ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான பிரதான வழக்கின் தீர்ப்பு இன்று வெளியீடு
ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான பிரதான வழக்கின் தீர்ப்பு இன்று வெளியீடு
செய்தியாளர்: பர்ஹானா பதுறுதீன்
2019 ஆம் ஆண்டு இலங்கையில் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பில் கொழும்பு மூவரடங்கிய விசேட மேல் நீதிமன்ற ட்ரயல் அட் பார் தீர்ப்பாயத்தில் நடைபெற்று வந்த பிரதான வழக்கின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பு இன்று (22) வழங்கப்படவுள்ளது.
உலக வரலாற்றிலேயே மிக அதிகமான சாட்சிகள் மற்றும் குற்றச்சாட்டுகளைக் கொண்ட வழக்குகளில் ஒன்றாகக் கருதப்படும் இவ்வழக்கில், பயங்கரவாதத் தாக்குதலுக்கு சதித்திட்டம் தீட்டியமை மற்றும் உடந்தையாக இருந்தமை உள்ளிட்ட 23,270 குற்றச்சாட்டுகளின் கீழ் நௌபர் மௌலவி உள்ளிட்ட 25 பிரதிவாதிகளுக்கு எதிராக சட்டமா அதிபரினால் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டிருந்தது. சுமார் 1,200 க்கும் மேற்பட்ட சாட்சிகளின் பெயர்கள் சமர்ப்பிக்கப்பட்டு, நீண்ட கால விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்ட இந்த வழக்கின் இறுதித் தீர்ப்பை மேல் நீதிமன்ற நீதிபதிகள் குழாம் இன்று பகிரங்கமாக அறிவிக்கவுள்ளது.
கே ஆர் டி வி நெட்வொர்க் - உள்நாட்டுச் செய்தி / நீதித்துறை மற்றும் தேசிய பாதுகாப்பு விவகாரம்
පාස්කු ප්රහාරය පිළිබඳ ඓතිහාසික නඩුවේ තීන්දුව අද ප්රකාශයට පත් කෙරේ
වාර්තාකරු: ෆර්හානා බදුර්දීන්
2019 වසරේ මෙරට සිදු වූ පාස්කු ඉරිදා ත්රස්ත ප්රහාර මාලාව සම්බන්ධයෙන් කොළඹ ත්රිපුද්ගල විශේෂ මහාධිකරණ විනිසුරු මඩුල්ල (Trial-at-Bar) හමුවේ විභාග වූ ප්රධාන නඩුවේ ඓතිහාසික තීන්දුව අද (22) ප්රකාශයට පත් කිරීමට නියමිතව තිබේ.
ලෝක ඉතිහාසයේ වැඩිම සාක්ෂිකරුවන් සහ අධිචෝදනා සංඛ්යාවක් අන්තර්ගත නඩුවක් ලෙස සැලකෙන මෙම නඩුව හරහා, ත්රස්ත ප්රහාරය සඳහා කුමන්ත්රණය කිරීම සහ ආධාර අනුබල දීම ඇතුළු අධිචෝදනා 23,270 ක් යටතේ නවුෆර් මවුලවි ඇතුළු විත්තිකරුවන් 25 දෙනෙකුට එරෙහිව නීතිපතිවරයා විසින් නඩු පවරා තිබුණි. සාක්ෂිකරුවන් 1,200 කට අධික පිරිසකගේ නම් ඇතුළත්ව දීර්ඝ විභාගයකින් අනතුරුව, විශේෂ ත්රිපුද්ගල මහාධිකරණ විනිසුරු මණ්ඩලය විසින් මෙම තීරණාත්මක අවසන් තීන්දුව අද දින විවෘත අධිකරණයේදී ලබාදීමට නියමිතය.
කේ ආර් ටී වී නෙට්වර්ක් - දේශීය පුවත් / අධිකරණ සහ ජාතික ආරක්ෂක පුවත්
Verdict on Easter Sunday Terror Attacks Trial-at-Bar to be Delivered Today
Reporter: Farhana Badurdeen
The Colombo Special High Court Trial-at-Bar is scheduled to deliver its landmark verdict today (22) in the primary conspiracy case concerning the devastating 2019 Easter Sunday coordinated terror attacks in Sri Lanka.
Recognized as one of the most extensive criminal proceedings with a vast record of witnesses and charges, the indictment was filed by the Attorney General against 25 accused, including Naufer Moulavi, across 23,270 distinct counts pertaining to criminal conspiracy and abetment of terrorism. Following comprehensive hearings featuring a witness list exceeding 1,200 individuals, the three-judge bench will officially hand down its final ruling in open court today.
KR TV Network - Local News / Judicial Affairs and National Security

Comments