Skip to main content
Breaking news · In-depth coverage · Analysis
Breaking news · In-depth coverage · Analysis
● Breaking
Latest headlines

தெஹிவளை கைக்குண்டுத் தாக்குதலில் இரு சிறுவர்கள் உயிரிழந்த சம்பவம்: சந்தேகநபர்களைக் கைது செய்ய மூன்று விசேட பொலிஸ் குழுக்கள் நியமிப்பு


 தெஹிவளை கைக்குண்டுத் தாக்குதலில் இரு சிறுவர்கள் உயிரிழந்த சம்பவம்: சந்தேகநபர்களைக் கைது செய்ய மூன்று விசேட பொலிஸ் குழுக்கள் நியமிப்பு


தெஹிவளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சிறிசங்கபோ மாவத்தை பகுதியில் அமைந்துள்ள வீடு ஒன்றின் மீது இன்று (11) அதிகாலை மேற்கொள்ளப்பட்ட கொடூர கைக்குண்டுத் தாக்குதல் தொடர்பில் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு சந்தேகநபர்களை உடனடியாகக் கைது செய்வதற்காக மூன்று விசேட பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


இன்று அதிகாலை சுமார் 3.15 மணியளவில் இனந்தெரியாத நபர் ஒருவரால் இந்த கைக்குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இத்தாக்குதலில் பலத்த காயமடைந்த 55 வயதுடைய தந்தை மற்றும் அவரது இரண்டு ஆண் பிள்ளைகள் உடனடியாக களுபோவில போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். எனினும், அங்கு சிகிச்சை பலனின்றி 11 மற்றும் 17 வயதுடைய அந்த இரு பிள்ளைகளும் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளது. காயமடைந்த 55 வயதுடைய தந்தை வைத்தியசாலையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றார். இத்தாக்குதலுக்கான பின்னணி அல்லது குற்றவாளிகள் தொடர்பான தகவல்கள் இதுவரை வெளியாகாத நிலையில், மூன்று விசேட பொலிஸ் குழுக்கள் களமிறக்கப்பட்டு மேலதிக விசாரணைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.


கே ஆர் டி வி நெட்வொர்க் - உள்நாட்டுச் செய்தி / குற்றவியல் மற்றும் பொலிஸ் புலனாய்வுச் செய்தி


දෙහිවල අත්බෝම්බ ප්‍රහාරයෙන් දරුවන් දෙදෙනෙකු මරුට: සැකකරුවන් අත්අඩංගුවට ගැනීමට පොලිස් කණ්ඩායම් තුනක් යොදවයි


දෙහිවල පොලිස් වසමේ සිරිසඟබෝ මාවත ප්‍රදේශයේ පිහිටි නිවසකට අද (11) අලුයම එල්ල වූ දරුණු අත්බෝම්බ ප්‍රහාරය සම්බන්ධයෙන් විමර්ශන පවත්වා සැකකරුවන් නීතියේ රැහැනට හසුකර ගැනීම සඳහා විශේෂ පොලිස් කණ්ඩායම් තුනක් පත්කර ඇති බව ශ්‍රී ලංකා පොලිසිය පවසයි.


අද අලුයම 3.15ට පමණ නාඳුනන පුද්ගලයෙකු විසින් මෙම අත්බෝම්බ ප්‍රහාරය එල්ල කර ඇති බවට පොලිසිය සඳහන් කරයි. පිපිරීමෙන් බරපතළ තුවාල ලැබූ 55 හැවිරිදි පියා සහ ඔහුගේ පිරිමි දරුවන් දෙදෙනා කඩිනමින් කළුබෝවිල ශික්ෂණ රෝහල වෙත ඇතුළත් කිරීමට පියවර ගැනිණි. කෙසේ වෙතත් රෝහල්ගත කිරීමෙන් පසු එම දරුවන් දෙදෙනා ජීවිතක්ෂයට පත්ව ඇති බව පොලිස් මාධ්‍ය කොට්ඨාසය තහවුරු කළේය. මියගොස් ඇත්තේ වයස අවුරුදු 11 සහ 17 යන වියෙහි පසුවූ දරුවන් දෙදෙනෙකි. තුවාල ලැබූ 55 හැවිරිදි පියා රෝහලේ ප්‍රතිකාර ලබමින් සිටියි. ප්‍රහාරයට හේතුව හෝ සැකකරුවන් පිළිබඳ මෙතෙක් තොරතුරු අනාවරණය වී නොමැති අතර, පලාගිය සැකකරුවන් අත්අඩංගුවට ගැනීමට පොලිස් කණ්ඩායම් තුනක් පුළුල් විමර්ශන ක්‍රියාත්මක කර තිබේ.


කේ ආර් ටී වී නෙට්වර්ක් - දේශීය පුවත් / අපරාධ හා පොලිස් විමර්ශන පුවත්


Two Minors Killed in Dehiwala Hand Grenade Attack: Three Special Police Teams Deployed to Apprehend Suspects


Three special police investigation teams have been assigned to conduct extensive inquiries and arrest the perpetrators involved in the fatal hand grenade attack executed against a residence along Sirisangabo Mawatha in the Dehiwala police division early this morning (11).


Police confirmed that the explosion was triggered at around 3:15 AM by an unidentified perpetrator. The blast inflicted critical blast injuries on a 55-year-old man and his two sons, who were promptly transferred to the Kalubowila Teaching Hospital. Police Media Division confirmed that both minors, aged 11 and 17, subsequently succumbed to their injuries following admission. The injured 55-year-old individual, identified as the father of the deceased children, remains hospitalized under medical surveillance. As the motive and suspects behind the attack remain unestablished, three investigative squads are conducting advanced field operations to effect arrests.


KR TV Network - Local News / Crime and Police Affairs

Comments