Skip to main content
Breaking news · In-depth coverage · Analysis
Breaking news · In-depth coverage · Analysis
● Breaking
Latest headlines

முன்னாள் பிரதியமைச்சர் சரண குணவர்தனவின் தண்டனையைக் குறைக்க 750,000 ரூபா கையூட்டல் பெற்ற குற்றச்சாட்டில் நீதிமன்ற உதவியாளர் கைது செய்யப்பட்டு விளக்கமறியல்


 முன்னாள் பிரதியமைச்சர் சரண குணவர்தனவின் தண்டனையைக் குறைக்க 750,000 ரூபா கையூட்டல் பெற்ற குற்றச்சாட்டில் நீதிமன்ற உதவியாளர் கைது செய்யப்பட்டு விளக்கமறியல்


செய்தியாளர்: பர்ஹானா பதுறுதீன்


முன்னாள் பிரதியமைச்சர் சரண குணவர்தனவுக்கு எதிரான ஊழல் வழக்கில் நீதிமன்றத் தண்டனையைக் குறைத்துத் தருவதாக உறுதியளித்து, அவரது மனைவியிடம் 750,000 ரூபா கையூட்டல் (இலஞ்சம்) பெற்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட நீதிமன்ற உதவியாளர் ஒருவர் எதிர்வரும் செப்டம்பர் 22 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். கொழும்பு பிரதான நீதவான் அசங்க போதரம இந்த விளக்கமறியல் உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.


இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்தல்களைப் புலனாய்வு செய்யும் ஆணைக்குழுவினால் (CIABOC) மன்றில் சமர்ப்பிக்கப்பட்ட ஆதாரங்கள் மற்றும் சாட்சியங்களைக் கருத்திற்கொண்டு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஜி.ஏ. சரித் குமார என அடையாளம் காணப்பட்ட சந்தேகநபர், கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ஒருவர் விடுத்த உத்தியோகபூர்வ முறைப்பாட்டின் அடிப்படையில் முன்னெடுக்கப்பட்ட புலனாய்வு விசாரணைகளின் தொடர்ச்சியாகக் கைது செய்யப்பட்டுள்ளார்.


சந்தேகநபர் குறித்த மேல் நீதிமன்ற நீதிபதியைத் தொலைபேசி ஊடாகத் தொடர்புகொண்டு இவ்வழக்கு தொடர்பாகப் பேச முயன்றுள்ளார். வழக்குகளைப் பற்றிப் பேசுவதற்கு அவருக்கு என்ன அதிகாரம் உள்ளது என நீதிபதி வினவி அவருடன் கலந்துரையாட மறுத்தபோது, இதனை நீதிமன்றத்தில் பேச முடியாது என்றும் தனியாகச் சந்தித்துப் பேசலாம் என்றும் சந்தேகநபர் குறிப்பிட்டுள்ளார்.


இச்சம்பவத்துடன் தொடர்புடையதாகக் கருதப்படும் அத்தனகல்ல நீதிமன்ற அதிகாரி ஒருவர் மற்றும் கொழும்பு மேல் நீதிமன்றத்தின் புத்தகக் கட்டுநர் (Book Binder) ஒருவர் தொடர்பிலும் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. முன்னதாக, அபிவிருத்தி அதிர்ஷ்டலாபச் சபையின் தலைவராகப் பதவி வகித்த காலத்தில் வாகனங்களைத் தவறாகப் பயன்படுத்தியமை தொடர்பான 18 குற்றச்சாட்டுகளில் குற்றவாளியாகக் காணப்பட்ட சரண குணவர்தனவுக்கு, கொழும்பு மேல் நீதிமன்றம் கடந்த ஜூன் மாதம் 16 ஆண்டுகள் கடூழியச் சிறைத்தண்டனை விதித்துத் தீர்ப்பளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


கே ஆர் டி வி நெட்வொர்க் - உள்நாட்டுச் செய்தி / சட்டச் செய்தி


හිටපු නියෝජ්‍ය අමාත්‍ය සරණ ගුණවර්ධනගේ දඬුවම ලිහිල් කිරීමට රුපියල් ලක්ෂ හතහමාරක අල්ලසක් ගත් අධිකරණ සහයකයෙකු අත්අඩංගුවට ගෙන රක්ෂිත බන්ධනාගාරගත කරයි


වාර්තාකරු: ෆර්හානා බදුර්දීන්


හිටපු නියෝජ්‍ය අමාත්‍ය සරණ ගුණවර්ධන මහතාට එරෙහි දූෂණ නඩුවකදී අධිකරණය මඟින් නියම කළ දඬුවම ලිහිල් කර දෙන බව පවසමින් ඔහුගේ බිරිඳගෙන් රුපියල් 750,000 ක අල්ලස් මුදලක් ලබාගත් බවට චෝදනා ලැබූ අධිකරණ සහයකයෙකු ලබන සැප්තැම්බර් 22 වනදා දක්වා රක්ෂිත බන්ධනාගාරගත කිරීමට කොළඹ ප්‍රධාන මහේස්ත්‍රාත් අසංග බෝදරගම මහතා නියෝග කර තිබේ.


අල්ලස් හෝ දූෂණ චෝදනා විමර්ශන කොමිෂන් සභාව (CIABOC) විසින් අධිකරණයට ඉදිරිපත් කළ කරුණු සලකා බැලීමෙන් අනතුරුව මෙම නියෝගය ලබාදී ඇත. ජී.ඒ. චරිත් කුමාර නමැති මෙම සැකකරු අත්අඩංගුවට ගෙන ඇත්තේ කොළඹ මහාධිකරණ විනිසුරුවරයෙකු විසින් කරන ලද පැමිණිල්ලකට අනුව සිදුකළ විමර්ශනයකින් අනතුරුවය.


අදාළ මහාධිකරණ විනිසුරුවරයා දුරකථනයෙන් ඇමතූ සැකකරු මෙම නඩුව පිළිබඳව සාකච්ඡා කිරීමට උත්සාහ කර ඇති අතර, විභාග වන නඩු සම්බන්ධයෙන් කතා කිරීමට ඇති අයිතිය ප්‍රශ්න කරමින් විනිසුරුවරයා ඊට දැඩි විරෝධය පළකර ඇත. එහිදී මෙම කරුණු විවෘත අධිකරණයේ කතා කළ නොහැකි බවත් පෞද්ගලිකව හමුවී කතා කරමු යැයි සැකකරු පවසා තිබේ.


මෙම අල්ලස් සිදුවීමට ආධාර අනුබල දුන් බව කියන අත්තනගල්ල අධිකරණයේ නිලධාරියෙකු සහ කොළඹ මහාධිකරණයේ පොත් බඳින්නෙකු (Book Binder) සම්බන්ධයෙන්ද පුළුල් විමර්ශන ක්‍රියාත්මකය. සංවර්ධන ලොතරැයි මණ්ඩලයේ සභාපතිවරයාව සිටියදී වාහන අවභාවිත කිරීමේ චෝදනා 18කට වරදකරු කරමින් සරණ ගුණවර්ධන මහතාට පසුගිය ජූනි මාසයේදී කොළඹ මහාධිකරණය මඟින් වසර 16ක බරපතළ වැඩසහිත සිරදඬුවම් නියම කර තිබුණි.


කේ ආර් ටී වී නෙට්වර්ක් - දේශීය පුවත් / අධිකරණ පුවත්


Court Assistant Remanded Over Alleged Rs. 750,000 Bribe to Mitigate Former Deputy Minister Sarana Gunawardena’s Sentence


Reporter: Farhana Badurdeen


A court assistant arrested on charges of soliciting and accepting a bribe of Rs. 750,000 from the spouse of former Deputy Minister Sarana Gunawardena—promising to secure a reduction of his court-imposed sentence—has been remanded until 22 September by Colombo Chief Magistrate Asanga Bodaragama.


The committal followed legal submissions presented by investigators attached to the Commission to Investigate Allegations of Bribery or Corruption (CIABOC). The suspect, identified as G.A. Charith Kumara, was taken into custody subsequent to an inquiry initiated upon a formal judicial complaint lodged by a judge of the Colombo High Court.


Investigations revealed that the suspect contacted the High Court judge via telephone attempting to discuss proceedings connected to the case. When the judge challenged his authority to intervene and refused dialogue, the suspect urged a private off-bench consultation, claiming the matter could not be addressed within court chambers.


Investigative arms are also probing the alleged complicity of an official attached to the Attanagalla Court alongside a bookbinder serving at the Colombo High Court. Previously, in June, the Colombo High Court sentenced Sarana Gunawardena to 16 years of rigorous imprisonment after finding him guilty across 18 counts concerning vehicle misappropriation during his tenure as Chairman of the Development Lotteries Board.


KR TV Network - Local News / Legal News

Comments