Skip to main content
Breaking news · In-depth coverage · Analysis
Breaking news · In-depth coverage · Analysis
● Breaking
Latest headlines

அனோஜனின் விவகாரம் சவூதி சட்டப்படி மிகவும் பாரதூரமானது: ஆர்ப்பாட்டங்களைத் தவிர்த்து இராஜதந்திர ரீதியில் அணுக மனித உரிமைகள் அமைப்பு வலியுறுத்தல்

 


அனோஜனின் விவகாரம் சவூதி சட்டப்படி மிகவும் பாரதூரமானது: ஆர்ப்பாட்டங்களைத் தவிர்த்து இராஜதந்திர ரீதியில் அணுக மனித உரிமைகள் அமைப்பு வலியுறுத்தல்


இஸ்லாம் மார்க்கத்தை அவமதிக்கும் வகையில் முகநூலில் பதிவிட்டதாகக் கூறி சவூதி அரேபியாவில் மரண தண்டனைத் தீர்ப்புக்கு முகங்கொடுத்துள்ள இலங்கை இளைஞரான சிவராசா அனோஜனுக்கு பொதுமன்னிப்பு வழங்கி உயிர்ப்பிச்சை அளிக்குமாறு கோரி, சர்வதேச மனித உரிமைகள் அமைப்பு கொழும்பிலுள்ள சவூதி தூதரகத்தின் ஊடாக சவூதி மன்னருக்கு உத்தியோகபூர்வ கடிதமொன்றை சமர்ப்பித்துள்ளது.


சவூதி தூதரகத்தில் கடிதத்தைக் கையளித்த பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த சர்வதேச மனித உரிமைகள் அமைப்பின் இயக்குநர் சுபாஷன சுபவிக்ரம, அனோஜன் வெளியிட்டுள்ளதாகக் கூறப்படும் கருத்து சவூதி நாட்டின் சட்ட திட்டங்களின் கீழ் மிகவும் பாரதூரமான மற்றும் கடுமையான குற்றமாகப் பார்க்கப்படுவதால் அவருக்கு மன்னிப்பு கிடைப்பது நிச்சயமற்ற ஒன்றாகவே காணப்படுவதாகத் தெரிவித்தார். இருப்பினும், மரண தண்டனையைத் தளர்த்தி ஏதேனும் நிவாரணம் வழங்குமாறு தாழ்மையுடன் கோரிக்கை விடுத்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.


இவ்விடயத்தை அரசியல் லாபங்களுக்காகப் பயன்படுத்தி உள்நாட்டில் ஆர்ப்பாட்டங்களை மேற்கொள்வதையோ அல்லது உணர்ச்சிவசப்பட்ட கருத்துக்களை வெளியிடுவதையோ அனைவரும் முற்றாகத் தவிர்க்க வேண்டும் என அவர் எச்சரித்தார். இத்தகைய பதற்றமான செயல்கள் அனோஜனின் உயிருக்கு மேலும் கடுமையான ஆபத்தை விளைவிக்கும் எனச் சுட்டிக்காட்டிய அவர், சவூதி அரேபியாவின் கடுமையான சட்ட நடைமுறைகளைக் கருத்திற்கொண்டு வெளிவிவகார அமைச்சு முறையான வேலைத்திட்டத்தின் மூலம் இராஜதந்திர மட்டத்தில் மட்டுமே இதில் தலையிட வேண்டும் எனவும், தூதரக மட்டத்திலான இராஜதந்திர பேச்சுவார்த்தைகள் மூலமே நிவாரணம் பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளதாகவும் வலியுறுத்தினார்.


கே ஆர் டி வி நெட்வொர்க் - உள்நாட்டுச் செய்தி / இராஜதந்திரம் மற்றும் மனித உரிமைகள் விவகாரம்


අනුජන්ගේ ප්‍රකාශය සවුදි නීතියට අනුව ඉතා බරපතළයි: රාජ්‍යතාන්ත්‍රිකව මැදිහත් වන ලෙස මානව හිමිකම් සංවිධානයෙන් ඉල්ලීමක්


ඉස්ලාම් ධර්මයට අපහාස වන අයුරින් ෆේස්බුක් සමාජ මාධ්‍යයේ සටහන් පළ කළ බවට චෝදනා ලබා සවුදි අරාබියේදී මරණ දඬුවමට මුහුණ දී සිටින ශ්‍රී ලාංකික තරුණයෙකු වන ශිවරාසා අනුජන්ට රාජකීය සමාව ප්‍රදානය කර ජීවිතය බේරා දෙන ලෙස ඉල්ලා ජාත්‍යන්තර මානව හිමිකම් සංවිධානයක් කොළඹ පිහිටි සවුදි තානාපති කාර්යාලය හරහා සවුදි රජු වෙත නිල ලිඛිත ඉල්ලීමක් භාර දී තිබේ.


තානාපති කාර්යාලයට ලිපිය භාරදීමෙන් අනතුරුව මාධ්‍ය වෙත අදහස් දැක්වූ එම ජාත්‍යන්තර මානව හිමිකම් සංවිධානයේ අධ්‍යක්ෂ සුභාෂණ සුභවික්‍රම මහතා සඳහන් කළේ, අනුජන් පළ කළ බව කියන ප්‍රකාශය සවුදි නීතියට අනුව අතිශය බරපතළ වරදක් බැවින් ඔහුට සමාව ලැබේද යන්න පිළිබඳව ස්ථිරව ප්‍රකාශ කළ නොහැකි බවයි. කෙසේ වෙතත්, මරණ දඬුවම ලිහිල් කර යම් සහනයක් ලබාදෙන ලෙස සවුදි රජුගෙන් කාරුණිකව ඉල්ලා සිටි බව ඔහු පැවසීය.


මෙම අර්බුදකාරී තත්ත්වය දේශපාලන වාසි සඳහා යොදාගනිමින් මෙරට තුළ උද්ඝෝෂණ පැවැත්වීමෙන් හෝ ආවේගශීලී ප්‍රකාශ නිකුත් කිරීමෙන් වළකින ලෙස දැඩිව අවධාරණය කළ සුභවික්‍රම මහතා, එවැනි ක්‍රියාමාර්ග මඟින් අසරණව සිටින තරුණයාගේ ජීවිතයට තවදුරටත් දැඩි තර්ජනයක් එල්ල විය හැකි බව පෙන්වා දුන්නේය. සවුදි අරාබිය තුළ නීතිය අතිශය දැඩි ලෙස ක්‍රියාත්මක වන බැවින්, විදේශ කටයුතු අමාත්‍යාංශය විධිමත් වැඩපිළිවෙළක් ඔස්සේ රාජ්‍යතාන්ත්‍රික මට්ටමින් පමණක් මේ සඳහා මැදිහත් විය යුතු බවත්, රාජ්‍යතාන්ත්‍රික සාකච්ඡා මඟින් පමණක් යම් සහනයක් ලබාගැනීමට වැඩි අවස්ථාවක් පවතින බවත් ඔහු වැඩිදුරටත් සඳහන් කළේය.


කේ ආර් ටී වී නෙට්වර්ක් - දේශීය පුවත් / රාජ්‍යතාන්ත්‍රික සහ මානව හිමිකම් පුවත්


Anojan's Offence Highly Severe Under Saudi Law: Human Rights Group Urges Restraint and Diplomatic Intervention


The International Human Rights Organization has formally tendered an appeal addressed to the Saudi Monarch through the Royal Embassy of Saudi Arabia in Colombo, pleading for clemency and the preservation of the life of Sri Lankan national Sivarasa Anojan, who is facing capital punishment over blasphemous social media remarks.


Addressing the media following the submission, the Organization's Director, Subhashana Subhawickrama, stated that given the exceptionally grave nature of the alleged remarks under the legal framework of Saudi Arabia, the granting of a pardon remains far from guaranteed. He noted, however, that an earnest plea has been placed before the King to consider sentence commutation and humanitarian leniency.


Subhawickrama strongly cautioned domestic stakeholders against exploiting the delicate predicament for parochial political mileage, warning that staging public protests or making incendiary public pronouncements could gravely jeopardize the imperiled youth's safety. Emphasizing the stringent and unyielding enforcement of Saudi judicial codes, he maintained that the Ministry of Foreign Affairs must navigate the issue strictly via coordinated and structured bilateral diplomatic channels, stressing that discreet diplomatic dialogue remains the most viable avenue to secure potential reprieve.


KR TV Network - Local News / Diplomatic and Human Rights Affairs

Comments