Skip to main content
Breaking news · In-depth coverage · Analysis
Breaking news · In-depth coverage · Analysis
● Breaking
Latest headlines

இஸ்லாமிய முகமன் கூறிய பெண் ஐபிஎஸ் அதிகாரி இடமாற்றம்: இந்தியாவில் சர்ச்சை

 


இஸ்லாமிய முகமன் கூறிய பெண் ஐபிஎஸ் அதிகாரி இடமாற்றம்: இந்தியாவில் சர்ச்சை


அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகத்தின் சிவில் சர்வீஸ் பயிற்சி மையம் மூலமாகப் பயின்று வெற்றிபெற்ற தனது அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டமைக்காகவும், உரையாடலில் இஸ்லாமிய முகமன் மற்றும் வார்த்தைகளைப் பயன்படுத்தியமைக்காகவும் மேற்கு வங்கத்தில் பணியாற்றி வந்த பெண் ஐ.பி.எஸ். அதிகாரி புஷ்ரா பானு பணியிட மாற்றம் செய்யப்பட்ட விவகாரம் இந்தியாவில் பெரும் விவாதத்தையும் எதிர்ப்புகளையும் கிளப்பியுள்ளது.

உத்தரப் பிரதேச மாநிலம் கன்னோஜ் பகுதியைச் சேர்ந்த 2021-ஆம் ஆண்டு பிரிவு ஐ.பி.எஸ். அதிகாரியான புஷ்ரா பானு, மேற்கு வங்கத்தின் கரக்பூர் கூடுதல் பொலிஸ் கண்காணிப்பாளராகப் பணியாற்றி வந்தார். இவர் தனது சமூக ஊடகப் பக்கத்தில், அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகத்தின் பயிற்சி மையம் போட்டித் தேர்வுகளுக்கு எவ்வாறு உதவியது என்பது குறித்து மாணவர்களுக்கு ஊக்கமளிக்கும் வகையில் வீடியோ ஒன்றைப் பதிவிட்டிருந்தார். அந்த வீடியோவில் அவர் தொடக்கத்தில் அஸ்ஸலாமு அலைக்கும் என்றும், உரையின் இடையே இன்ஷா அல்லாஹ் மற்றும் முடிவில் ஜஸாக்கல்லாஹ் ஹைரன் போன்ற வார்த்தைகளையும் பயன்படுத்தியிருந்தார்.

இதற்கு எதிர்ப்புத் தெரிவித்த சில அமைப்புகளும், ஹிந்து லீகல் ஃபண்ட் என்ற அமைப்பும், சீருடையில் உள்ள ஓர் அதிகாரி வந்தே மாதரம் அல்லது ஜெய் ஹிந்த் எனக் கூறாமல் இஸ்லாமிய முகமன்களைப் பயன்படுத்தியது அரச நடுநிலைமைக்கு எதிரானது எனக் கூறி மேற்கு வங்க உள்துறைச் செயலாளரிடம் முறைப்பாடு செய்தன. இப்புகார் அளிக்கப்பட்ட குறுகிய காலத்திற்குள், புஷ்ரா பானு கரக்பூர் கூடுதல் எஸ்பி பொறுப்பிலிருந்து மாற்றப்பட்டு, மாநில ஆயுதப்படை 4-வது பட்டாலியனின் துணைத் தளபதியாக நியமிக்கப்பட்டார்.

அரசுத் தரப்பு இது வழக்கமான நிர்வாக இடமாற்றம் எனக் கூறினாலும், அமைப்புகளின் மதரீதியான எதிர்ப்புக்குப் பணிந்தே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக எதிர்க்கட்சித் தலைவர்கள், சமூகச் செயற்பாட்டாளர்கள் மற்றும் பொதுமக்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். அரசு நிறுவனங்கள், விண்வெளி ஆய்வு மையங்கள் மற்றும் பொலிஸ் நிலையங்களில் வெளிப்படையாக சமய சடங்குகளும் வழிபாடுகளும் தடையின்றி நடைபெறும் நிலையில், ஒரு முஸ்லிம் அதிகாரி தனது தனிப்பட்ட அடையாளத்தின் அடிப்படையிலான முகமன் வார்த்தைகளைப் பேசியதற்காக குறிவைக்கப்படுவது வெளிப்படையான இரட்டை நிலைப்பாடு மற்றும் மதச்சார்பின்மைக்கு எதிரான போக்கு என விமர்சனங்கள் எழுந்துள்ளன.

கே ஆர் டி வி நெட்வொர்க் - சர்வதேச செய்தி / இந்திய அரசியல் மற்றும் மனித உரிமைகள் விவகாரம்

ඉස්ලාමීය ආචාර කිරීම් භාවිත කළැයි ඉන්දීය මුස්ලිම් කාන්තා IPS නිලධාරිනිය මාරු කෙරේ

අලිගාර් මුස්ලිම් විශ්වවිද්‍යාලයේ සිවිල් සේවා පුහුණු ඇකඩමිය හරහා විභාග සමත් වූ සිය අත්දැකීම් විස්තර කරමින් සිසුන් දිරිමත් කිරීම සඳහා නිකුත් කළ වීඩියෝවක අස්සලාමු අලයිකුම් සහ ඉන්ෂා අල්ලාහ් යන ඉස්ලාමීය වදන් භාවිත කළැයි බටහිර බෙංගාලයේ සේවය කළ මුස්ලිම් කාන්තා IPS නිලධාරිනී බුෂ්රා බානෝ හදිසි ස්ථාන මාරුවකට ලක් කිරීම ඉන්දියාව පුරා දැඩි දේශපාලන හා සමාජීය කැලඹීමක් ඇති කර තිබේ.

උත්තර ප්‍රදේශ් ප්‍රාන්තයේ කන්නෝජ් ප්‍රදේශයේ උපන් ඇය, 2021 කාණ්ඩයේ IPS නිලධාරිනියක වන අතර බටහිර බෙංගාලයේ කරග්පූර් අතිරේක පොලිස් අධිකාරීවරිය ලෙස සේවය කරමින් සිටියාය. තරඟ විභාගවලට මුහුණ දෙන සිසුන්ට උපදෙස් දෙමින් ඇය පළ කළ වීඩියෝවේ අදාළ ඉස්ලාමීය වචන භාවිත කිරීමට එරෙහිව සංවිධාන සහ හින්දු ලීගල් ෆන්ඩ් නම් සංවිධානය විසින් බෙංගාල ස්වදේශ කටයුතු ලේකම්වරයා වෙත පැමිණිලි ඉදිරිපත් කරන ලදී. නිල ඇඳුමෙන් සිටින නිලධාරිනියක ජාතික සටන් පාඨ වෙනුවට ආගමික වචන භාවිත කළ බවට ඔවුන් චෝදනා කළහ.

මෙම පැමිණිල්ලෙන් දින කිහිපයකට පසු ඇයව එම තනතුරෙන් ඉවත් කර ප්‍රාන්ත සන්නද්ධ පොලිසියේ 4 වන බලඇණියේ නියෝජ්‍ය අණදෙන නිලධාරිනිය ලෙස මාරු කර යවා ඇත. මෙය සාමාන්‍ය පරිපාලන මාරුවක් බව පාලනාධිකාරිය ප්‍රකාශ කළද, දක්ෂ සුළුතර කාන්තා නිලධාරිනියකගේ සාමාන්‍ය ආචාර කිරීමක් පවා ඉලක්ක කර ගනිමින් සිදුකළ මෙම ක්‍රියාව ආගමික පක්ෂග්‍රාහීත්වයක් සහ ද්විත්ව ප්‍රතිපත්තියක් බවට විපක්ෂ දේශපාලනඥයන් සහ සිවිල් සංවිධාන දැඩි විරෝධය පළ කර තිබේ.

කේ ආර් ටී වී නෙට්වර්ක් - ජාත්‍යන්තර පුවත් / ඉන්දීය දේශපාලන සහ මානව හිමිකම් පුවත්

Indian Muslim Woman IPS Officer Transferred Over Islamic Greetings

The abrupt administrative transfer of Bushra Bano, a 2021-batch Muslim woman Indian Police Service officer serving in West Bengal, has triggered widespread public indignation and fierce political backlash across India, with critics alleging state prejudice and double standards.

Bushra Bano, hailing from Kannauj in Uttar Pradesh and serving as the Additional Superintendent of Police in Kharagpur, recently posted an informational video intended to guide and motivate civil service aspirants. In the video, she recounted her preparation journey through the Residential Coaching Academy at Aligarh Muslim University, commencing her address with the greeting Assalamu Alaikum and using expressions such as Inshallah and Jazakallah.

Right-wing groups, notably an outfit called the Hindu Legal Fund, took objection to her use of traditional Islamic phrases while in police uniform and lodged an official complaint with the West Bengal Home Secretary, demanding administrative action for not using expressions like Jai Hind or Vande Mataram. Following the complaint, Bano was shunted from her field policing post and reassigned as Deputy Commandant of the 4th Battalion of the State Armed Police. While the administration termed it a routine administrative redeployment, opposition lawmakers and civil society organizations strongly condemned the move, asserting that targeting a highly qualified minority woman officer for everyday cultural expressions reflects a deeply troubling intolerance in public governance.

KR TV Network - International News / Indian Politics and Human Rights

Comments