Skip to main content
Breaking news · In-depth coverage · Analysis
Breaking news · In-depth coverage · Analysis
● Breaking
Latest headlines

சர்வதேச போதைப்பொருள் வர்த்தகர் ஷிரான் பாஸிக்கை விடுவிக்க 500 கோடி ரூபா (5 பில்லியன்) லஞ்ச முயற்சியா? அரசியல்வாதிகள், சொத்துக்கள் மற்றும் கறுப்புப் பணம் குறித்துப் புலனாய்வுத் தீவிரம்


 சர்வதேச போதைப்பொருள் வர்த்தகர் ஷிரான் பாஸிக்கை விடுவிக்க 500 கோடி ரூபா (5 பில்லியன்) லஞ்ச முயற்சியா? அரசியல்வாதிகள், சொத்துக்கள் மற்றும் கறுப்புப் பணம் குறித்துப் புலனாய்வுத் தீவிரம்


செய்தியாளர்: பர்ஹானா பதுறுதீன்


டுபாய் மற்றும் பாகிஸ்தானைத் தளமாகக் கொண்டியங்கும் சர்வதேச போதைப்பொருள் கடத்தல் வலையமைப்புடன் தொடர்புடைய முக்கிய நபரான ஷிரான் பாஸிக்கை விடுவிப்பதற்காக சுமார் 500 கோடி ரூபாய் (5 பில்லியன்) பணத்தை லஞ்சமாக வழங்க முயற்சி மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படும் விவகாரம் தொடர்பில் பாதுகாப்புப் பிரிவினரின் விசாரணைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.


ஷிரான் பாஸிக் வழங்கிய வாக்குமூலங்கள் மற்றும் வாக்குமூல ஆவணங்களின் அடிப்படையில், அரசியல்வாதிகள் மற்றும் அவரது வர்த்தக பங்காளிகள் பலரிடம் விசாரணைக் குழுக்கள் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றன. இதன் ஒரு கட்டமாக, தெஹிவளை–கல்கிஸ்ஸ முன்னாள் மேயர் தனசிறி அமரதுங்க மற்றும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் அருந்திக பெர்னாண்டோ ஆகியோரிடம் மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தினர் (CCIB) அண்மையில் வாக்குமூலங்களைப் பதிவு செய்துள்ளனர்.


முன்னாள் மேயர் தனசிறி அமரதுங்க, போதைப்பொருள் கடத்தல் மூலம் ஈட்டப்பட்டதாகக் கூறப்படும் நிதியைச் சட்டபூர்வமான சொத்துக்களாக மாற்றுவதற்கும் (Money Laundering), அரசியல் கூட்டங்களை நடத்துவதற்கும் உதவினாரா என்பது குறித்தும் விசாரணைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. அதேநேரம், தெஹிவளை மற்றும் வெள்ளவத்தை கடற்கரையோரங்களில் பாஸிக்கினால் அமைக்கப்பட்டதாகக் கூறப்படும் ஹோட்டல்களுக்கான அனுமதிகள் பெறப்பட்ட பின்னணி தொடர்பிலும் அதிகாரிகள் அவதானம் செலுத்தியுள்ளனர்.


விசாரணையின் அடுத்தகட்டமாக, பாஸிக்கின் வங்கிப் பரிமாற்றங்கள், தொலைபேசித் தரவுகள் மற்றும் சொத்து ஆவணங்கள் தீவிர ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றன. மேலும், இவருடன் தொடர்புகளைப் பேணியதாகக் கூறப்படும் முக்கிய அரசியல் பிரமுகர்கள் பலரிடம் வாக்குமூலங்களைப் பதிவு செய்யவும் ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதேவேளை, சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள கடற்கரையோரக் கட்டுமானங்கள் மற்றும் ஹோட்டல்களுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அரசாங்கம் ஏற்கெனவே அறிவித்துள்ளது.


கே ஆர் டி வி நெட்வொர்க் - உள்நாட்டுச் செய்தி / குற்றவியல் புலனாய்வுச் செய்தி


ජාත්‍යන්තර මත්ද්‍රව්‍ය ජාවාරම්කරු ශිරාන් බාසික් මුදාගැනීමට රුපියල් කෝටි 500ක (බිලියන 5ක) අල්ලස් ප්‍රයත්නයක්?: දේශපාලඥයින් සහ කළු සල්ලි පිළිබඳ විමර්ශන දැඩි වෙයි


වාර්තාකරු: ෆර්හානා බදුර්දීන්


ඩුබායි සහ පාකිස්ථානය කේන්ද්‍ර කරගනිමින් ක්‍රියාත්මක වන ජාත්‍යන්තර මත්ද්‍රව්‍ය ජාලයක ප්‍රධානියෙකු වන ශිරාන් බාසික් නමැත්තා නීතියෙන් මුදාගැනීම වෙනුවෙන් රුපියල් කෝටි 500ක (රුපියල් බිලියන 5ක) දැවැන්ත අල්ලස් මුදලක් ලබාදීමට සැලසුම් කර ඇති බවට ලැබී ඇති තොරතුරු ඔස්සේ ආරක්ෂක අංශ සිය විමර්ශන දැඩි කර තිබේ.


රඳවා තබාගෙන ප්‍රශ්න කරනු ලබන ශිරාන් බාසික් ලබාදී ඇති ප්‍රකාශයන්ට අනුව, ඔහු සමඟ සබඳතා පැවැත්වූ බවට සැකකෙරෙන දේශපාලනඥයින් සහ ව්‍යාපාරිකයින්ගෙන් ප්‍රකාශ සටහන් කරගැනීම ආරම්භ වී ඇත. ඒ අනුව, දෙහිවල-ගල්කිස්ස හිටපු නගරාධිපති ධනසිරි අමරතුංග සහ හිටපු රාජ්‍ය අමාත්‍ය අරුන්දික ප්‍රනාන්දු යන අයගෙන් මධ්‍යම අපරාධ විමර්ශන කාර්යාංශය (CCIB) විසින් මෑතකදී ප්‍රකාශ සටහන් කරගෙන තිබේ.


මත්ද්‍රව්‍ය ජාවාරමෙන් උපයාගත් කළු සල්ලි නීත්‍යානුකූල වත්කම් බවට පත්කිරීමට (Money Laundering) ආධාර අනුබල දීම සහ දේශපාලන කටයුතු සඳහා මුදල් යෙදවීම සම්බන්ධයෙන් හිටපු නගරාධිපතිවරයාගෙන් කරුණු විමසා ඇති බව වාර්තා වේ. එමෙන්ම, දෙහිවල හා වැල්ලවත්ත වෙරළබඩ තීරයේ හෝටල් ඉදිකිරීමට අනුමැතිය ලබාදීම පිළිබඳවද විමර්ශකයන්ගේ විශේෂ අවධානය යොමුව ඇත.


ඉදිරි පියවර වශයෙන් සැකකරුගේ බැංකු ගිණුම් වාර්තා, දුරකථන දත්ත හා වත්කම් පරීක්ෂා කෙරෙමින් පවතින අතර, ඔහු සමඟ ගනුදෙනු කළ බව කියන තවත් ප්‍රබල දේශපාලනඥයින් කිහිප දෙනෙකුගෙන් ඉදිරියේදී ප්‍රකාශ ලබාගැනීමට නියමිතය. මේ අතර වෙරළබඩ තීරයේ අනවසරයෙන් ඉදිකර ඇති හෝටල් හා ඉදිකිරීම් ඉවත් කිරීමට රජය පියවර ගන්නා බවද ප්‍රකාශ කර ඇත.


කේ ආර් ටී වී නෙට්වර්ක් - දේශීය පුවත් / අපරාධ විමර්ශන පුවත්


Rs. 5,000 Million Bribe Bid to Free Drug Kingpin Shiran Basik Under Probe: High-Profile Politicians and Money Laundering Under Scrutiny


Reporter: Farhana Badurdeen


Law enforcement authorities have intensified multi-agency inquiries into credible intelligence indicating that an estimated Rs. 5,000 million (Rs. 5 billion) war chest was orchestrated by transnational drug networks to buy the release of high-profile narcotics operative Shiran Basik, who was recently deported from Dubai.


Acting upon disclosures elicited during Basik's interrogation, detectives attached to the Central Crime Investigation Bureau (CCIB) have recorded statements from key political figures, including former Dehiwala-Mount Lavinia Mayor Dhanasiri Amaratunga and former State Minister Arundika Fernando.


Investigators are probing whether drug profits were laundered into legitimate commercial properties, real estate portfolios, and campaign funds, alongside examining the administrative approvals granted for the construction of hotels across the Wellawatte and Dehiwala beachfronts.


Financial Intelligence Unit (FIU) forensic teams and the Illegal Assets Investigation Division are actively auditing linked bank accounts and telecommunication records. Several more prominent political figures identified in connection with the network are slated to be questioned in the coming days, while authorities reiterate plans to clamp down on unauthorized coastal establishments.


KR TV Network - Local News / Investigative News

Comments