Skip to main content
Breaking news · In-depth coverage · Analysis
Breaking news · In-depth coverage · Analysis
● Breaking
Latest headlines

மன்னாரில் 67 கிலோவுக்கும் அதிகமான, 50 கோடி ரூபா பெறுமதியான திமிங்கலத்தின் வாந்தி மீட்பு - இருவர் கைது!


 மன்னாரில் 67 கிலோவுக்கும் அதிகமான, 50 கோடி ரூபா பெறுமதியான திமிங்கலத்தின் வாந்தி மீட்பு - இருவர் கைது!


மன்னார் – செளத்பார் கடற்கரைப் பகுதியில் இலங்கை கடற்படையினர் மேற்கொண்ட அதிரடிச் சோதனையின் போது, சர்வதேச சந்தையில் பல கோடி ரூபா மதிப்புடைய 67 கிலோவுக்கும் அதிகமான 'அம்பர் கிரிஸ்' (Ambergris) எனப்படும் திமிங்கலத்தின் வாந்தி கைப்பற்றப்பட்டுள்ளது.


 கடந்த செப்டெம்பர் 11ஆம் திகதி முன்னெடுக்கப்பட்ட இச்சோதனை நடவடிக்கையின் போது, சட்டவிரோதமான முறையில் அம்பர் கிரிஸை தம்வசம் வைத்திருந்தமை மற்றும் வர்த்தகத்தில் ஈடுபட முயன்றமை தொடர்பில் சந்தேகத்தின் பேரில் இருவர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.


 கைப்பற்றப்பட்ட அம்பர் கிரிஸின் சர்வதேச சந்தைப் பெறுமதி சுமார் 50 கோடி ரூபாவிற்கும் அதிகம் என மதிப்பிடப்பட்டுள்ளது. இலங்கையின் விலங்கின மற்றும் தாவர பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் கீழ் அம்பர் கிரிஸ் வர்த்தகம் முழுமையாகத் தடை செய்யப்பட்டுள்ளதால், மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காகச் சந்தேக நபர்களும் கைப்பற்றப்பட்ட பொருளும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாகக் கடற்படை தெரிவித்துள்ளது.


கே.ஆர்.டி.வி. நெட்வொர்க் | பிராந்தியச் செய்தி


 මන්නාරමෙන් කිලෝග්‍රෑම් 67 කට අධික, රුපියල් කෝටි 50 කට අධික වටිනාකමකින් යුත් තිමිර වමනය (Ambergris) සමඟ සැකකරුවන් දෙදෙනෙක් අත්අඩංගුවට!


මන්නාරම - සවුත්පාර් වෙරළ තීරයේ ශ්‍රී ලංකා නාවික හමුදාව විසින් සිදු කරන ලද සෝදිසි මෙහෙයුමකදී, අන්තර්ජාතික වෙළඳපොලේ අතිශය ඉහළ වටිනාකමකින් යුත් කිලෝග්‍රෑම් 67 කට අධික 'ඇම්බර්ග්‍රිස්' (Ambergris) නැතහොත් තිමිර වමනය තොගයක් අත්අඩංගුවට ගෙන තිබේ.


 සැප්තැම්බර් 11 වැනි දින සිදු කරන ලද මෙම මෙහෙයුමේදී, නීතිවිරෝධී ලෙස මෙම තිමිර වමනය ළඟ තබාගෙන සිටි සැකකරුවන් දෙදෙනෙකු නාවික හමුදා භාරයට ගෙන ඇත.


 අත්අඩංගුවට ගෙන ඇති ඇම්බර්ග්‍රිස් තොගයේ වටිනාකම රුපියල් මිලියන 500 (කෝටි 50) ඉක්මවන බව සඳහන් වේ. ශ්‍රී ලංකාවේ සත්ව හා ශාක ආරක්ෂක ආඥාපනත යටතේ ඇම්බර්ග්‍රිස් ජාවාරම දැඩි ලෙස තහනම් කර ඇති බැවින්, වැඩිදුර නීතිමය කටයුතු සඳහා සැකකරුවන් සහ අදාළ තොගය අදාළ බලධාරීන් වෙත භාර දීමට නියමිතය.


කේකේ.ආර්.ටී.වි. නෙට්වර්ක් ප්‍රාදේශීය පුවත් 


 Over 67 Kilograms of Ambergris Valued at Rs. 50 Crores Seized in Mannar; Two Suspects Arrested by Navy!


The Sri Lanka Navy has successfully intercepted and seized over 67 kilograms of ambergris (whale vomit)—valued at an estimated street value exceeding Rs. 50 crores—during a targeted search operation in the Southbar coastal area of Mannar.


 Conducted on September 11, the operation led to the apprehension of two suspects who were allegedly in illegal possession of the high-value marine substance, suspected to be intended for illicit smuggling.


Authorities noted that the trade of ambergris is strictly prohibited under Sri Lanka’s Fauna and Flora Protection Ordinance. The recovered consignment, alongside the detained suspects, is being handed over to relevant law enforcement agencies for further legal proceedings.


KRTV Network | Regional News

Comments