தினச்சுடர் தேசிய விருது விழா: இலங்கையின் பல்வேறு துறைகளைச் சேர்ந்த 46 பன்முக ஆளுமைகள் கொழும்பு பொது நூலக மண்டபத்தில் கௌரவிப்பு!
தினச்சுடர் தேசிய விருது விழா: இலங்கையின் பல்வேறு துறைகளைச் சேர்ந்த 46 பன்முக ஆளுமைகள் கொழும்பு பொது நூலக மண்டபத்தில் கௌரவிப்பு!
ஸ்ரீலங்கா ஐக்கிய காங்கிரஸ் ஏற்பாட்டில் ‘தினச்சுடர்’ தேசிய விருது வழங்கும் இரண்டாம் கட்ட நிகழ்வு நேற்று (17) வியாழக்கிழமை காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை கொழும்பு பொது நூலக (பொது வாசிகசாலை) மண்டபத்தில் கோலாகலமாக இடம்பெற்றுள்ளது.
தினச்சுடர் பத்திரிகையின் ஆசிரியரும் மூத்த ஊடகவியலாளருமான ஏ.எம். முபாரக் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி முஜிபுர் ரஹுமான் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார். மேலும், திரைப்பட இயக்குநரும் நடிகருமான திருவாய் மொழி கேசவன் மற்றும் கலைஞர் குணசேகரன் ஆகியோர் சிறப்பு அதிதிகளாகக் கலந்து சிறப்பித்தனர்.
நாட்டின் பல பாகங்களிலிருந்தும் தெரிவு செய்யப்பட்ட ஊடகவியலாளர்கள், கவிஞர்கள், புகைப்படக் கலைஞர்கள், எழுத்தாளர்கள், சமூக செயற்பாட்டாளர்கள், திரைப்படக் கலைஞர்கள், பாடகர்கள், நடிகர்கள், இலக்கியவாதிகள், மேடை நாடகக் கலைஞர்கள், பாடலாசிரியர்கள், சமூக சேவையாளர்கள், நூலாசிரியர்கள், அழகு கலை நிபுணர்கள் மற்றும் விளையாட்டு வீரர்கள் என 46 பன்முக ஆளுமைகள் இவ்விருது வழங்கிச் சிறப்பிக்கப்பட்டனர்.
கே.ஆர்.டி.வி. நெட்வொர்க் | தேசிய / கலாச்சாரச் செய்தி
දිනචුඩර් ජාතික සම්මාන උළෙල: කොළඹ මහජන පුස්තකාල ශාලාවේදී බහුවිධ පෞරුෂයන් 46 දෙනෙකු ඇගයීමට ලක් කෙරේ!
ශ්රී ලංකා එක්සත් කොංග්රසයේ සංවිධානයෙන් ‘දිනචුඩර්’ ජාතික සම්මාන ප්රදානෝත්සවයේ දෙවන අදියර ඊයේ (17) බ්රහස්පතින්දා උදේ 9 සිට පස්වරු 1 දක්වා කොළඹ මහජන පුස්තකාල ශාලාවේදී ඉතා උත්කර්ෂවත් අයුරින් පැවැත්විණි.
දිනචුඩර් පුවත්පතේ කර්තෘ, ජ්යෙෂ්ඨ මාධ්යවේදී ඒ.එම්. මුබාරක් මහතාගේ ප්රධානත්වයෙන් පැවති මෙම උත්සවයට කොළඹ දිස්ත්රික් පාර්ලිමේන්තු මන්ත්රී නීතිඥ මුජිබර් රහුමාන් මහතා ප්රධාන ආරාධිතයා ලෙස එක්විය. සිනමා අධ්යක්ෂ සහ නළු තිරුවායි මොළි කේසවන් සහ කලාකරු ගුණසේකර යන මහත්වරුන් විශේෂ ආරාධිතයන් ලෙස සහභාගී වූහ.
රටේ විවිධ ප්රදේශවලින් තෝරා ගන්නා ලද මාධ්යවේදීන්, කිවියරුන්, ඡායාරූප ශිල්පීන්, ලේඛකයන්, සමාජ ක්රියාකාරීන්, සිනමා ශිල්පීන්, ගායකයන්, නළුවන්, සාහිත්යධරයන්, වේදිකා නාට්ය ශිල්පීන්, ගීත රචකයන්, සමාජ සේවකයන්, ග්රන්ථ කතුවරුන්, රූපලාවන්ය ශිල්පීන් සහ ක්රීඩක ක්රීඩිකාවන් ඇතුළු බහුවිධ පෞරුෂයන් 46 දෙනෙකු මෙහිදී සම්මාන ලබා ගනිමින් ඇගයීමට ලක් කරන ලදී.
කේ.ආර්.ටී.වි නෙට්වර්ක් | ජාතික / සංස්කෘතික පුවත්
Dinachudar National Awards: 46 Multi-Faceted Personalities Honored at the Colombo Public Library Auditorium!
Organized by the Sri Lanka United Congress, the second phase of the 'Dinachudar' National Awards ceremony was held yesterday (17) Thursday from 9:00 AM to 1:00 PM at the Colombo Public Library auditorium.
Chaired by veteran journalist and Dinachudar Editor A.M. Mubarak, the event featured Colombo District Parliamentarian and Attorney-at-Law Mujibur Rahman as the Chief Guest. Film director and actor Thiruvaai Moli Kesavan and artist Gunasekaran participated as Guests of Honour.
A total of 46 multi-faceted personalities—including journalists, poets, photographers, writers, social activists, filmmakers, singers, actors, literary figures, stage drama artists, lyricists, social workers, authors, beauticians, and athletes selected from various parts of the country—were honored with awards for their contributions.
KRTV Network | National / Cultural News















Comments