Skip to main content
Breaking news · In-depth coverage · Analysis
Breaking news · In-depth coverage · Analysis
● Breaking
Latest headlines

தாமதமடைந்துள்ள அனைத்து வாகன இலக்கத் தகடுகளும் 6 மாத காலத்திற்குள் வழங்கி முடிக்கப்படும்: மோட்டார் போக்குவரத்து திணைக்களம் அறிவிப்பு


 தாமதமடைந்துள்ள அனைத்து வாகன இலக்கத் தகடுகளும் 6 மாத காலத்திற்குள் வழங்கி முடிக்கப்படும்: மோட்டார் போக்குவரத்து திணைக்களம் அறிவிப்பு


நாட்டில் இதுவரை விநியோகிக்கப்படாமல் தாமதமடைந்துள்ள அனைத்து வாகன இலக்கத் தகடுகளும் எதிர்வரும் ஆறு மாத காலப்பகுதிக்குள் முழுமையாக வழங்கி முடிக்கப்படும் என மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் (DMT) உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.


இவ்வாறு நிலுவையிலுள்ள அனைத்து இலக்கத் தகடுகளும் விநியோகிக்கப்பட்டு முடிவடைந்த பின்னர், புதிதாக வாகனம் ஒன்று பதிவு செய்யப்பட்டு ஒரு வார காலத்திற்குள் அதற்குரிய நிரந்தர இலக்கத் தகடுகளை உரிமையாளர்களுக்கு வழங்குவதற்குத் தேவையான அனைத்து ஏற்பாடுகளும் நடைமுறைப்படுத்தப்படும் என மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் ஓய்வுபெற்ற எயார் வைஸ் மார்ஷல் துஷார பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். இலக்கத் தகடுகள் பற்றாக்குறை காரணமாக வாகன உரிமையாளர்கள் மற்றும் சாரதிகள் நீண்டகாலமாக எதிர்நோக்கி வந்த நிர்வாக மற்றும் நடைமுறைச் சிக்கல்களுக்கு இதன் மூலம் நிரந்தர தீர்வு கிட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.


கே ஆர் டி வி நெட்வொர்க் - உள்நாட்டுச் செய்தி / போக்குவரத்துச் செய்தி


ප්‍රමාද වී ඇති සියලුම වාහන අංක තහඩු මාස 6ක් ඇතුළත නිකුත් කර අවසන් කරන බවට මෝටර් රථ ප්‍රවාහන දෙපාර්තමේන්තුවෙන් ප්‍රකාශයක්


මෙතෙක් නිකුත් කිරීම ප්‍රමාද වී ඇති සියලුම වාහන අංක තහඩු ඉදිරි මාස 6ක කාලය තුළ මුළුමනින්ම ලබාදී අවසන් කිරීමට පියවර ගන්නා බව මෝටර් රථ ප්‍රවාහන දෙපාර්තමේන්තුව (DMT) නිවේදනය කර තිබේ.


එම ප්‍රමාද වී ඇති සියලුම අංක තහඩු නිකුත් කර අවසන් කිරීමෙන් අනතුරුව, අලුතින් වාහනයක් ලියාපදිංචි කර සතියක කාලයක් ඇතුළත ඊට අදාළ අංක තහඩු නිකුත් කිරීමට අවශ්‍ය යාන්ත්‍රණය ක්‍රියාත්මක කරන බව මෝටර් රථ ප්‍රවාහන කොමසාරිස් ජනරාල් විශ්‍රාමික එයාර් වයිස් මාර්ෂල් තුෂාර ප්‍රනාන්දු මහතා ප්‍රකාශ කළේය. අංක තහඩු හිඟය හේතුවෙන් වාහන හිමිකරුවන් දීර්ඝ කාලයක් තිස්සේ මුහුණ දුන් අපහසුතාවන්ට මේ හරහා කඩිනම් විසඳුම් හිමිවනු ඇතැයි අපේක්ෂා කෙරේ.


කේ ආර් ටී වී නෙට්වර්ක් - දේශීය පුවත් / ප්‍රවාහන පුවත්


All Backlogged Vehicle Number Plates to Be Issued Within Six Months: Department of Motor Traffic Outlines Accelerated Delivery Mechanism


The Department of Motor Traffic (DMT) has announced that the entire backlog of pending vehicle registration number plates will be systematically cleared and issued within a six-month timeframe.


Following the clearance of all delayed license plates, an expedited operational process will be enforced to issue permanent number plates within one week of a vehicle’s registration, stated Commissioner General of Motor Traffic, Retired Air Vice Marshal Thushara Fernando. The strategic resolution is intended to mitigate protracted administrative delays and eliminate compliance hurdles routinely encountered by domestic motorists due to historical material and logistical shortages.


KR TV Network - Local News / Transport News

Comments