மிக் போர் விமானக் கொள்வனவு விவகாரம்: முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு அழைப்பு
மிக் போர் விமானக் கொள்வனவு விவகாரம்: முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு அழைப்பு
செய்தியாளர்: பர்ஹானா பதுறுதீன்
இலங்கை விமானப்படைக்கு மிக் ரக போர் விமானங்கள் கொள்வனவு செய்யப்பட்டமை தொடர்பான சர்ச்சைக்குரிய கொடுக்கல்வாங்கல் விவகாரம் குறித்து வாக்குமூலம் ஒன்றைப் பதிவு செய்துகொள்வதற்காக, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று (11) நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு (FCID) அழைக்கப்பட்டுள்ளார்.
பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளராக அவர் பதவி வகித்த காலப்பகுதியில் இடம்பெற்றதாகக் கூறப்படும் இந்த விமானக் கொள்முதல் கொடுக்கல்வாங்கல் தொடர்பில் அவரிடம் விரிவான விசாரணைகளை முன்னெடுப்பதற்கு புலனாய்வு அதிகாரிகள் தீர்மானித்துள்ளனர். இதேவேளை, குறித்த மிக் போர் விமானக் கொடுக்கல்வாங்கல் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக முன்னாள் விமானப்படைத் தளபதி எயார் சீப் மார்ஷல் ரொஷான் குணதிலக்க நேற்று முற்பகல் நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவில் முன்னிலையாகி வாக்குமூலம் அளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
கே ஆர் டி வி நெட்வொர்க் - உள்நாட்டுச் செய்தி / அரசியல் மற்றும் சட்ட விவகாரச் செய்தி
මිග් යානා ගනුදෙනුව: ප්රකාශයක් ලබාගැනීමට හිටපු ජනාධිපති ගෝඨාභය රාජපක්ෂ අද මූල්ය අපරාධ විමර්ශන කොට්ඨාසය හමුවට කැඳවයි
වාර්තාකරු: ෆර්හානා බදුර්දීන්
ශ්රී ලංකා ගුවන් හමුදාව සඳහා මිග් වර්ගයේ ප්රහාරක ගුවන් යානා මිලදී ගැනීමේ මතභේදාත්මක ගනුදෙනුව සම්බන්ධයෙන් ප්රකාශයක් සටහන් කරගැනීම සඳහා හිටපු ජනාධිපති ගෝඨාභය රාජපක්ෂ මහතා අද (11) මූල්ය අපරාධ විමර්ශන කොට්ඨාසය (FCID) වෙත කැඳවා තිබේ.
ඔහු ආරක්ෂක අමාත්යාංශයේ හිටපු ලේකම්වරයා ලෙස කටයුතු කළ සමයේ සිදුවූ බව කියන මෙම ගුවන් යානා මිලදී ගැනීමේ ක්රියාවලිය පිළිබඳව ප්රශ්න කර ප්රකාශයක් සටහන් කරගැනීමට විමර්ශන නිලධාරීන් අපේක්ෂා කරයි. මේ අතර, අදාළ මිග් ගුවන් යානා ගනුදෙනුව සම්බන්ධයෙන් ප්රකාශයක් ලබාදීම සඳහා හිටපු ගුවන් හමුදාපති එයාර් චීෆ් මාර්ෂල් රොෂාන් ගුණතිලක මහතා ඊයේ පෙරවරුවේ මූල්ය අපරාධ විමර්ශන කොට්ඨාසය හමුවේ පෙනී සිටි බවද මෙහිදී සිහිපත් කළ යුතුය.
කේ ආර් ටී වී නෙට්වර්ක් - දේශීය පුවත් / දේශපාලන හා නීතිමය පුවත්
MiG Aircraft Procurement Probe: Former President Gotabaya Rajapaksa Summoned Before Financial Crimes Investigation Division Today
Reporter: Farhana Badurdeen
Former President Gotabaya Rajapaksa has been summoned to appear before the Financial Crimes Investigation Division (FCID) today (11) to record a comprehensive statement regarding the controversial procurement of MiG combat aircraft for the Sri Lanka Air Force.
Investigating officers intend to question the former President concerning financial and procedural transactions that took place during his tenure as the former Secretary to the Ministry of Defence. Meanwhile, former Commander of the Air Force, Air Chief Marshal Roshan Goonetileke, appeared before the Financial Crimes Investigation Division yesterday morning to provide an official statement on the identical MiG aircraft procurement inquiry.
KR TV Network - Local News / Political and Legal Affairs

Comments