Skip to main content
Breaking news · In-depth coverage · Analysis
Breaking news · In-depth coverage · Analysis
● Breaking
Latest headlines

அரச அலுவலகங்களுக்குச் செல்லத் தேவையில்லை: 80 சதவீத சேவைகளை வீட்டிலிருந்தே பெறும் இலக்குடன் டிஜிட்டல் மயமாக்கல் திட்டத்தை அறிவித்தார் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க!

 


அரச அலுவலகங்களுக்குச் செல்லத் தேவையில்லை: 80 சதவீத சேவைகளை வீட்டிலிருந்தே பெறும் இலக்குடன் டிஜிட்டல் மயமாக்கல் திட்டத்தை அறிவித்தார் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க!


இலங்கையின் டிஜிட்டல் மாற்றத்தை விரைவுபடுத்துவதற்காக, சுமார் 80 சதவீதமான அரச சேவைகளைக் கையடக்கத் தொலைபேசிகள் மூலம் வீட்டிலிருந்தே பெற்றுக்கொள்வதற்கான திட்டங்கள் உள்ளிட்ட முக்கிய அறிவிப்புகளை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க வெளியிட்டுள்ளார்.


 புலத்சிங்களவில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய ஜனாதிபதி, டிஜிட்டல் மயமாக்கலுக்காக அடுத்த வருட வரவு - செலவுத் திட்டத்தில் 30 பில்லியன் ரூபாய் ஒதுக்கப்படும் என்றும், நாடளாவிய ரீதியில் 4G அலைவரிசை சேவையை விரிவுபடுத்தும் வகையில் 1,000 புதிய 4G கோபுரங்கள் அமைக்கப்படும் என்றும் தெரிவித்தார்.


பிறப்பு மற்றும் இறப்புச் சான்றிதழ்கள், காணி உறுதிப்பத்திரச் சேவைகள் மற்றும் வாகன வருமான அனுமதிப்பத்திரச் சேவைகள் ஆகியவற்றை இணையவழியில் பெற்றுக்கொள்ளும் வசதிகள் புதிய உள்கட்டமைப்பு மற்றும் அபிவிருத்தி முயற்சிகளின் ஒரு பகுதியாக நடைமுறைப்படுத்தப்படவுள்ளன.


கே.ஆர்.டி.வி. நெட்வொர்க் | உள்நாட்டுச் செய்தி


 රජයේ කාර්යාල වෙත යාම අවශ්‍ය වන්නේ නැත: සේවා වලින් 80%ක් නිවසේ සිටම ලබා ගැනීමට ඉලක්කයක් - ජනපති අනුර කුමාර දිසානායක!


ශ්‍රී ලංකාවේ ඩිජිටල් පරිවර්තනය වේගවත් කිරීම සඳහා, ආසන්න වශයෙන් රජයේ සේවා වලින් 80%ක් ජංගම දුරකථන හරහා නිවසේ සිටම ලබා ගැනීමට හැකි වන පරිදි වැඩසටහන් රැසක් ක්‍රියාත්මක කරන බව ජනාධිපති අනුර කුමාර දිසානායක මහතා ප්‍රකාශ කර තිබේ.


 බුත්තලපිටිය ප්‍රදේශයේ පැවති ජන රැළියකදී අදහස් දක්වමින් ජනාධිපතිවරයා සඳහන් කළේ ඩිජිටල්කරණය සඳහා එළඹෙන අයවැයෙන් රුපියල් බිලියන 30ක් වෙන් කරන බවත්, දිවයින පුරා 4G ආවරණය පුළුල් කිරීම සඳහා නව 4G කුළුණු 1,000ක් ඉදි කරන බවත්ය.


 උප්පැන්න සහ මරණ සහතික, ඉඩම් ඔප්පු සේවා සහ වාහන ආදායම් බලපත්‍ර නිකුත් කිරීමේ සේවා අන්තර්ජාලය හරහා ලබා ගැනීමට සැලසුම් කර ඇති අතර, නව යටිතල පහසුකම් සහ සංවර්ධන ව්‍යාපෘතිවල කොටසක් ලෙස මෙම පියවර ක්‍රියාත්මක කෙරේ.


කේ.ආර්.ටී.වි. නෙට්වර්ක් දේශීය පුවත්


No Need to Visit Government Offices Anymore: President Anura Kumara Dissanayake Outlines Target to Deliver 80% of Services Remotely!

In a major push to accelerate Sri Lanka's digital transformation, President Anura Kumara Dissanayake has detailed a series of initiatives aimed at enabling citizens to access approximately 80 percent of government services from home using mobile phones.


Speaking at a public rally in Bulathsinhala, the President announced that Rs. 30 billion will be allocated in the upcoming national budget for digitization efforts, alongside plans to expand nationwide 4G network connectivity by establishing 1,000 new 4G towers.


 Essential public services—including online birth and death certificates, digitalized land deed services, and online vehicle revenue license processing—form a core part of these broader infrastructural and developmental reforms.


KRTV Network | Local News

Comments