மியாமி விமான நிலையத்தில் அமேசன் சரக்கு விமானம் விபத்து: 5 பேர் பலி, பலரும் காயம்!
மியாமி விமான நிலையத்தில் அமேசன் சரக்கு விமானம் விபத்து: 5 பேர் பலி, பலரும் காயம்!
அமெரிக்காவின் மியாமி சர்வதேச விமான நிலையத்தில் அமேசன் நிறுவனத்திற்குச் சொந்தமான சரக்கு விமானம் ஒன்று ஓடுபாதையை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் ஐவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் பலர் காயமடைந்துள்ளனர்.
போர்ட்டோ ரிகோவின் சான் ஜுவானில் இருந்து பயணித்த குறித்த விமானம், உள்ளூர் நேரப்படி மதியம் 2 மணியளவில் ஓடுபாதையை விட்டு விலகி, வணிக நிறுவனங்கள் இயங்கும் வீதியைக் கடந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. அப்போது அங்கு நின்ற வாகனங்கள் மீதும் விமானம் மோதியதால் தீப்பற்றியதுடன், 200க்கும் மேற்பட்ட அவசரகாலப் பணியாளர்கள் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
இச்சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் விமானத்தில் பயணித்தவர்களா அல்லது விமானம் மோதிய வாகனங்களில் இருந்தவர்களா என்பது குறித்த மேலதிக தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை.
செய்தியாளர்:பர்ஹானா பதுர்தீன்
கே.ஆர்.டி.வி. நெட்வொர்க் | உலகச் செய்தி
මියාමි ගුවන් තොටුපළේදී ඇමසන් භාණ්ඩ ප්රවාහන ගුවන් යානයක් අනතුරට ලක්වීමෙන් 5 දෙනෙක් මරුමුවට!
ඇමරිකාවේ මියාමි ජාත්යන්තර ගුවන් තොටුපළේදී ඇමසන් සමාගමට අයත් භාණ්ඩ ප්රවාහන ගුවන් යානයක් ධාවන පථයෙන් ඉවතට පැන සිදුවූ අනතුරකින් පුද්ගලයින් 5 දෙනෙකු ජීවිතක්ෂයට පත්ව තිබේ.
පුවර්ටෝ රිකෝ හි සැන් ජුවාන් සිට පැමිණි මෙම ගුවන් යානය දේශීය වේලාවෙන් දහවල් 2:00 ට පමණ ධාවන පථයෙන් ඉවතට පැන, ව්යාපාරික ස්ථාන පිහිටි මාර්ගය හරහා ගොස් අනතුරට ලක්ව ඇත. එම අවස්ථාවේදී එහි තිබූ වාහන මතටද යානය ගැටීමෙන් ගින් හටගත් අතර, හදිසි ගැලවීමේ සේවකයන් 200කට අධික පිරිසක් මේ වන විට මුදාගැනීමේ මෙහෙයුම්වල නිරතව සිටිති.
මෙම අනතුරින් ජීවිතක්ෂයට පත්වූයේ ගුවන් යානයේ සිටි පුද්ගලයන්ද නැතහොත් යානය ගැටුණු වාහනවල සිටි අයද යන්න පිළිබඳව මෙතෙක් නිශ්චිත තොරතුරු අනාවරණය වී නොමැත.
වාර්තාකරු: ෆර්හානා බදුර්දීන්
කේ.ආර්.ටී.වි.නෙට්වර්ක් | ලෝක පුවත්
Reporter: Farhana Badruddin
Amazon Cargo Plane Crashes at Miami International Airport, Leaving Five Dead!
An Amazon cargo plane veered off the runway at Miami International Airport, resulting in the tragic deaths of five individuals and injuring several others.
Traveling from San Juan, Puerto Rico, the aircraft overshot the runway around 2:00 PM local time, crossing onto a roadway utilized by local commercial businesses. The plane collided with vehicles in the area, sparking a fire, while over 200 emergency responders rushed to the scene to conduct rescue operations.
Authorities are yet to confirm whether the fatalities occurred among those on board the aircraft or within the vehicles struck during the impact.
Reporter: Farhana Bathur deen
KRTV Network | World News

Comments