போதும், ஒரு இறையாண்மையுள்ள நாடாக உலகின் பல்வேறு நாடுகளுடன் பல்வேறு ஒப்பந்தங்களில் இணைகின்றபோதும் பிராந்தியத்தின் பாதுகாப்பை கருத்திற்கொண்டே செயற்படுகின்றது என்றும் சுட்டிக்காட்டினார். இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் மோதல்கள் ஏற்படாதவாறு அதனை அமைதியான பிராந்தியமாகப் பேணுவதற்கு இலங்கை வழங்கும் பங்களிப்பை இந்தியப் பாதுகாப்பு அமைச்சர் இதன்போது விசேடமாகப் பாராட்டினார்.
டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட இலங்கையின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கு இந்திய இராணுவம் வழங்கிய பங்களிப்பை இதன்போது பாராட்டிய ஜனாதிபதி, இலங்கைப் பாதுகாப்புப் படைகளின் திறன்களை மேம்படுத்துவதற்கும், இரு நாடுகளுக்கும் இடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கும் புதிய ஒப்பந்தங்கள் வழிவகுக்கும் என்றும் தெரிவித்தார். "அயல்நாட்டிற்கு முதலிடம்" என்ற இந்தியாவின் வெளிநாட்டுக் கொள்கையில் இலங்கை மிக முக்கியமான நாடாகும் எனத் தெரிவித்த இந்தியப் பாதுகாப்பு அமைச்சர், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் தலைமையின் கீழ் கடந்த இரண்டு ஆண்டுகளில் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை வலுப்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கைகளையும் பாராட்டினார். மேலும், இலங்கை மீனவர்களின் முக்கிய வாழ்வாதாரத்தைப் பாதுகாத்துக்கொள்வதற்கும், மீனவர் பிரச்சினைகளை மனிதாபிமான அடிப்படையில் தீர்ப்பதற்கும் இரு நாடுகளும் இணைந்து ஒத்துழைப்புடன் செயற்படுவது குறித்தும் விரிவான கவனம் செலுத்தப்பட்டது.
இதன் தொடர்ச்சியாக, இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை மேலும் விரிவுபடுத்துவதற்கான முக்கிய படியாக, கைச்சாத்திடப்பட்ட மூன்று புதிய ஒப்பந்தங்கள் ஜனாதிபதி மற்றும் இந்திய பாதுகாப்பு அமைச்சர் முன்னிலையில் உத்தியோகபூர்வமாகப் பரிமாற்றிக்கொள்ளப்பட்டன. இலங்கை விமானப் படைக்காக L70 துப்பாக்கிகளின் நவீனமயப்படுத்தல் ஒப்பந்தம், இந்தியாவின் தேசிய பாதுகாப்புக் கல்லூரிக்கும் இலங்கையின் தேசிய பாதுகாப்புக் கல்லூரிக்கும் இடையிலான கல்விசார் ஒத்துழைப்புக்கான ஒப்பந்தம் மற்றும் இலங்கை மாணவர் படையணி மற்றும் இந்திய மாணவர் படையணி ஆகியவற்றுக்கு இடையிலான இருதரப்பு ஒத்துழைப்பு தொடர்பான ஒப்பந்தம் ஆகிய மூன்று ஒப்பந்தங்களும் பாதுகாப்புப் பிரதி அமைச்சர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர மற்றும் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா ஆகியோரால் பரிமாறிக் கொள்ளப்பட்டன.
அத்துடன், இந்திய அரசாங்கத்தின் உதவியுடன் குருநாகல் மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் அமைக்கப்பட்ட 3 பெய்லி பாலங்களைத் திறந்து வைக்கும் நிகழ்விலும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மற்றும் இந்திய பாதுகாப்பு அமைச்சர் ஸ்ரீ ராஜ்நாத் சிங் ஆகியோர் இணைய வழி ஊடாக கலந்துகொண்டனர். டித்வா சூறாவளிக்குப் பின்னர் அத்தியாவசிய வீதிகளை மீளமைப்பதற்காக இந்தியாவினால் வழங்கப்பட்ட புனரமைப்பு உதவித் திட்டத்தின் ஒரு பகுதியாக, பன்சியகம - குருநாகல், கெபெல்லேவ - குருநாகல் மற்றும் பழுகாமம் - மட்டக்களப்பு ஆகிய பாதைகளில் நிர்மாணிக்கப்பட்ட பெய்லி பாலங்கள் இவ்வாறு மக்கள் பாவனைக்கு கையளிக்கப்பட்டன.
இந்நிகழ்வில் பாதுகாப்புப் பிரதி அமைச்சர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர, ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க, ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானி பிரபாத் சந்திரகீர்த்தி, ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் ரோஷன் கமகே, பாதுகாப்பு அமைச்சின் பதில் செயலாளர் இந்திகா விஜேகுணவர்தன ஆகியோருடன், இந்திய விமானப்படையின் துணை பதவிநிலைப் பிரதானி எயார் மார்ஷல் அசுதோஷ் தீட்சித், கடற்படை துணை பதவிநிலைப் பிரதானி வைஸ் அட்மிரல் அஜய் கோச்சார், இராணுவ துணை பதவிநிலைப் பிரதானி லெப்டினன்ட் ஜெனரல் சந்தீப் ஜெயின், பாதுகாப்பு அமைச்சின் இணைச் செயலாளர் பிரசன்னா ஸ்ரீவஸ்தவா உட்பட இரு நாடுகளினதும் உயர்மட்டப் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.
கே ஆர் டி வி நெட்வொர்க் - உள்நாட்டுச் செய்தி / இருதரப்பு பாதுகாப்புச் செய்தி
ජනාධිපති අනුර කුමාර දිසානායක සහ ඉන්දීය ආරක්ෂක අමාත්ය රාජ්නාත් සිං අතර නිල හමුවක්: වසර 38කට පසු සිදුවූ ඓතිහාසික රාජ්ය තාන්ත්රික සංචාරයේදී නව ආරක්ෂක ගිවිසුම් 3කට එළඹෙයි
ශ්රී ලංකාවේ නිල සංචාරයක නිරත වන ඉන්දීය ආරක්ෂක අමාත්ය ශ්රී රාජ්නාත් සිං මහතා සහ ජනාධිපති අනුර කුමාර දිසානායක මහතා අතර නිල හමුව ජනාධිපති කාර්යාලයේදී උත්සවාකාරයෙන් පැවැත්විණි. දෙරට අතර සබඳතා වඩාත් පුළුල් කරගැනීමේ අරමුණින් සිදුවූ මෙම සංචාරය, ඉන්දීය ආරක්ෂක අමාත්යවරයෙකු මෙරටට නිල වශයෙන් පැමිණි වසර 38කට පසු පළමු අවස්ථාව ලෙස ඉතිහාසයට එක්වේ.
දෙරට අතර පවතින ආරක්ෂක, ආර්ථික, සාගර කලාපීය සහ ඓතිහාසික සබඳතා අන්යෝන්ය ප්රතිලාභ හිමිවන අයුරින් තවදුරටත් ශක්තිමත් කිරීම පිළිබඳව නායකයින් දෙපළ අතර දීර්ඝ සාකච්ඡා පැවැත්විණි. විශේෂයෙන්ම, ශ්රී ලංකාව තුළ මත්ද්රව්ය උවදුර මැඩපැවැත්වීම සඳහා ආරම්භ කර ඇති ජාතික වැඩපිළිවෙළ පිළිබඳව ජනාධිපතිවරයා මෙහිදී කරුණු පැහැදිලි කළ අතර, ඉන්දීය සාගර කලාපය මත්ද්රව්ය ජාවාරම්වල කේන්ද්රස්ථානයක් බවට පත්ව ඇති බැවින් එම ජාලයන් මර්දනය කිරීමට ඉන්දියාවේ සහයෝගය අපේක්ෂා කරන බව ප්රකාශ කළේය. එසේම දැනට ඉන්දියාවේ රඳවා සිටින ශ්රී ලාංකික මත්ද්රව්ය ජාවාරම්කරුවන් යළි මෙරටට ගෙන්වා ගැනීමට ඉන්දියාවේ පූර්ණ සහය හිමිවනු ඇතැයිද ජනාධිපතිවරයා විශ්වාසය පළ කළේය.
අර්බුදකාරී සෑම අවස්ථාවකදීම ඉන්දියාව මෙරටට ලබාදුන් සහයෝගය ඇගයූ ජනාධිපතිවරයා, ස්වෛරී රටක් ලෙස ශ්රී ලංකාව තීන්දු තීරණ ගැනීමේදී මෙන්ම ජාත්යන්තර ගිවිසුම්වලට එළඹීමේදී කලාපීය ආරක්ෂාව සහ ස්ථාවරත්වය කෙරෙහි නිරන්තර ප්රමුඛතාව ලබාදෙන බව සඳහන් කළේය. සාගර කලාපයේ සාමය සුරැකීමට ශ්රී ලංකාව දක්වන නොසැලෙන දායකත්වය ඉන්දීය ආරක්ෂක අමාත්යවරයාගේ ඉහළ පැසසුමට ලක්විය. තවද, දිට්වා සුළි කුණාටුවෙන් හානියට පත් යටිතල පහසුකම් ප්රතිසංස්කරණයට ඉන්දීය හමුදාව ලබාදුන් සහයෝගය මෙහිදී සිහිපත් කෙරුණු අතර, ඉන්දියාවේ "අසල්වැසියාට ප්රමුඛතාව" විදේශ ප්රතිපත්තිය තුළ ශ්රී ලංකාවට අතිශය වැදගත් ස්ථානයක් හිමිවන බව ඉන්දීය අමාත්යවරයා පැවසීය. දෙරටේ ධීවර ප්රජාවගේ ජීවනෝපාය සුරක්ෂිත කිරීම සහ ගැටලුවලට සාමකාමී විසඳුම් සෙවීම පිළිබඳවද අවධානය යොමු කෙරිණි.
ඉන් අනතුරුව, දෙරට අතර ආරක්ෂක සහයෝගීතාව තහවුරු කෙරෙන නව ද්විපාර්ශ්වික ගිවිසුම් 3ක් ජනාධිපතිවරයා සහ ඉන්දීය ආරක්ෂක අමාත්යවරයා ඉදිරියේ හුවමාරු කරගන්නා ලදී. ශ්රී ලංකා ගුවන් හමුදාව සතු L70 වර්ගයේ ගුවන් ආරක්ෂක අවි නවීකරණය කිරීමේ ගිවිසුම, ඉන්දියාවේ ජාතික ආරක්ෂක විද්යාලය සහ ශ්රී ලංකාවේ ජාතික ආරක්ෂක විද්යාලය අතර අධ්යයන සහයෝගීතාව පිළිබඳ ගිවිසුම මෙන්ම දෙරටේ ජාතික ශිෂ්යභට බළකායන් අතර සබඳතා පුළුල් කිරීමේ ගිවිසුම මෙලෙස හුවමාරු විය. ආරක්ෂක නියෝජ්ය අමාත්ය විශ්රාමික මේජර් ජෙනරාල් අරුණ ජයසේකර සහ ශ්රී ලංකාවේ ඉන්දීය මහකොමසාරිස් සන්තෝෂ් ජා යන මහත්වරුන් විසින් මෙම ලියකියවිලි හුවමාරු කරගන්නා ලදී.
මීට අමතරව, දිට්වා සුළි කුණාටුවෙන් විනාශ වූ මාර්ග යථා තත්ත්වයට පත්කිරීම වෙනුවෙන් ඉන්දීය රජයේ ප්රදානයක් ලෙස ඉදිකරන ලද බේලි පාලම් 3ක් ජනතා අයිතියට පත්කිරීම මාර්ගගත ක්රමවේදය ඔස්සේ නායකයින් දෙපළ අතින් සිදුවිය. කුරුණෑගල දිස්ත්රික්කයේ පන්සියගම හා ගෙබල්ලෑව මෙන්ම මඩකලපුව දිස්ත්රික්කයේ පළුකාමම් යන ප්රදේශවල ඉදිකරන ලද මෙම පාලම් මේ අනුව විවෘත විය. මෙම ඓතිහාසික අවස්ථාව සඳහා දෙරටේ ආරක්ෂක අංශ ප්රධානීන්, රාජ්ය තාන්ත්රිකයින් සහ අමාත්යාංශ ලේකම්වරුන් ඇතුළු උසස් නිලධාරී පිරිසක් එක්ව සිටියහ.
කේ ආර් ටී වී නෙට්වර්ක් - දේශීය පුවත් / ද්විපාර්ශ්වික සබඳතා පුවත්
President Anura Kumara Dissanayake Holds Bilateral Discussions with Indian Defence Minister Rajnath Singh: First Visit by Indian Defence Chief in 38 Years Yields Historic Accords and Virtual Bridge Inaugurations
Marking a historic milestone in regional defense and diplomatic relations, Minister of Defence of India Rajnath Singh met with President of Sri Lanka Anura Kumara Dissanayake at the Presidential Secretariat in Colombo. The mission represents the first official visit by an Indian Defence Minister to Sri Lanka in 38 years, underscoring joint commitments to deepen strategic maritime, operational, and institutional synergy across the South Asian corridor.
High-level deliberations encompassed maritime security dynamics, economic partnerships, regional strategic balance, and historical bilateral cooperation. President Dissanayake highlighted Sri Lanka’s comprehensive national campaign aimed at dismantling organized narcotics syndicates, observing that the Indian Ocean basin has increasingly emerged as a major operational transit route for international drug cartels. The President requested enhanced Indian intelligence sharing and interdiction cooperation to curb maritime narcotics trafficking, while expressing confidence that Indian authorities would actively facilitate the legal repatriation of convicted Sri Lankan narcotics traffickers currently detained in India.
The President placed on record Sri Lanka’s gratitude for India’s continuous solidarity during domestic socioeconomic crises, affirming that Sri Lanka exercises sovereign foreign policy and regional cooperation mechanisms with supreme attention to preserving broader regional security and stability. Commending Colombo’s role in keeping the Indian Ocean peaceful and secure, Defence Minister Rajnath Singh reiterated that Sri Lanka occupies a central pillar within India’s ‘Neighbourhood First’ foreign policy doctrine, acknowledging the proactive diplomatic engagement demonstrated under the leadership of President Dissanayake over the past two years. Crucial deliberations also evaluated mutual steps to safeguard coastal fishing livelihoods and constructively settle long-standing maritime fishing disputes.
Cementing defense ties, three major bilateral instruments were exchanged in the presence of both leaders. The instruments comprise an agreement for the comprehensive modernization of L70 air defense systems operated by the Sri Lanka Air Force, an agreement establishing institutional academic linkages between the National Defence College of India and the National Defence College of Sri Lanka, and a formal memorandum governing bilateral engagements between the National Cadet Corps of Sri Lanka and India. The formal instruments were exchanged by Deputy Minister of Defence Major General Aruna Jayasekera (Retired) and the High Commissioner of India to Sri Lanka, Santosh Jha.
Furthermore, President Dissanayake and Defence Minister Rajnath Singh virtually inaugurated three modular Bailey bridges constructed across the Kurunegala and Batticaloa districts with Indian grant assistance. Executed as an emergency connectivity recovery package following infrastructure destruction inflicted by Cyclone Ditwah, the newly commissioned bridges restore public vehicular transport along the Pansiyagama-Kurunegala, Gebellewa-Kurunegala, and Palugamam-Batticaloa road networks.
The formal session and ceremonial inaugurations were attended by Deputy Minister of Defence Major General Aruna Jayasekera (Retd), Secretary to the President Dr. Nandika Sanath Kumanayake, Chief of Staff to the President Prabaath Chandrakeerthi, Senior Additional Secretary to the President Roshan Gamage, Acting Secretary to the Ministry of Defence Indika Wijegunawardena, alongside a high-ranking Indian delegation including Vice Chief of Air Staff Air Marshal Ashutosh Dixit, Vice Chief of Naval Staff Vice Admiral Ajay Kochhar, Deputy Chief of Army Staff Lieutenant General Sandeep Jain, Joint Secretary (PIC) Prasanna Shrivastava, and senior representatives from India’s Ministries of Defence and External Affairs.
KR TV Network - Local News / Bilateral Relations News







Comments