Skip to main content
Breaking news · In-depth coverage · Analysis
Breaking news · In-depth coverage · Analysis
● Breaking
Latest headlines

இந்தியப் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு செப்டம்பர் 8 ஆம் திகதி இலங்கை வருகை

 


இந்தியப் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு செப்டம்பர் 8 ஆம் திகதி இலங்கை வருகை


இந்தியப் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு எதிர்வரும் செப்டம்பர் 8 ஆம் திகதி இலங்கை வரவுள்ளார். இத்தகவலை இந்தியப் பாதுகாப்பு அமைச்சு உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளது. செப்டம்பர் 10 ஆம் திகதி வரை இலங்கையில் தங்கியிருக்கவுள்ள அவர், பாதுகாப்பு மற்றும் வெளியுறவு அமைச்சுகளின் சிரேஷ்ட அதிகாரிகளைக் கொண்ட உயர்மட்டக் குழுவிற்குத் தலைமை தாங்கி இலங்கைத் தலைவர்களுடன் இருதரப்பு பாதுகாப்பு, பிராந்திய ஒத்துழைப்பு மற்றும் கடல்சார் விவகாரங்கள் குறித்துக் கலந்துரையாடவுள்ளார். அத்துடன் கொழும்பில் உள்ள இந்திய சமூகத்தினரையும் அவர் சந்திக்கவுள்ளார். இந்தியாவின் அண்டை நாடுகளுக்கு முன்னுரிமை கொள்கை மற்றும் சாகர் தொலைநோக்குப் பார்வையின் அடிப்படையில் முன்னெடுக்கப்படும் இந்த விஜயம், இரு நாடுகளுக்கும் இடையிலான கடல்சார் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்புத் துறைசார் கூட்டாண்மையை மேலும் பலப்படுத்தும் என இந்தியப் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.


கே ஆர் டி வி நெட்வொர்க் - சர்வதேச செய்தி / உள்நாட்டுச் செய்தி


ඉන්දීය ආරක්ෂක අමාත්‍ය රාජ්නාත් සිං නිල සංචාරයක් සඳහා සැප්තැම්බර් 08 වනදා දිවයිනට


ඉන්දීය ආරක්ෂක අමාත්‍ය රාජ්නාත් සිං මහතා නිල සංචාරයක් සඳහා එළඹෙන සැප්තැම්බර් 08 වන දින දිවයිනට පැමිණීමට නියමිත බව ඉන්දීය ආරක්ෂක අමාත්‍යාංශය නිවේදනය කර තිබේ. සැප්තැම්බර් 10 වන දින දක්වා ශ්‍රී ලංකාවේ රැඳී සිටින ඒ මහතා ආරක්ෂක හා විදේශ කටයුතු අමාත්‍යාංශවල ජ්‍යෙෂ්ඨ නිලධාරීන්ගෙන් සමන්විත ඉහළ පෙළේ දූත පිරිසකට නායකත්වය ලබාදෙමින් ශ්‍රී ලාංකික නායකයන් සමඟ ද්විපාර්ශ්වික ආරක්ෂක සහ කලාපීය සහයෝගීතාව පිළිබඳ සාකච්ඡා පැවැත්වීමට නියමිතය. එසේම කොළඹ වෙසෙන ඉන්දීය ප්‍රජාවද ඔහු හමුවනු ඇත. ඉන්දියාවේ අසල්වැසියාට මුල්තැන ප්‍රතිපත්තිය සහ සාගර් දැක්ම මත පදනම්ව සිදුකෙරෙන මෙම සංචාරය දෙරට අතර සමුද්‍රීය ආරක්ෂක සහයෝගීතාව තවදුරටත් ශක්තිමත් කිරීමට හේතුවනු ඇතැයි අපේක්ෂා කෙරේ.


කේ ආර් ටී වී නෙට්වර්ක් - ජාත්‍යන්තර පුවත් / දේශීය පුවත්


Indian Defence Minister Rajnath Singh to Arrive in Sri Lanka on Official Visit on 8 September


Indian Defence Minister Rajnath Singh is scheduled to undertake an official visit to Sri Lanka starting 8 September, the Indian Ministry of Defence confirmed on Sunday. Remaining in the country until 10 September, Minister Singh will lead a high-level ministerial and diplomatic delegation comprising senior defense and external affairs officials to hold bilateral talks with Sri Lankan leadership on regional security, defence cooperation, and maritime partnerships, alongside addressing the Indian diaspora community in Colombo. Anchored in India's Neighbourhood First policy and Prime Minister Narendra Modi’s SAGAR initiative, the visit is expected to deepen strategic defence capabilities and consolidate long-standing bilateral maritime relations between the two neighbours.


KR TV Network - International News / Local News

Comments