Skip to main content
Breaking news · In-depth coverage · Analysis
Breaking news · In-depth coverage · Analysis
● Breaking
Latest headlines

பொலன்னறுவையில் நாளை இடம்பெறவுள்ள தேசிய மக்கள் சக்தியின் விவசாயிகள் பேரணியில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க பங்கேற்பு!


 பொலன்னறுவையில் நாளை இடம்பெறவுள்ள தேசிய மக்கள் சக்தியின் விவசாயிகள் பேரணியில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க பங்கேற்பு!


"மக்களின் ஆட்சி - ஈராண்டு பலம், அனைவருக்கும் முன்னேற்றம்" என்ற தொனிப்பொருளின் கீழ் பொலன்னறுவையில் நாளை (12) நடைபெறவுள்ள தேசிய மக்கள் சக்தியின் பிரமாண்டமான விவசாயிகள் பேரணியில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க கலந்துகொண்டு சிறப்புரையாற்றவுள்ளார்.


 தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் இரண்டு ஆண்டு கால வெற்றிகரமான ஆட்சியைக் குறிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள தொடர் மக்கள் பேரணிகளில் இதுவும் ஒன்றாகும். விவசாயிகளை மற்றும் விவசாயத்துறையை மையமாகக் கொண்டு முன்னெடுக்கப்படும் இந்நிகழ்வு, நாளை மாலை 4:00 மணிக்கு உத்தியோகபூர்வமாக ஆரம்பமாகவுள்ளது.


அரசாங்கத்தின் சாதனைகளும் எதிர்காலத் திட்டங்களும்: கடந்த இரண்டு ஆண்டுகளில் அரசாங்கம் எட்டியுள்ள முக்கிய சாதனைகள் மற்றும் எதிர்வரும் காலங்களில் விவசாயிகளுக்காக நடைமுறைப்படுத்தப்படவுள்ள புதிய திட்டங்கள் குறித்து ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இப் பேரணியில் விரிவாக உரை நிகழ்த்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.


செய்தியாளர்: பர்ஹானா பதுர்தீன்


கே.ஆர்.டி.வி. நெட்வொர்க் | அரசியல் செய்தி


ජනතා විමුක්ති පෙරමුණේ (ජාතික ජන බලවේගයේ) ගොවි රැලිය හෙට (12) පොළොන්නරුවේදී - ජනාධිපති අනුර කුමාර දිසානායක සහභාගී වෙයි!


"ජනතා පාලනය - ද්විත්ව වර්ෂ ශක්තිය, සැමට සංවර්ධනය" යන තේමාව යටතේ පොළොන්නරුවේදී හෙට (12) පැවැත්වෙන ජාතික ජන බලවේගයේ ගොවි රැලිය සඳහා ජනාධිපති අනුර කුමාර දිසානායක මහතා ප්‍රධාන ආරාධිතයා ලෙස සහභාගී වී විශේෂ දේශනයක් පැවැත්වීමට නියමිතය.


වත්මන් ජාතික ජන බලවේග රජයේ දෙවසරක ජයග්‍රහණ සැමරීම වෙනුවෙන් සංවිධානය කර ඇති ජනතා රැළි මාලාවේ තවත් එක් වැදගත් රැළියක් මෙය වේ. ගොවීන් සහ කෘෂිකාර්මික ක්ෂේත්‍රය මුල් කරගනිමින් සංවිධානය කර ඇති මෙම රැලිය හෙට සවස 4:00 ට ආරම්භ වීමට නියමිතය.


පසුගිය වසර දෙක තුළ රජය විසින් අත්කර ගන්නා ලද සංවර්ධන ජයග්‍රහණ සහ ඉදිරි කාලය තුළ ගොවි ප්‍රජාව වෙනුවෙන් ක්‍රියාත්මක කිරීමට අපේක්ෂිත නව වැඩපිළිවෙළ පිළිබඳව ජනාධිපතිවරයා මෙහිදී කරුණු අනාවරණය කරනු ඇත.


වාර්තාකරු: ෆර්හානා බදුර්දීන්


කේ.ආර්.ටී. වි. නෙට්වර්ක් දේශීය පුවත්


 President Anura Kumara Dissanayake to Address National People’s Power Farmers’ Rally in Polonnaruwa Tomorrow (12)!


President Anura Kumara Dissanayake is scheduled to participate as the keynote speaker at the National People’s Power (NPP) farmers' rally, which will be held in Polonnaruwa tomorrow, September 12.


 Organized under the theme "People's Governance - Two Years of Strength, Progress for All," this rally is part of a series of public events marking the second anniversary of the current administration. Focusing heavily on the agricultural sector and farming communities, the event is set to commence tomorrow at 4:00 PM.


 The President is expected to elaborate on the significant achievements attained by the government over the past two years, alongside outlining upcoming policy initiatives and development projects tailored to uplift the nation's agricultural sector.


Reporter: Farhana bathurdeen


KRTV Network | Political News

Comments