கம்பஹா உடுகம்பொலவில் காவல்துறையினரின் கட்டளையை மீறிச் சென்ற சிற்றூர்தி மீது துப்பாக்கிச் சூடு: சாரதி காயமடைந்த நிலையில் கைது
கம்பஹா உடுகம்பொலவில் காவல்துறையினரின் கட்டளையை மீறிச் சென்ற சிற்றூர்தி மீது துப்பாக்கிச் சூடு: சாரதி காயமடைந்த நிலையில் கைது
செய்தியாளர்: பர்ஹானா பதுறுதீன்
கம்பஹா உடுகம்பொல, மல்வத்த வீதியில் காவல்துறையினரின் கட்டளையை மீறிப் பயணிக்க முயன்ற சிற்றூர்தியொன்றின் (Van) மீது காவல்துறையினர் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளதாக காவல்துறை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
கம்பஹா, அஸ்கிரிய பகுதிக்குட்பட்ட உடுகம்பொல மல்வத்த வீதியில் பாதுகாப்பு மற்றும் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர், சந்தேகத்திற்குரிய முறையில் பயணித்த குறித்த சிற்றூர்தியை நிறுத்துமாறு சமிக்ஞை செய்து கட்டளையிட்டுள்ளனர். இருப்பினும், காவல்துறையினரின் கட்டளையை உதாசீனம் செய்துவிட்டு சிற்றூர்தி முன்னோக்கிச் செல்ல முயன்றபோதே காவல்துறையினர் அதன்மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளனர். இத்துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் சிற்றூர்தியின் சாரதி காயமடைந்துள்ளதுடன், அவர் உடனடியாகக் கைது செய்யப்பட்டு பொலிஸ் பாதுகாப்பில் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
கே ஆர் டி வி நெட்வொர்க் - உள்நாட்டுச் செய்தி / பொலிஸ் மற்றும் சட்ட ஒழுங்குச் செய்தி
ගම්පහ උඩුගම්පොළදී පොලිස් අණ නොතකා ධාවනය වූ වෑන් රථයකට වෙඩි: රියදුරු තුවාල ලබා රෝහලේ
වාර්තාකරු: ෆර්හානා බදුර්දීන්
ගම්පහ, උඩුගම්පොළ මල්වත්ත පාරේදී පොලිස් අණ නොතකා ධාවනය කිරීමට උත්සාහ කළ වෑන් රථයකට පොලිසිය විසින් එල්ල කළ වෙඩි ප්රහාරයකින් පුද්ගලයෙකු තුවාල ලබා ඇති බව පොලිස් මාධ්ය කොට්ඨාසය පවසයි.
ගම්පහ අස්ගිරිය ප්රදේශයට අයත් උඩුගම්පොළ මල්වත්ත මාර්ගයේ රථවාහන පරීක්ෂාවක නිරතව සිටි පොලිස් නිලධාරීන් විසින් සැකකටයුතු ලෙස පැමිණි අදාළ වෑන් රථය නතර කරන ලෙසට සංඥා කර තිබේ. එහෙත් පොලිස් අණ නොතකා වෑන් රථය ඉදිරියට ධාවනය කිරීමට උත්සාහ කළ අවස්ථාවේදී පොලිසිය විසින් රථය දෙසට වෙඩි තැබීම සිදුකර ඇත. වෙඩි වැදීමෙන් තුවාල ලැබූ වෑන් රථයේ රියදුරු අත්අඩංගුවට ගෙන වහාම ප්රතිකාර සඳහා රෝහල්ගත කර ඇති අතර, සිද්ධිය සම්බන්ධයෙන් පොලිසිය වැඩිදුර විමර්ශන ආරම්භ කර තිබේ.
කේ ආර් ටී වී නෙට්වර්ක් - දේශීය පුවත් / පොලිස් හා නීතිය ක්රියාත්මක කිරීමේ පුවත්
Police Open Fire on Van Defying Orders to Stop in Gampaha Udugampola; Driver Wounded and Hospitalized
Reporter: Farhana Badurdeen
A man sustained gunshot injuries after police opened fire on a van that attempted to speed away defying orders to stop along Malwatta Road in Udugampola, Gampaha, the Police Media Division stated.
Police personnel conducting vehicular security checkpoints along Malwatta Road in the Asgiriya area of Udugampola signaled the suspicious van to pull over. However, the driver allegedly ignored police commands and attempted to drive past the checkpoint, prompting officers to discharge firearms at the vehicle. The driver was injured in the gunfire, subsequently taken into custody, and admitted to the hospital under police guard for medical treatment. Gampaha Police are conducting further investigations into the incident.
KR TV Network - Local News / Police and Law Enforcement

Comments