ஈஸ்டர் தாக்குதலுடன் என்னை மீண்டும் தொடர்புபடுத்தும் செய்திகள் முழுமையாகத் திரிபுபடுத்தப்பட்டவை – 7 மாதங்கள் விசாரிக்கப்பட்டு நீதிமன்றத்தால் நிரபராதியாக விடுவிக்கப்பட்டுள்ளேன்: பாராளுமன்ற உறுப்பினர் றிஷாட் பதியுதீன்!
ஈஸ்டர் தாக்குதலுடன் என்னை மீண்டும் தொடர்புபடுத்தும் செய்திகள் முழுமையாகத் திரிபுபடுத்தப்பட்டவை – 7 மாதங்கள் விசாரிக்கப்பட்டு நீதிமன்றத்தால் நிரபராதியாக விடுவிக்கப்பட்டுள்ளேன்: பாராளுமன்ற உறுப்பினர் றிஷாட் பதியுதீன்!
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பில் தம்மை மீண்டும் சஹ்ரான் ஹாஷிம் உள்ளிட்டோருடன் தொடர்புபடுத்தி அண்மைய நாட்களில் சில ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வரும் செய்திகள் முற்றிலும் திரிபுபடுத்தப்பட்டவை என அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான றிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.
நிந்தவூர் பிரதேச சபை கேட்போர் கூடத்தில் இன்று (19.09.2026) நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
கடந்த செப்டம்பர் 15ஆம் திகதி முதல் தம்மையும் ஈஸ்டர் தாக்குதலின் பிரதான குற்றவாளியாகக் கூறப்படும் சஹ்ரானையும் தொடர்புபடுத்திச் செய்திகள் பரப்பப்பட்டு வருவதாகவும், தாம் ஏற்கனவே நீண்டகால விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு நீதிமன்றத்தால் நிரபராதியாக விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
ஈஸ்டர் தாக்குதலின் பின்னர் தமக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட நீண்ட விசாரணைகளின் அடிப்படையில் சட்டமா அதிபர் திணைக்களத்தின் பரிந்துரைக்கமையவே தாம் நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டதாகத் தெரிவித்த அவர், அண்மையில் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட 'Further Report' தகவல்களைச் சில ஊடகங்கள் தமக்குச் சாதகமான முறையில் திசைதிருப்பியுள்ளன என்றார்.
உண்மையான விசாரணைக்குத் தாம் எப்போதும் முழுமையான ஒத்துழைப்பை வழங்கத் தயாராக உள்ளதாகவும், உண்மையான குற்றவாளிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் என்பதே தமது நிலைப்பாடு எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
இதன்போது சவூதியில் மரண தண்டனையை எதிர்கொண்டுள்ள இலங்கைத் தமிழ் இளைஞர் அனோஜன் விவகாரம் குறித்தும் குறிப்பிட்ட அவர், அனோஜனின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து பேசியுள்ளதாகவும், கட்சி பேதமின்றி அனைத்து முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களும் ஜம்இய்யத்துல் உலமா மற்றும் ஜனாதிபதி ஊடாகச் சவூதி அரசிடம் கருணை மனு கோரி அவரை மீட்க ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்தார்.
கே.ஆர்.டி.வி. நெட்வொர்க் | தேசிய / அரசியல் & ஊடகச் செய்தி
පාස්කු ප්රහාරය සමඟ මාව නැවත සම්බන්ධ කරන පුවත් සම්පූර්ණයෙන්ම විකෘති කර ඇත – මාස 7ක පරීක්ෂණවලින් පසු අධිකරණයෙන් නිදොස් කොට නිදහස් කර තිබෙනවා: පාර්ලිමේන්තු මන්ත්රී රිෂාඩ් බදියුදීන්!
පාස්කු ඉරිදා ප්රහාරය සම්බන්ධයෙන් තාවකාලිකව සහ වැරදි ලෙස සහරාන් හාෂිම් ඇතුළු පාර්ශ්වයන් සමඟ තමාව යළි සම්බන්ධ කරමින් මෑතකදී ඇතැම් මාධ්ය සහ සමාජ මාධ්ය ඔස්සේ පළ වන පුවත් සම්පූර්ණයෙන්ම අසත්ය හා විකෘති කරන ලද ඒවා බව අඛිල මහා කොංග්රසයේ නායක සහ පාර්ලිමේන්තු මන්ත්රී රිෂාඩ් බදියුදීන් පවසයි.
නින්තාවුර් ප්රදේශයේ පැවති විශේෂ මාධ්ය හමුවක් අමතමින් ඔහු මේ බව සඳහන් කළේය.
පසුගිය සැප්තැම්බර් 15 වන දින සිට ඇතැම් මාධ්ය තමාව පාස්කු ප්රහාරයේ ප්රධාන සැකකරු වන සහරාන් සමඟ සම්බන්ධ කර පුවත් පළ කර ඇති බවත්, තමා දිගුකාලීන පරීක්ෂණවලින් අනතුරුව අධිකරණය විසින් නිදොස් කොට නිදහස් කර ඇති බවත් ඔහු අවධාරණය කළේය.
නීතිපති දෙපාර්තමේන්තුවේ නිර්දේශය මත අධිකරණයෙන් තමා නිදහස් කර තිබියදී, මෑතකදී අධිකරණයට ඉදිරිපත් වූ වාර්තා (Further Report) පදනම් කරගනිමින් ඇතැම් මාධ්ය වැරදි අර්ථකථන ලබා දී ඇති බව ඔහු චෝදනා කළේය.
සැබෑ පරීක්ෂණ සඳහා තමා සෑම විටම පූර්ණ සහයෝගය ලබා දීමට සූදානම් බවත්, සැබෑ වරදකරුවන් නීතිය හමුට පැමිණවිය යුතු බවත් ඔහු පැවසීය.
සෞදි අරාබියේ මරණ දඬුවමට ලක්ව සිටින අනෝජ් නම් තරුණයාගේ පවුලේ සාමාජිකයින් තමා හමු වූ බවත්, එම තරුණයා බේරා ගැනීම සඳහා සියලුම මුස්ලිම් පාර්ලිමේන්තු මන්ත්රීවරුන් සහ ජමියතුල් උලමා සභාව සමඟ එක්ව සෞදි රජයෙන් සමාව ඉල් සිටීමට කටයුතු කරන ලෙසත් ඔහු ඉල්ලා සිටියේය.
කේ.ආර්.ටී. වි. නෙට්වර්ක් ජාතික / දේශපාලන සහ මාධ්ය පුවත්
Reports Linking Me Once Again to the Easter Sunday Attacks Are Completely Distorted – Cleared and Acquitted by Courts After 7 Months of Inquiries: MP Rishad Badiudeen!
All Ceylon Makkal Congress (ACMC) Leader and Member of Parliament Rishad Badiudeen has stated that recent reports circulating in certain media and social networks attempting to link him once again to Zahran Hashim and the Easter Sunday attacks are entirely distorted and false.
Addressing a special press briefing held in Ninthavur today (19.09.2026), MP Badiudeen made these assertions.
He noted that since September 15, certain segments of the media have sought to associate him with the chief perpetrator of the Easter attacks, even though he has already undergone extensive investigations and has been legally discharged and acquitted by the judiciary.
Emphasizing that he was exonerated based on the Attorney General's recommendations following thorough probes, he accused certain media outlets of misinterpreting recent references made in court reports ("Further Reports") for sensationalism.
He reiterated his full readiness to cooperate with legitimate inquiries, maintaining that true perpetrators must face justice without political interference.
Addressing another pressing issue, Badiudeen stated that he met the family of Anojan, a young Sri Lankan Tamil facing a death sentence in Saudi Arabia, and urged all Muslim parliamentarians, religious bodies like the All Ceylon Jamiyyathul Ulama (ACJU), and state channels to unite in making a formal appeal for royal pardon to the Saudi authorities.
KRTV Network | National / Political & Media News






Comments