தெல்தெனிய பேஸ்புக் விருந்துபசாரம் முற்றுகை: பெண்கள் உட்பட 41 பேர் போதைப்பொருட்களுடன் கைது
தெல்தெனிய பேஸ்புக் விருந்துபசாரம் முற்றுகை: பெண்கள் உட்பட 41 பேர் போதைப்பொருட்களுடன் கைது
செய்தியாளர்: பர்ஹானா பதுறுதீன்
தெல்தெனிய, விக்டோரியா பகுதியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேஸ்புக் விருந்துபசாரம் ஒன்றை தெல்தெனிய பொலிஸார் சுற்றிவளைத்து சோதனைக்கு உட்படுத்தியுள்ளனர். இந்த அதிரடி நடவடிக்கையின் போது 5 பெண்கள் மற்றும் 36 ஆண்கள் உட்பட மொத்தம் 41 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். தெல்தெனிய பொலிஸ் நிலைய அதிகாரிகளுக்குக் கிடைத்த இரகசிய தகவலுக்கு அமைவாகவே இந்த சுற்றிவளைப்பு முன்னெடுக்கப்பட்டது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களிடமிருந்து 947 மில்லிகிராம் கஞ்சா, 3 கிராம் 657 மில்லிகிராம் ஹேஷ் போதைப்பொருள், 1 கிராம் 276 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள், 18 போதை மாத்திரைகள், 21 சட்டவிரோத சிகரெட்டுகள், 35 பியர் கேன்கள் மற்றும் 13 மதுபான போத்தல்கள் என்பன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்ட ஆண் சந்தேகநபர்கள் 21 முதல் 40 வயதிற்கு இடைப்பட்ட கெலியோய, அலுத்வத்தை, வரகாபொல, பேராதனை, அம்பிட்டிய, கண்டி மற்றும் ஹங்குரன்கெத்த ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் ஆவர். பெண் சந்தேகநபர்கள் 22 முதல் 43 வயதிற்கு இடைப்பட்ட பல்லேகல, பேராதனை, ஹங்குரன்கெத்த, தெஹிவளை மற்றும் கட்டுக்கஸ்தோட்டை பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். சந்தேகநபர்கள் தொடர்பான மேலதிக விசாரணைகளை தெல்தெனிய பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
கே ஆர் டி வி நெட்வொர்க் - உள்நாட்டுச் செய்தி
තෙල්දෙණියේ ෆේස්බුක් සාදයක් වටලයි: කාන්තාවන් ඇතුළු 41 දෙනෙකු මත්ද්රව්ය සමඟ අත්අඩංගුවට
වාර්තාකරු: ෆර්හානා බදුර්දීන්
තෙල්දෙණිය, වික්ටෝරියා ප්රදේශයේ සංවිධානය කර තිබූ ෆේස්බුක් සාදයක් තෙල්දෙණිය පොලිස් නිලධාරීන් විසින් වටලා පරීක්ෂාවට ලක් කර තිබේ. මෙම මෙහෙයුමේදී කාන්තාවන් 5 දෙනෙකු සහ පිරිමි පුද්ගලයින් 36 දෙනෙකු ඇතුළුව සැකකරුවන් 41 දෙනෙකු අත්අඩංගුවට ගෙන ඇත. තෙල්දෙණිය පොලිස් ස්ථානයේ නිලධාරීන්ට ලද රහසිගත තොරතුරකට අනුව මෙම වැටලීම සිදුකර තිබේ.
අත්අඩංගුවට ගත් සැකකරුවන් සන්තකයේ තිබී ගංජා මිලිග්රෑම් 947ක්, හෑෂ් මත්ද්රව්ය ග්රෑම් 3යි මිලිග්රෑම් 657ක්, අයිස් මත්ද්රව්ය ග්රෑම් 1යි මිලිග්රෑම් 276ක්, මත්පෙති 18ක්, නීතිවිරෝධී දුම්වැටි 21ක්, බියර් ටින් 35ක් සහ මත්පැන් බෝතල් 13ක් පොලිස් භාරයට ගෙන ඇත.
අත්අඩංගුවට ගත් පිරිමි සැකකරුවන් වයස අවුරුදු 21 ත් 40 ත් අතර පසුවන ගෙලිඔය, අලුත්වත්ත, වරකපොල, පේරාදෙණිය, අම්පිටිය, මහනුවර සහ හඟුරන්කෙත යන ප්රදේශවල පදිංචිකරුවන් වේ. අත්අඩංගුවට ගත් කාන්තාවන් වයස අවුරුදු 22 ත් 43 ත් අතර පල්ලෙකැලේ, පේරාදෙණිය, හඟුරන්කෙත, දෙහිවල සහ කටුගස්තොට ප්රදේශවල පදිංචිකාරියන් බව වාර්තා වේ. සිද්ධිය සම්බන්ධයෙන් තෙල්දෙණිය පොලිසිය වැඩිදුර පරීක්ෂණ පවත්වයි.
කේ ආර් ටීවී නෙට්වර්ක් - දේශීය පුවත්
Facebook Party Raided in Teldeniya: 41 Arrested with Illicit Drugs Including 5 Women
Reporter: Farhana Badurdeen
Teldeniya Police raided a Facebook-organized party held in the Victoria area, arresting 41 individuals, including 36 men and 5 women. The operation was executed following intelligence received by officers attached to the Teldeniya Police Station regarding illicit substance abuse at the gathering.
During the raid, officers seized 947 milligrams of cannabis, 3 grams and 657 milligrams of hashish, 1 gram and 276 milligrams of crystal methamphetamine (Ice), 18 intoxicating tablets, 21 illicit cigarettes, 35 beer cans (500 ml each), and 13 bottles of liquor (750 ml each) from the possession of the suspects.
The male suspects, aged between 21 and 40, are residents of Gelioya, Aluthwatta, Warakapola, Peradeniya, Ampitiya, Kandy, and Hanguranketha. The female suspects, aged between 22 and 43, hail from Pallekele, Peradeniya, Hanguranketha, Dehiwala, and Katugastota. Teldeniya Police are conducting further investigations before producing the suspects before the magistrate.
KR TV Network - Local News

Comments