Skip to main content
Breaking news · In-depth coverage · Analysis
Breaking news · In-depth coverage · Analysis
● Breaking
Latest headlines

حياة طيبة - BLESSED LIFE மணமான வாழ்க்கை

 

வெளிவாரிக் கற்கைகள் பிரிவு

ஜாமிஆ ஹமீதிய்யா அறபுக் கலாபீடம் - காத்தான்குடி.


حياة طيبة  - BLESSED LIFE  மணமானll

 வாழ்க்கை

நமது ஜாமிஆ ஹமீதிய்யா அறபுக் கலாபீடத்தின் வெளிவாரிக் கற்கைகள் பிரிவினால்,


குறிப்பாக "குடும்பத் தலைவர்களை இலக்குக் குழுவாகக்கொண்டும்"  வயதுவந்த ஆண்களை பொதுவாகக் கொண்டும்,


சிறப்பாக வடிவமைக்கப்பட்ட, 6 வாரங்கள் 20 மணித்தியாலங்களைக்கொண்ட ஒரு முறைசார் கலைத்திட்டத்தினடிப்படையில்,


"மணமான வாழ்க்கை BLESSED LIFE   حياة طيبة


என்ற ஒரு தலைப்பில் ஒரு குறுங்கால கற்கைநெறி  இம்மாத இறுதியில் ஆரம்பிக்கப்படவுள்ளது.


இக்கற்கை நெறி,

பிக்ஹு

தப்ஸீர்

ஹதீஸ்


போன்ற 3  பாடங்களை உள்ளடக்கி, இம்மூன்று பாடங்களினூடாக சமயம், சமூகம், குடும்பம்,  வியாபாரம் போன்ற முக்கிய விடயங்களில் இஸ்லாமிய அன்றாட, நடைமுறைசார் , சமகால அடிப்படை வாழ்க்கை மற்றும் ஷரீஅத் சட்ட வழிமுறைகளை கற்பித்து,


ஒரு சிறந்த கனவனாக ,

ஒரு சிறந்த பொறுப்பாளராக,

ஒரு சிறந்த பிரஜையாக,


உருவாக்குவதை அடிப்படையாகக் கொண்டு, ஒரு மணமான வாழ்க்கையை ( ஹயாதுன் தய்யிபா ) ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஏற்படுத்துவதாகும்.


விரிவுரையாளர்களாக, கண்ணியமிக்க


As Sheih ALM  Mujahid  MA

Senior Lecturer,

Department of Islamic Studies,

Eastern University, Sri Lanka .


Moulavi MIM Jawahir Hafiz  BA

General Secretary- Jamiyyathul Ulama ,

KKY Branch. Kattankudy.


Moulavi SHM Rameez Hafiz  MA , M.Ed

Founding Excutive Director

Jaamiah Hameediya Arabic College,

Kattankudy.


நமது சமூகத்தில் அதிகமாக அரங்கேறி வரும் விவாகரத்துக்களை அதிகளவு குறைப்பதற்கும்,  நமது வாலிபர்களை ஒரு ஷரீஅத்தினடிப்படையில் ஒரு முறைசார் வாழ்க்கைக்குள் கொண்டுவருவதற்கும், வியாபார நடவடிக்கைகளை மனவழுத்தமின்றி அமைதியோடு மேற்கொள்வதற்கும்,  ஒரு பொறுப்புள்ள கனவனாக இருப்பதற்கும், பொதுவாக அனைத்துத்துறைகளிலும் தனிமனித சமூக மாற்றத்தை கருப்பொருளாகக் கொண்டும், மனத்தூய்மையோடும் அழ்ழாஹ்விடத்தில் ஈருலக பாக்கியங்களை ஆழமாக எதிபார்த்து இக்கற்கை நெறி ஆரம்பிக்கப்படவுள்ளது.


இது மிகவும் பிரயோசனமான வாழ்க்கைக்குத் தேவையான ஒன்றாகும்.


Teaching Methodologies


= Power presentations

= lecture Method


Qulity inputs


= recommended Vedios

= Handouts

= Selected Books. ( Kithabs)


இன்ஷாஅழ்ழாஹ் எதிர்வரும் வாரங்களில் இதற்கான விண்ணப்பங்கள் கோரப்படவுள்ளன.


ஆரம்பமாகக் கிடைக்கும் 20 விண்ணப்பதாரிகள் முதல் தொகுதியாக உள்வாங்கப்படுவர்.


6 வாரங்களின் பின் ஒரு இலகுவான நேர்முக தேர்வினூடாக பாட உள்ளடக்கங்கள் வரையப்பட்ட, பதிவு செய்யப்பட்ட பெறுமதியான சான்றிதழ் அனைவருக்கும் ஒரு நிகழ்வினூடாக கண்ணியமாக வழங்கப்படும்.


அறிவித்தல் வெயாகியவுடன் நாட்டமுடையவர்கள் விண்ணப்பிக்கலாம்


படைத்தாளும் வல்ல நாயன் அழ்ழாஹ் நமது தூய பணிகளை நிரப்பமாக கபூல் செய்வானாக.


பின்வரும் தொலைபேசிகளூடாகவும் தொடர்பு கொள்ளலாம்.


0777 030012

077 3515988


HON. DIRECTOR

EXTERNAL STUDIES DIVISION

JAAMIAH HAMEEDIYA ARABIC COLLEGE

MAIN STREET,  ABH LANE,

KATTANKUDY.

Comments