வங்காள விரிகுடாவில் தாழமுக்கம் தீவிரம்: கடற்றொழிலாளர்களுக்கு சிவப்பு எச்சரிக்கை
வங்காள விரிகுடாவில் தாழமுக்கம் தீவிரம்: கடற்றொழிலாளர்களுக்கு சிவப்பு எச்சரிக்கை
செய்தியாளர்: பர்ஹானா பதுறுதீன்
மேற்கு - மத்திய மற்றும் அதனை அண்மித்த மத்திய - கிழக்கு வங்காள விரிகுடா கடற்பரப்பில் நிலவிய குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தாழமுக்கமாக வலுவடைந்துள்ளதை அடுத்து, கடற்றொழிலாளர்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களத்தினால் சிவப்பு நிற அவசர எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இத்தாழமுக்கமானது அடுத்த 24 மணித்தியாலங்களில் மேலும் தீவிரமடைந்து வடக்கு ஆந்திரப் பிரதேசம் மற்றும் தெற்கு ஒடிசா கடலோரப் பகுதிகளை நோக்கி நகரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதன் காரணமாக வங்காள விரிகுடாவின் ஆழ்கடல் பகுதிகளில் காற்றின் வேகம் மணிக்கு 55 முதல் 65 கிலோமீற்றர் வரையிலும், இடியுடன் கூடிய மழை பெய்யும் தருணங்களில் மணிக்கு 70 கிலோமீற்றர் வரையிலும் அதிகரித்து கடல் மிகவும் கொந்தளிப்பாகக் காணப்படும். இதனால் வடக்கு அட்சரேகை 5 இற்கும் 22 இற்கும் இடையிலும், கிழக்கு தீர்க்கரேகை 85 இற்கும் 100 இற்கும் இடையிலும் உள்ள கடல் பிராந்தியங்களில் மறுஅறிவித்தல் வரை கடற்றொழில் நடவடிக்கைகளில் ஈடுபடுவதை முழுமையாகத் தவிர்க்குமாறும், ஏற்கனவே அப்பகுதிகளில் உள்ள பலநாள் மீன்பிடிப் படகுகள் உடனடியாக பாதுகாப்பான இடங்களை நோக்கித் திரும்புமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கே ஆர் டி வி நெட்வொர்க் - உள்நாட்டுச் செய்தி / காலநிலை மற்றும் அனர்த்த முன்னெச்சரிக்கை விவகாரம்
බෙංගාල බොක්කේ පීඩන අවපාතයක්: ධීවරයින්ට රතු නිවේදනයක් නිකුත් කෙරේ
වාර්තාකරු: ෆර්හානා බදුර්දීන්
බටහිර - මධ්යම සහ ඒ ආශ්රිත නැගෙනහිර මධ්යම බෙංගාල බොක්ක මුහුදු ප්රදේශයේ පැවති අඩු පීඩන කලාපය පීඩන අවපාතයක් (Depression) දක්වා වර්ධනය වීම හේතුවෙන් කාලගුණ විද්යා දෙපාර්තමේන්තුව විසින් ධීවර ප්රජාව වෙනුවෙන් රතු වර්ණයෙන් යුත් හදිසි අනතුරු ඇඟවීමේ නිවේදනයක් නිකුත් කර තිබේ.
මෙම පද්ධතිය ඉදිරි පැය 24 තුළ තවදුරටත් තීව්ර වෙමින් උතුරු ආන්ද්රා ප්රදේශ් සහ දකුණු ඔඩිෂා වෙරළ තීරයන් දෙසට ගමන් කරනු ඇතැයි අපේක්ෂා කෙරේ. මේ හේතුවෙන් ගැඹුරු මුහුදු ප්රදේශවල සුළගේ වේගය විටින් විට පැයට කිලෝමීටර් 55 ත් 65 ත් දක්වාත්, ගිගුරුම් සහිත වැසි සමඟ සුළගේ වේගය පැයට කිලෝමීටර් 70 දක්වාත් ඉහළ යා හැකි බැවින් මුහුදු ප්රදේශ ඉතා රළු විය හැක. ඒ අනුව, උතුරු අක්ෂාංශ 5 ත් 22 ත් අතර සහ නැගෙනහිර දේශාංශ 85 ත් 100 ත් අතර මුහුදු කලාපවල නැවත දැනුම් දෙන තුරු ධීවර සහ නාවික කටයුතුවල නිරත වීමෙන් සම්පූර්ණයෙන්ම වළකින ලෙසත්, දැනටමත් එම මුහුදු ප්රදේශවල සිටින බහුදින ධීවර යාත්රා වහාම ආරක්ෂිත ස්ථාන කරා පැමිණෙන ලෙසත් දැඩිව අවවාද කර ඇත.
කේ ආර් ටී වී නෙට්වර්ක් - දේශීය පුවත් / කාලගුණ සහ ආපදා පූර්ව අනතුරු ඇඟවීම් පුවත්
Depression Forms Over Bay of Bengal: Red Alert Issued for Naval and Fishing Communities
Reporter: Farhana Badurdeen
The Department of Meteorology has issued a red-category marine advisory for the deep sea areas of the Bay of Bengal following the intensification of a low-pressure area into a depression over the west-central and adjoining north-west sectors.
The meteorological system is projected to intensify further over the next 24 hours while moving towards the coastlines of north Andhra Pradesh and south Odisha. Under the influence of this weather phenomenon, wind speeds across deep sea tracts are forecast to increase up to 55 to 65 kmph intermittently, with gusts potentially accelerating to 70 kmph alongside rough seas during thundershowers. Naval personnel and multi-day fishing operators are strictly cautioned against venturing into sea zones bounded by latitude 05 N to 22 N and longitude 85 E to 100 E until further notice, with operators already deployed within the coordinates strongly advised to vacate immediately.
KR TV Network - Local News / Weather and Natural Disaster Advisory

Comments