நாட்டின் பல பகுதிகளில் இன்று மழை மற்றும் இடியுடன் கூடிய மழை: நான்கு மாவட்டங்களில் 50 மி.மீ அளவிலான பலத்த மழைவீழ்ச்சி சாத்தியம் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறல்
நாட்டின் பல பகுதிகளில் இன்று மழை மற்றும் இடியுடன் கூடிய மழை: நான்கு மாவட்டங்களில் 50 மி.மீ அளவிலான பலத்த மழைவீழ்ச்சி சாத்தியம் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறல்
மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் இன்று அதிகாலை 05.30 மணிக்கு வெளியிட்டுள்ள உத்தியோகபூர்வ வானிலை முன்னறிவிப்பில் தெரிவித்துள்ளது.
குறிப்பாக காலி, மாத்தறை, களுத்துறை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களின் சில இடங்களில் 50 மில்லிமீற்றருக்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. வடமேல் மாகாணத்தில் பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என்பதுடன், ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் முல்லைத்தீவு மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களிலும் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் பல இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடிய சாத்தியக்கூறுகள் காணப்படுகின்றன. இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாக வீசக்கூடிய பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைத்துக்கொள்ள பொதுமக்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
கே ஆர் டி வி நெட்வொர்க் - உள்நாட்டுச் செய்தி / காலநிலை மற்றும் அனர்த்த முன்னெச்சரிக்கைச் செய்தி
දිවයිනේ ප්රදේශ රැසකට අද වැසි සහ ගිගුරුම් සහිත වැසි: දිස්ත්රික්ක හතරකට මිලිමීටර් 50 ඉක්මවූ තරමක තද වැසි අපේක්ෂා කරන බවට කාලගුණ විද්යා දෙපාර්තමේන්තුවෙන් අනාවැකියක්
බස්නාහිර සහ සබරගමුව පළාත්වලත් ගාල්ල, මාතර, මහනුවර සහ නුවරඑළිය දිස්ත්රික්කවලත් විටින් විට වැසි ඇතිවිය හැකි බව කාලගුණ විද්යා දෙපාර්තමේන්තුව අද (18) අලුයම 05.30ට නිකුත් කළ නිල කාලගුණ අනාවැකිය මඟින් සඳහන් කරයි.
විශේෂයෙන් ගාල්ල, මාතර, කළුතර සහ රත්නපුර දිස්ත්රික්කවල ඇතැම් ස්ථානවලට මිලිමීටර් 50ට වැඩි තරමක තද වැසි ඇතිවිය හැක. වයඹ පළාතේ වැසි වාර කිහිපයක් ඇතිවිය හැකි අතර, ඌව සහ නැගෙනහිර පළාත්වලත් මුලතිව් සහ පොළොන්නරුව දිස්ත්රික්කවලත් පස්වරු 1.00 න් පසුව තැනින් තැන වැසි හෝ ගිගුරුම් සහිත වැසි ඇතිවීමේ හැකියාවක් පවතී. ගිගුරුම් සහිත වැසි සමඟ ඇතිවිය හැකි තාවකාලික තද සුළංවලින් සහ අකුණු මඟින් සිදුවන අනතුරු අවම කරගැනීමට අවශ්ය ආරක්ෂිත පියවර ගන්නා ලෙස කාලගුණ විද්යා දෙපාර්තමේන්තුව මහජනතාවගෙන් කාරුණිකව ඉල්ලා සිටියි.
කේ ආර් ටී වී නෙට්වර්ක් - දේශීය පුවත් / කාලගුණ හා ආපදා පූර්ව අනතුරු ඇඟවීම් පුවත්
Showers and Thundershowers Forecast Across Sri Lanka Today: Rainfall Over 50mm Expected in Four Districts
Showers are forecast to occur at times across Western and Sabaragamuwa provinces, as well as throughout Galle, Matara, Kandy, and Nuwara-Eliya districts, according to the official advisory issued by the Department of Meteorology at 05.30 a.m. today (18).
Fairly heavy showers exceeding 50 mm are likely in isolated areas within Galle, Matara, Kalutara, and Ratnapura districts. Several spells of showers will affect the North-Western province, while showers or thundershowers are anticipated across several locations in Uva and Eastern provinces, as well as in Mullaittivu and Polonnaruwa districts, particularly after 1:00 p.m. The general public is requested to adopt necessary safety precautions to minimize potential hazards caused by localized strong winds and lightning strikes during thundershowers.
KR TV Network - Local News / Weather and Disaster Advisory

Comments