Skip to main content
Breaking news · In-depth coverage · Analysis
Breaking news · In-depth coverage · Analysis
● Breaking
Latest headlines

எகிப்தில் 80 நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்ற 11ஆவது சர்வதேச மாநாடு: அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் இலங்கைத் தூதுக்குழு பங்கேற்பு, எகிப்தியத் தலைவர்களுடனான உயர்மட்ட சந்திப்புகள் மற்றும் முஃப்தி எம்.ஐ.எம். ரிஸ்வியின் விரிவான ஆய்வுரை










 எகிப்தில் 80 நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்ற 11ஆவது சர்வதேச மாநாடு: அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் இலங்கைத் தூதுக்குழு பங்கேற்பு, எகிப்தியத் தலைவர்களுடனான உயர்மட்ட சந்திப்புகள் மற்றும் முஃப்தி எம்.ஐ.எம். ரிஸ்வியின் விரிவான ஆய்வுரை


எகிப்தின் தாருல் இஃப்தா மற்றும் உலகளாவிய ஃபத்வா நிறுவனங்களின் பொதுச் செயலகம் ஆகியவற்றின் ஒருங்கிணைப்பில் ஏற்பாடு செய்யப்பட்ட 11ஆவது சர்வதேச மாநாடு, எகிப்து தலைநகர் கெய்ரோவில் சுமார் 80 நாடுகளைச் சேர்ந்த தலைமை முஃப்திகள், மூத்த இஸ்லாமிய சட்டவியல் அறிஞர்கள், அமைச்சர்கள் மற்றும் சமயத் தலைவர்களின் பங்கேற்புடன் ஆரம்பமானது. உலகளாவிய மாற்றங்களுக்கு மத்தியில் குடும்பச் சவால்கள் என்ற தொனிப்பொருளில் நடைபெற்ற இந்த மாநாட்டில், சமகால உலகில் தீவிரமடைந்து வரும் டிஜிட்டல் மாற்றம், செயற்கை நுண்ணறிவின் சமூகத் தாக்கங்கள், தனிமனிதவாதப் போக்குகள், குடும்பக் கட்டமைப்பின் பாதுகாப்பு, குழந்தை வளர்ப்பு மற்றும் விழுமியங்களைப் பேணுதல் தொடர்பான விவகாரங்கள் ஆழமாக ஆராயப்பட்டன.


இம்மாநாட்டில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் தலைவர் கௌரவ முஃப்தி எம்.ஐ.எம். ரிஸ்வி மற்றும் அதன் உப பொருளாளர் அஷ்-ஷைக் கலாநிதி ஏ.ஏ. அஹ்மத் அஸ்வர் ஆகியோர் உத்தியோகபூர்வமாகப் பங்கேற்றனர். எகிப்து விஜயத்தின் போது, நாட்டின் தலைமை முஃப்தி கலாநிதி நஸீர் முஹம்மத் அய்யாதை நேரில் சந்தித்த இலங்கைத் தூதுக்குழுவினர் இருதரப்பு மார்க்க விவகாரங்கள் குறித்து விரிவான கலந்துரையாடலில் ஈடுபட்டனர். இதன் போது, மார்க்க விவகாரங்களில் இலங்கை முஸ்லிம்களுக்கான அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் நிலைப்பாடுகளையும் வழிகாட்டல்களையும் உள்ளடக்கி வெளியிடப்பட்ட உத்தியோகபூர்வ மன்ஹஜ் வழிகாட்டல் கையேடு எகிப்தின் தலைமை முஃப்தியிடம் உத்தியோகபூர்வமாகக் கையளிக்கப்பட்டது.


அதனைத் தொடர்ந்து, எகிப்தின் மத விவகாரங்கள் மற்றும் வக்ஃப் துறை அமைச்சர் கலாநிதி உஸாமா அல்-அஸ்ஹரியையும் இலங்கைத் தூதுக்குழுவினர் சந்தித்து கலந்துரையாடினர். இச்சந்திப்பில் இலங்கையின் தற்கால சமூக நிலைமைகள், இலங்கை முஸ்லிம் குடும்பங்கள் எதிர்நோக்கும் நடைமுறைப் பிரச்சினைகள் மற்றும் சவால்களை வெற்றிகொள்வதில் சமய நிறுவனங்களின் வகிபாகம் குறித்து ஆக்கபூர்வமான கருத்துப் பரிமாற்றங்கள் இடம்பெற்றன.


மாநாட்டின் தொடர்ச்சியாக நடைபெற்ற சர்வதேச ஆய்வரங்கில், எகிப்து ஃபத்வா மையத்தின் செயலாளர் ஷெய்க் ஹாஸிம் தாவூத் முன்னிலையில் முஃப்தி எம்.ஐ.எம். ரிஸ்வி சிறப்பு ஆய்வுரைகளை நிகழ்த்தினார். இந்நிகழ்வில் எகிப்தில் இளமானி, முதுமானி மற்றும் கலாநிதிப் பட்டப் படிப்புகளைத் தொடரும் இலங்கை மாணவர்களும் கலந்துகொண்டனர். தமது உரையில் அல்-குர்ஆன் மற்றும் சுன்னாவின் வழிகாட்டல்களுக்கு அமைய குடும்ப ஆலோசனை மற்றும் வழிகாட்டல்களை வழங்குவதன் அவசியத்தையும், நவீன குடும்பங்கள் எதிர்நோக்கும் உளவியல் மற்றும் சமூக நெருக்கடிகளுக்கான மார்க்கத் தீர்வுகளையும் அவர் விளக்கினார். மேலும், குடும்பப் பிரச்சினைகளை ஆரம்பக் கட்டத்திலேயே அணுகுதல், பரஸ்பர மரியாதை மற்றும் சகிப்புத்தன்மையை வளர்த்தல் ஆகியவற்றுடன் ஃபத்வா நிறுவனங்கள், நீதிமன்றங்கள் மற்றும் உளவியல் நிபுணத்துவ அமைப்புகள் ஒன்றிணைந்து செயலாற்ற வேண்டியதன் அவசியத்தை அவர் சர்வதேச அரங்கில் வலியுறுத்தினார்.


கே ஆர் டி வி நெட்வොர்க் - சர்வதேச செய்தி / உள்நாட்டுச் செய்தி


ඊජිප්තුවේදී රටවල් 80ක සහභාගීත්වයෙන් පැවති 11 වන ජාත්‍යන්තර සමුළුවට ශ්‍රී ලංකා නියෝජිතයින් එක්වෙයි: ඉහළ පෙළේ රාජ්‍ය තාන්ත්‍රික හමුවීම් සහ මුෆ්ති රිස්විගේ පර්යේෂණාත්මක දේශනය පිළිබඳ සම්පූර්ණ වාර්තාව


ඊජිප්තුවේ දාරුල් ඉෆ්තා ආයතනය සහ ගෝලීය ෆත්වා ආයතන ලේකම් කාර්යාලය එක්ව සංවිධානය කරන ලද 11 වන ජාත්‍යන්තර සමුළුව ලොව පුරා රටවල් 80ක ප්‍රධාන මුෆ්තිවරුන්, ආගමික විද්වතුන්, කැබිනට් අමාත්‍යවරුන් සහ ආගමික නායකයින්ගේ සහභාගීත්වයෙන් ඊජිප්තුවේ කයිරෝ අගනුවරදී පැවැත්විණි. ගෝලීය සමාජ පරිවර්තනයන් හමුවේ පවුල් සංස්ථාව මුහුණ දෙන අභියෝග යන තේමාව යටතේ පැවති මෙම සමුළුවේදී, වේගවත් ඩිජිටල්කරණය, කෘත්‍රිම බුද්ධිය හරහා එල්ල වන බලපෑම්, පෞද්ගලිකත්ව ප්‍රවණතා, පවුල් ඒකකයේ සුරක්ෂිතභාවය, ළමා සංවර්ධනය සහ සංස්කෘතික අනන්‍යතාව රැකගැනීම පිළිබඳ කරුණු ගැඹුරින් විශ්ලේෂණය කෙරිණි.


මෙම ඓතිහාසික සමුළුව වෙනුවෙන් ශ්‍රී ලංකාව නියෝජනය කරමින් සමස්ත ලංකා ජම්ඉයියතුල් උලමා සභාවේ ගරු සභාපති මුෆ්ති එම්.අයි.එම්. රිස්වි සහ එහි උප භාණ්ඩාගාරික ආචාර්ය ඒ.ඒ. අහමඩ් අස්වර් යන මහත්වරු එක්වූහ. සිය නිල සංචාරය අතරතුර ඊජිප්තුවේ ප්‍රධාන මුෆ්ති ආචාර්ය නසීර් මුහම්මද් අයියාද් හමුවූ ශ්‍රී ලංකා නියෝජිතයෝ, ද්විපාර්ශ්වික ආගමික කටයුතු පිළිබඳ සාකච්ඡා කළ අතර, ශ්‍රී ලාංකික මුස්ලිම්වරුන්ගේ මාර්ගෝපදේශ ඇතුළත් ජම්ඉයියතුල් උලමා සභාව විසින් සම්පාදිත මන්හජ් මාර්ගෝපදේශ සංග්‍රහයද ප්‍රධාන මුෆ්තිවරයා වෙත නිල වශයෙන් පිළිගන්වන ලදී.


ඉන් අනතුරුව, ඊජිප්තුවේ ආගමික කටයුතු හා වක්ෆ් අමාත්‍ය ආචාර්ය උසාමා අල්-අස්හරි මහතා හමුවූ නියෝජිත පිරිස ශ්‍රී ලංකාවේ වත්මන් සමාජ වාතාවරණය, මුස්ලිම් පවුල් මුහුණ දෙන අභියෝග සහ සාමාජීය ගැටලු විසඳීම සඳහා ආගමික ආයතන සතු දායකත්වය සම්බන්ධයෙන් පුළුල් අදහස් හුවමාරුවක නිරත වූහ.


සමුළුවට සමගාමීව පැවති ජාත්‍යන්තර පර්යේෂණ සම්මන්ත්‍රණයේදී ඊජිප්තු ෆත්වා මධ්‍යස්ථානයේ ලේකම් ෂෙයික් හාසිම් දාවූද් මහතා ඉදිරියේ මුෆ්ති එම්.අයි.එම්. රිස්වි මහතා සිය පර්යේෂණාත්මක දේශනය ඉදිරිපත් කළේය. ඊජිප්තුවේ උසස් අධ්‍යාපනය හදාරන ශ්‍රී ලාංකික සිසුන් රැසක්ද මෙම අවස්ථාවට එක්ව සිටියහ. ශුද්ධ වූ කුර්ආනය සහ සුන්නාව පදනම් කරගත් පවුල් උපදේශන සේවාවන්හි වැදගත්කම, නූතන පවුල් පද්ධතිය මුහුණ දෙන මානසික හා සාමාජීය අර්බුද, පවුල් ආරවුල් මුල් අවස්ථාවේදීම සමථයකට පත්කිරීම සහ ආගමික ආයතන මනෝවිද්‍යාත්මක ආයතන සමඟ ඒකාබද්ධව කටයුතු කිරීමේ අවශ්‍යතාව ඒ මහතා සිය දේශනය මඟින් අවධාරණය කළේය.


කේ ආර් ටී වී නෙට්වර්ක් - ජාත්‍යන්තර පුවත් / දේශීය පුවත්


Comprehensive Report: All Ceylon Jamiyyathul Ulama Represents Sri Lanka at Cairo's 11th International Fatwa Conference Across Eighty Nations


The General Secretariat for Fatwa Authorities Worldwide in partnership with Dar Al-Ifta of Egypt formally convened the 11th International Conference in Cairo, assembling grand muftis, esteemed jurists, government ministers, and interfaith delegates across approximately eighty nations. Deliberating under the banner of family resilience amidst global disruptions, the assembly concentrated on navigating the systemic transformations driven by rampant digitalization, artificial intelligence applications, emerging individualism, child rearing, and the preservation of religious-cultural identities within the modern home.


Sri Lanka was officially represented at the proceedings by All Ceylon Jamiyyathul Ulama (ACJU) President Mufti M.I.M. Rizwe and Assistant Treasurer Dr. A.A. Ahmed Azwer. Marking a critical diplomatic engagement during the itinerary, the delegation held bilateral consultations with the Grand Mufti of Egypt, Dr. Nazir Mohamed Ayyad, presenting the official ACJU Manhaj manual containing institutional doctrines and theological guidance protocols formulated for Sri Lankan Muslims.


The delegation furthermore engaged in discussions with Egypt's Minister of Awqaf and Religious Affairs, Dr. Osama Al-Azhari, addressing contemporary community affairs in Sri Lanka, emerging structural dynamics facing domestic units, and strategic models wherein faith institutions constructively support household welfare.


At the academic symposium hosted alongside the conference, Mufti M.I.M. Rizwe delivered scholarly papers before high-level jurists, including Secretary of the Egyptian Fatwa Center Sheikh Hazim Dawoud, in the presence of Sri Lankan undergraduate, postgraduate, and doctoral researchers based in Egypt. His addresses accentuated the imperative of anchoring familial guidance within Quranic and prophetic frameworks, resolving psychosocial burdens, encouraging proactive mediation for domestic cohesion, and championing structural partnerships between jurisprudence bodies, legal arbitration forums, and mental health resources to safeguard family sustainability globally.


KR TV Network - International News / Local News

Comments