Skip to main content
Breaking news · In-depth coverage · Analysis
Breaking news · In-depth coverage · Analysis
● Breaking
Latest headlines

வங்காள விரிகுடாவில் அந்தமான் தீவுகளுக்கு வடக்கே தாழ்வுமுக்கம் உருவாகியது - இலங்கைக்கு நேரடி ஆபத்தில்லை என்றாலும் பலத்த மழைக்கு வாய்ப்பு!

 








வங்காள விரிகுடாவில் அந்தமான் தீவுகளுக்கு வடக்கே தாழ்வுமுக்கம் உருவாகியது - இலங்கைக்கு நேரடி ஆபத்தில்லை என்றாலும் பலத்த மழைக்கு வாய்ப்பு!


செய்தியாளர்: பர்ஹானா பதுர்தீன்


மத்திய வங்காள விரிகுடாவில் அந்தமான் தீவுகளுக்கு வடக்கே புதிய தாழ்வுமுக்கம் ஒன்று உருவாகியுள்ளதாக வானிலை ஆய்வாளர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார்.


இந்த தாழ்வுமுக்கம் வடக்கு - வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து, ஒரு புயலாக மாறி (சிலவேளைகளில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவே) இந்தியாவின் ஒடிசா மாநிலத்தின் கஞ்சாம் மாவட்டத்தில் உள்ள பிரம்மபூர் பிரதேசத்திற்கு அருகில் கரையைக் கடக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது புயலாக வலுப்பெறும் பட்சத்தில், பங்களாதேஷ் பரிந்துரைத்த "அர்னாப்" (Arnap) என்ற பெயர் சூட்டப்படும்


இப்புயலினால் இலங்கைக்கு நேரடிப் பாதிப்புகள் எதுவும் இல்லை எனினும், அரபிக்கடலின் ஈரப்பதன் மிக்க காற்று இலங்கையின் மேற்குப் பகுதி ஊடாக ஈர்க்கப்படுவதால், எதிர்வரும் செப்டம்பர் 19 முதல் 23 வரை மேற்கு, தெற்கு, சப்ரகமுவா, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களின் பல பகுதிகளுக்கும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.


அதேவேளை, வடக்கு, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் நிலவும் வெப்பச்சலன மழை நாளையும் (19) முதல் பல பகுதிகளுக்கும் பரவலாக்கம் பெறும்.


உருவாகியுள்ள தாழ்வுமுக்கம் காரணமாக செப்டம்பர் 20 முதல் 23 வரை இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்குக் கடற்பகுதிகள் கொந்தளிப்பாகக் காணப்படும் என்பதால், மீனவர்கள் அவதானத்துடன் செயற்படுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.


கே.ஆர்.டி.வி. நெட்வொர்க் | தேசிய / வானிலைச் செய்தி


මධ්‍යම බෙංගාල බොක්ක ප්‍රදේශයේ අන්දමන් දූපත්වලට උතුරින් පීඩන අවපාතයක් නිර්මාණය වෙයි – ශ්‍රී ලංකාවට සෘජු බලපෑමක් නොමැති වුවද වැසි වැඩි වීමේ හැකියාවක්!


වාර්තාකරු: ෆර්හානා බදුර්දීන්


මධ්‍යම බෙංගාල බොක්ක ප්‍රදේශයේ අන්දමන් දූපත්වලට උතුරින් නව පීඩන අවපාතයක් නිර්මාණය වී ඇතැයි කාලගුණ විද්‍යාඥ නාගමුත්තු ප්‍රදීපරාජා මහතා පෙන්වා දෙයි.


මෙම පීඩන අවපාතය උතුරු - වයඹ දෙසට ගමන් කර සුළි කුණාටුවක් බවට පත්වී (නැතහොත් ගැඹුරු පීඩන අවපාතයක් ලෙස) ඉන්දියාවේ ඔඩිසා ප්‍රාන්තයේ ගංජාම් දිස්ත්‍රික්කයේ බ්‍රහ්මපූර් ප්‍රදේශය අසලින් ගොඩබිමට ළඟා වනු ඇතැයි අපේක්ෂා කෙරේ. එය සුළි කුණාටුවක් බවට පත් වුවහොත්, බංග්ලාදේශය විසින් නම් කරන ලද "අර්නාප්" (Arnap) යන නම ඊට ලබා දෙනු ඇත.


මෙම පද්ධතිය නිසා ශ්‍රී ලංකාවට සෘජු බලපෑමක් නොමැති වුවද, අරාබි මුහුදේ තෙතමනය සහිත සුළං බටහිර ප්‍රදේශ හරහා ඇදී යාම හේතුවෙන් සැප්තැම්බර් 19 සිට 23 දක්වා බස්නාහිර, දකුණු, සබරගමුව, මධ්‍යම සහ වයඹ පළාත්වලට තද වැසි ඇති විය හැක.


ඊට අමතරව, උතුරු, නැගෙනහිර සහ උතුරු-මැද පළාත්වල පවතින සංවහන වැසි තත්ත්වය තවත් ප්‍රදේශ වෙත ව්‍යාප්ත විය හැකි අතර, සැප්තැම්බර් 20 සිට 23 දක්වා උතුරු සහ නැගෙනහිර මුහුදු ප්‍රදේශ රළු විය හැකි බැවින් ධීවරයින් සැලකිලිමත් වන ලෙස ඉල්ලා සිටියි.


කේ.ආර්.ටී. වි. නෙට්වර්ක්  ජාතික / කාලගුණ පුවත් 


Depression Forms North of Andaman Islands in Central Bay of Bengal; Heavy Rains Expected in Sri Lanka Despite No Direct Threat!


Reporter: Farhana Bathurdeen


A new depression has formed in the central Bay of Bengal to the north of the Andaman Islands, according to meteorologist Nagamuthu Pradheeparajah.


The system is expected to move in a north-northwesterly direction and intensify into a cyclone (or cross the coast as a deep depression) near Brahmapur in the Ganjam district of India's Odisha state. If it upgrades into a cyclone, it will be named "Arnap", a designation proposed by Bangladesh.


Although there is no direct threat to Sri Lanka, moisture-laden winds from the Arabian Sea are expected to be drawn across the country's western regions, bringing heavy rainfall to the Western, Southern, Sabaragamuwa, Central, and North-Western provinces from September 19 to 23.


Additionally, convectional rains currently experienced in parts of the Northern, Eastern, and North-Central provinces will expand starting tomorrow (19).


Due to the depression, the northern and eastern sea areas around Sri Lanka will become rough from September 20 to 23, prompting advisories for fishermen to exercise caution.


KRTV Network | National / Weather News

Comments