Skip to main content
Breaking news · In-depth coverage · Analysis
Breaking news · In-depth coverage · Analysis
● Breaking
Latest headlines

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராகச் சட்டத்தரணி ஹபீப் றிபான் நியமனம்: கல்குடா மக்களின் நீண்டகாலக் கனவு நனவானது!






 ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராகச் சட்டத்தரணி ஹபீப் றிபான் நியமனம்: கல்குடா மக்களின் நீண்டகாலக் கனவு நனவானது!


ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக ஓட்டமாவடியைச் சேர்ந்த கட்சியின் உயர்பீட உறுப்பினரும் சட்டத்தரணியுமான ஹபீப் றிபான், கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீமினால் இன்று (21) உத்தியோகபூர்வமாக நியமிக்கப்பட்டுள்ளார்.


அம்பாறை மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்திய முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் கட்சியின் பிரதித் தலைவருமான எம்.எஸ். அப்துல் வாசித்தின் இராஜினாமாவைத் தொடர்ந்து ஏற்பட்ட வெற்றிடத்திற்கே இந்நியமனம் வழங்கப்பட்டுள்ளது.


இவ்வெற்றிடத்திற்குச் சட்டத்தரணி ஹபீப் றிபானின் பெயரை நியமிப்பது தொடர்பான அறிவிப்பை ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் நாயகமும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான நிசாம் காரியப்பர் தேர்தல் ஆணைக்குழுவிற்கு அனுப்பி வைத்துள்ளார்.


பல தசாப்த காலமாகப் பாராளுமன்றப் பிரதிநிதித்துவத்தை எதிர்பார்ப்பாகக் கொண்டிருந்த கல்குடா பிரதேச மக்களின் நீண்டகாலக் கனவை நனவாக்கும் வகையில் இத்தீர்மானம் அமைந்துள்ளதாக ஹபீப் றிபான் தெரிவித்துள்ளார்.


கல்குடா மண்ணை மையமாகக் கொண்டு கட்சியின் செயற்பாடுகளை மேலும் வீரியப்படுத்த இந்நியமனம் வழிவகுக்கும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.


இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினரும் கட்சியின் செயலாளருமான ஜனாதிபதி சட்டத்தரணி நிசாம் காரியப்பர், தவிசாளர் கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ், தேசிய அமைப்பாளர் எம்.எஸ். உதுமாலெப்பை மற்றும் உயர்பீட உறுப்பினர்களான அம்பாறை மாவட்ட செயலாளர் ஏ.சி. ஜமால்தீன், மௌலவி ஹாமித் உள்ளிட்ட பல முக்கியஸ்தர்கள் கலந்துகொண்டனர்.


கே.ஆர்.டி.வி. நெட்வொர்க் | தேசிய / அரசியல் செய்தி


ශ්‍රී ලංකා මුස්ලිම් කොංග්‍රසයේ ජාතික ලැයිස්තු පාර්ලිමේන්තු මන්ත්‍රීවරයා ලෙස නීතිඥ හබීබ් රිෆාන් පත් කෙරේ: කල්කුඩා ජනතාවගේ දිගුකාලීන අපේක්ෂාව ඉටු වෙයි!


ශ්‍රී ලංකා මුස්ලිම් කොංග්‍රසයේ ජාතික ලැයිස්තු පාර්ලිමේන්තු මන්ත්‍රීවරයා ලෙස ඕස්ට්‍රේලියාවේ/ඕට්ටමාවඩි ප්‍රදේශයට අයත් පක්ෂයේ උසස් පීඨ සාමාජික හා නීතිඥ හබීබ් රිෆාන් මහතා පක්ෂ නායක රවුෆ් හකීම් මහතා විසින් අද (21) දින නම් කරනු ලැබ ඇත.


අම්පාර දිස්ත්‍රික්කය නියෝජනය කළ හිටපු පාර්ලිමේන්තු මන්ත්‍රී සහ පක්ෂයේ නියෝජ්‍ය නායක එම්.එස්. අබ්දුල් වසීත් මහතාගේ ඉල්ලා අස්වීම හේතුවෙන් ඇති වූ පුරප්පාඩුව සඳහා මෙම පත්වීම ලබා දී තිබේ.


අදාළ පුරප්පාඩුව සඳහා නීතිඥ හබීබ් රිෆාන් මහතාගේ නම නම් කිරීම සම්බන්ධයෙන් වන නිල දැනුම්දීම ශ්‍රී ලංකා මුස්ලිම් කොංග්‍රසයේ මහලේකම් සහ ජනාධිපති නීතිඥ නිසාම් කාරියපර් විසින් මැතිවරණ කොමිෂන් සභාව වෙත යවා ඇත.


දශක කිහිපයක සිට පාර්ලිමේන්තු නියෝජනයක් අපේක්ෂා කළ කල්කුඩා ප්‍රදේශයේ ජනතාවගේ දිගුකාලීන අපේක්ෂාව යථාර්ථයක් බවට පත් කරමින් මෙම තීරණය ගෙන ඇති බව හබීබ් රිෆාන් මහතා ප්‍රකාශ කර ඇත.


කල්කුඩා ප්‍රදේශය මූලික කරගනිමින් පක්ෂයේ කටයුතු තවදුරටත් ශක්තිමත් කිරීමට මෙමඟින් අවස්ථාව සැලසෙන බවද ඔහු පෙන්වා දී තිබේ.


කේ.ආර්.ටී. වි. නෙට්වර්ක්   ජාතික / දේශපාලන පුවත්


Attorney Habib Rifhan Appointed as Sri Lanka Muslim Congress National List Parliamentarian: Realizing Long-Awaited Dreams of Kalkudah Public!


Attorney Habib Rifhan, a member of the SLMC High Command and a resident of Ottamawadi, has been appointed today (21) by party leader Rauff Hakeem as the National List Member of Parliament for the Sri Lanka Muslim Congress (SLMC).


The appointment fills the vacancy created following the resignation of former Member of Parliament and Deputy Leader of the party, M.S. Abdul Haseeth, who represented the Ampara District.


The official notification regarding the nomination of Attorney Habib Rifhan to this vacancy has been dispatched to the Election Commission by SLMC Secretary-General and President's Counsel Nizam Kariapper.


Habib Rifhan noted that this decision fulfills the long-standing aspiration of the Kalkudah people, who have anticipated parliamentary representation for decades.


He further highlighted that this development will serve as an opportunity to intensify party activities centered around the Kalkudah region.


KRTV Network | National / Political News

Comments