Skip to main content
Breaking news · In-depth coverage · Analysis
Breaking news · In-depth coverage · Analysis
● Breaking
Latest headlines

மட்டக்குளியில் கார் 4 வாகனங்களுடன் மோதி கோர விபத்து - மூவர் பலியான சோகம்; விபத்தை ஏற்படுத்திய சாரதி கஞ்சா போதையில் இருந்தது மருத்துவப் பரிசோதனையில் உறுதி!





 மட்டக்குளியில் கார் 4 வாகனங்களுடன் மோதி கோர விபத்து - மூவர் பலியான சோகம்; விபத்தை ஏற்படுத்திய சாரதி கஞ்சா போதையில் இருந்தது மருத்துவப் பரிசோதனையில் உறுதி!


செய்தியாளர்: பர்ஹானா பதுர்தீன்


கொழும்பு, மட்டக்குளி - பெர்குசன் சந்தியில் நேற்று (16) இரவு இடம்பெற்ற கோர வீதி விபத்தில் மூன்று பேர் உயிரிழந்ததுடன், காரைச் செலுத்திய சாரதி கஞ்சா போதையில் இருந்தமை சட்ட மருத்துவப் பரிசோதனையில் உறுதியாகியுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


வத்தளைப் பகுதியிலிருந்து அதிவேகமாக வந்த கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து, வீதியில் பயணித்த 2 முச்சக்கரவண்டிகள் மற்றும் 2 மோட்டார் சைக்கிள்கள் மீது மோதி இக்கோர விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்தில் படுகாயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 13 பேரில், சிகிச்சை பலனின்றி 3 பேர் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்கள் கிராண்ட்பாஸ் மற்றும் மட்டக்குளிப் பகுதிகளைச் சேர்ந்த 44 மற்றும் 64 வயதுடையவர்கள் ஆவர்.


அதிவேகமாக வாகனத்தைச் செலுத்தி விபத்தை ஏற்படுத்திய 52 வயதுடைய சந்தேகநபரான சாரதி, இன்று (17) காலை பொலிஸில் சரணடைந்ததை அடுத்துக் கைது செய்யப்பட்டார். அவரிடம் மேற்கொள்ளப்பட்ட சட்ட மருத்துவப் பரிசோதனையில், அவர் விபத்து நடந்தபோது கஞ்சா போதையில் வாகனம் இயக்கியமை சட்டப்பூர்வமாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.


கே.ஆர்.டி.வி. நெட்வொர்க் | தேசிய / விபத்துச் செய்தி


මට්ටක්කුලිය ප්‍රදේශයේදී මෝටර් රථයක් වාහන 4ක ගැටීමෙන් සිදු වූ අනතුරින් තිදෙනෙකු ජීවිතක්ෂයට - රියැදුරු ගංජා පානය කර සිටි බව වෛද්‍ය පරීක්ෂණයෙන් තහවුරු වෙයි!


කොළඹ, මට්ටක්කුලිය - පර්ගියුසන් හන්දියේදී ඊයේ (16) රාත්‍රියේ සිදුවූ බිහිසුණු මාරක රිය අනතුරින් පුද්ගලයින් තිදෙනෙකු ජීවිතක්ෂයට පත්ව ඇති අතර, මෝටර් රථය පැදවූ රියැදුරු ගංජා මත්ද්‍රව්‍ය පානය කර සිට ඇති බව අධිකරණ වෛද්‍ය පරීක්ෂණයකින් තහවුරු වී ඇතැයි පොලිසිය පවසයි.


වත්තල දෙස සිට අධික වේගයෙන් පැමිණි මෝටර් රථයක් පාලනය කරගත නොහැකිව මාර්ගයේ ගමන් කළ ත්‍රිරෝද රථ 2ක සහ මෝටර් රථ/පැදි 2ක ගැටීමෙන් මෙම අනතුර සිදුව ඇත. අනතුරින් බරපතළ තුවාල ලබා කොළඹ ජාතික රෝහලට ඇතුළත් කළ 13 දෙනාගෙන් තිදෙනෙකු ප්‍රතිකාර ලබමින් සිටියදී මියගොස් ඇත. මියගිය අය ග්‍රෑන්ඩ්පාස් සහ මට්ටක්කුලිය ප්‍රදේශවල පදිංචි 44 සහ 64 හැවිරිදි වියේ පසුවන්නන් වෙති.


අනතුර සිදු කර පලාගොස් අද (17) උදෑසන පොලිසියට භාර වූ 52 හැවිරිදි සැකකාර රියැදුරු අත්අඩංගුවට ගෙන ඇත. ඔහුගෙන් ලබාගත් වෛද්‍ය වාර්තා මගින් අනතුර සිදු වන අවස්ථාවේදී ඔහු ගංජා බුදි මතින් සිට ඇති බවට තහවුරු වී තිබේ.


කේ.ආර්.ටී. වි. නෙට්වර්ක්   | ජාතික / අනතුරු පුවත්


Tragic Mattakkuliya Accident: Three Dead After Car Rams Into Four Vehicles; Medical Tests Confirm Driver Was Under the Influence of Cannabis!


Reporter: Farhana Bathurdeen


Colombo police have confirmed that the driver responsible for the horrific traffic accident at the Ferguson Junction in Mattakkuliya last night (16)—which claimed three lives—was driving under the influence of cannabis, as proven by judicial medical tests.


A speeding car traveling from Wattala lost control and crashed into two trishaws and two motorcycles. Thirteen individuals injured in the collision were rushed to the National Hospital of Colombo, where three succumbed to their injuries. The deceased, aged 44 and 64, are residents of Grandpass and Mattakkuliya.


The 52-year-old suspect driver surrendered to the police this morning (17) and was immediately taken into custody. Subsequent medical examinations confirmed that he was intoxicated on cannabis at the time of the fatal crash.


KRTV Network | National / Accident News

Comments