Skip to main content
Breaking news · In-depth coverage · Analysis
Breaking news · In-depth coverage · Analysis
● Breaking
Latest headlines

சவூதி அரேபியாவில் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள இலங்கை பிரஜை அனுஜன் என்பவருக்கு அரச பொதுமன்னிப்பு வழங்குமாறு சவூதி மன்னரிடம் முன்னாள் கொன்சியூல் ஜெனரல் இனமுல்லா மசிஹுதீன் மனிதாபிமானக் கோரிக்கை


 சவூதி அரேபியாவில் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள இலங்கை பிரஜை அனுஜன் என்பவருக்கு அரச பொதுமன்னிப்பு வழங்குமாறு சவூதி மன்னரிடம் முன்னாள் கொன்சியூல் ஜெனரல் இனமுல்லா மசிஹுதீன் மனிதாபிமானக் கோரிக்கை


நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை அவமதித்த குற்றச்சாட்டின் கீழ் சவூதி நீதிமன்றினால் ஐந்து வருட கால சிறைத்தண்டனையும் மூன்று மில்லியன் சவூதி ரியால்கள் அபராதமும் விதிக்கப்பட்டுள்ள இலங்கை பிரஜையான அனுஜன் என்பவருக்கு அரச பொதுமன்னிப்பு வழங்குமாறு கோரி, ஜித்தாவிலுள்ள இலங்கைக்கான முன்னாள் கொன்சியூல் ஜெனரலும், கொழும்பிலுள்ள சவூதி தூதரகத்தின் முன்னாள் அரசியல் நிபுணருமான இனமுல்லா மசிஹுதீன், சவூதி மன்னர் சல்மான் பின் அப்துல்அஸீஸ் அல் சவூத்துக்கு உத்தியோகபூர்வ மனிதாபிமான கருணை மனுவொன்றை சமர்ப்பித்துள்ளார்.


சவூதி அரேபியாவின் இஸ்லாமிய ஷரீஆ சட்டங்கள், அந்நாட்டு சட்ட விதிகளின் மேலாதிக்கம் மற்றும் நீதித்துறையின் சுயாதீனத்தன்மையை முழுமையாக மதிப்பதாகத் தெரிவித்துள்ள அவர், நீதிமன்ற தீர்ப்பை சவாலுக்கு உட்படுத்தாமல் முற்றிலும் மனிதாபிமான அடிப்படையில் இந்த மனுவை மன்னரின் மேலான கவனத்திற்கு முன்வைப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.


குறித்த இலங்கை பிரஜை தனது செயலுக்காக உளப்பூர்வமாக வருந்தி, முஸ்லிம் மக்களிடம் சமூக ஊடகங்கள் வாயிலாக பகிரங்க மன்னிப்புக் கோரியுள்ளமை, இந்து மத நம்பிக்கைகள் மீது தொடுக்கப்பட்ட அவமதிப்புக்கு ஏற்பட்ட உணர்ச்சிவசப்பட்ட எதிர்வினையாகவே இச்சம்பவம் பதிவாகியுள்ளமை, இலங்கையிலுள்ள ஏழ்மையான பெரிய குடும்பத்தைப் பராமரித்து வரும் ஒரு சாதாரண தொழிலாளியான இவரால் விதிக்கப்பட்ட பாரிய அபராதத் தொகையைச் செலுத்த முடியாத பொருளாதார நிலைமை மற்றும் இவ்வருட இறுதியில் தனது சொந்த ஊரில் குறைந்த வருமானம் கொண்ட குடும்பத்தைச் சேர்ந்த பெண்ணைத் திருமணம் செய்வதற்குத் திட்டமிட்டிருந்த சூழல் ஆகியவற்றை இனமுல்லா மசிஹுதீன் சுட்டிக்காட்டியுள்ளார்.


மேலும், பல தசாப்த கால உள்நாட்டு யுத்தத்திற்குப் பின்னர் இலங்கையில் கட்டியெழுப்பப்பட்டு வரும் தேசிய நல்லிணக்கம் மற்றும் சமூகங்களுக்கிடையிலான அமைதியான சகவாழ்வுக்கு இச்சம்பவம் தேவையற்ற முரண்பாடுகளை ஏற்படுத்தாமல் தவிர்க்கும் பொருட்டு, சவூதி மன்னரின் கருணை அதிகாரத்தைப் பயன்படுத்தி அவருக்கு அரச பொதுமன்னிப்பு வழங்குமாறு அம்மனுவில் வினயமாகக் கேட்டுக்கொண்டுள்ளார்.


கே ஆர் டி வி நெட்வொர்க் - சர்வதேச செய்தி / சவூதி-இலங்கை விவகாரம் மற்றும் மனிதாபிமானப் பொதுமன்னிப்புச் செய்தி


සවුදි අරාබියේදී සිරදඬුවම් නියම වූ ශ්‍රී ලාංකික තරුණ අනුජන්ට රාජකීය සමාව දෙන ලෙස ජිද්දාහි හිටපු කොන්සල් ජනරාල් ඉනමුල්ලා මසිහුදීන්ගෙන් සවුදි රජු වෙත මානුෂීය ඉල්ලීමක්


මුහම්මද් නබිතුමාණන්ට අපහාස කිරීමේ චෝදනාව මත සවුදි අරාබි අධිකරණයක් මඟින් වසර පහක සිරදඬුවමක් සහ සවුදි රියාල් මිලියන තුනක දඩයක් නියම වී සිටින අනුජන් නමැති ශ්‍රී ලාංකික තරුණයාට රාජකීය සමාව ලබාදෙන ලෙස ඉල්ලා ජිද්දාහි ශ්‍රී ලංකා හිටපු කොන්සල් ජනරාල් මෙන්ම මෙරට සවුදි තානාපති කාර්යාලයේ හිටපු දේශපාලන විශේෂඥයෙකු වන ඉනමුල්ලා මසිහුදීන් මහතා විසින් සවුදි අරාබියේ සල්මාන් බින් අබ්දුල්අසීස් අල් සවුද් රජු වෙත විශේෂ මානුෂීය පෙත්සමක් යොමු කර තිබේ.


සවුදි අරාබියේ ඉස්ලාමීය ෂරියා නීතිය, අධිකරණයේ ස්වාධීනත්වය සහ රාජ්‍ය නීති පද්ධතියට පූර්ණ ගෞරවය පුදකරන බව අවධාරණය කරන ඒ මහතා, අධිකරණ තීන්දුව ප්‍රශ්න කිරීමකින් තොරව හුදෙක් මානුෂීය කරුණු මත පදනම්ව මෙම කරුණාව අයැදීමේ පෙත්සම ඉදිරිපත් කරන බව සඳහන් කර ඇත.


අදාළ ශ්‍රී ලාංකිකයා සිය වරද සම්බන්ධයෙන් දැඩි පසුතැවිල්ලකට පත්ව සමාජ මාධ්‍ය ඔස්සේ මුස්ලිම් ප්‍රජාවගෙන් ප්‍රසිද්ධියේ සමාව අයැද ඇති බවත්, හින්දු ආගමික විශ්වාසයන්ට එල්ල වූ අපහාසයකට ක්ෂණිකව දැක්වූ චිත්තවේගීය ප්‍රතිචාරයක් ලෙස මෙම සිදුවීම වාර්තා වී ඇති බවත් පෙත්සමෙහි පෙන්වා දී තිබේ. එමෙන්ම ඔහු මෙරට දිළිඳු පවුලක් නඩත්තු කරන අඩු ආදායම්ලාභී සේවකයෙකු බැවින් නියම වූ අධික දඩ මුදල ගෙවීමට මූල්‍යමය ශක්තියක් නොමැති බවත්, මෙම වසර අවසානයේ දිළිඳු තරුණියක සමඟ විවාහ වීමට සැලසුම් කර තිබූ බවත් මෙහිදී සිහිපත් කර ඇත. තවද, දිග්ගැස්සුණු යුද්ධයෙන් පසු ශ්‍රී ලංකාව තුළ ගොඩනැගෙමින් පවතින ජාතික සමඟියට හා ආගමික සහජීවනයට මෙම සිදුවීම අහිතකර ලෙස බලපෑම වැළැක්වීම අරමුණු කරගනිමින්, සවුදි රජුගේ පරමාධිපත්‍ය බලතල යටතේ මොහුට රාජකීය සමාව ප්‍රදානය කරන ලෙස ඉතා ගෞරවයෙන් ඉල්ලා තිබේ.


කේ ආර් ටී වී නෙට්වර්ක් - ජාත්‍යන්තර පුවත් / සවුදි-ශ්‍රී ලංකා සබඳතා සහ මානුෂීය සමාව පිළිබඳ පුවත්


Former Sri Lankan Consul General Inamullah Masihudeen Appeals to Saudi King Salman for Royal Clemency on Behalf of Convicted Citizen Anujan


Inamullah Masihudeen, former Consul General of the Republic of Sri Lanka in Jeddah and former Political Expert at the Royal Embassy of Saudi Arabia in Sri Lanka, has submitted an official humanitarian petition to the Custodian of the Two Holy Mosques, King Salman bin Abdulaziz Al Saud, respectfully appealing for royal clemency or a compassionate review regarding the judicial sentence imposed on Sri Lankan national Mr. Anujan.


The Sri Lankan expatriate was convicted by the Saudi judiciary in an offence concerning disrespect towards the Prophet Muhammad, incurring a sentence of five years’ imprisonment alongside a punitive fine of three million Saudi Riyals. Reaffirming profound respect for the sovereignty of Saudi Arabia, the independence of its judicial institutions, and the rulings of Islamic Shariah, the petition is presented strictly as a humanitarian appeal rather than a legal challenge to the court's verdict.


The petition underscores several compelling humanitarian factors, noting that the convicted individual expressed sincere remorse and issued an unreserved public apology to Muslims worldwide via social media, that the incident originated as an emotional reaction to online insults directed against Hindu religious sanctities, and that the individual is a modest-wage earner supporting a large, impoverished family in Sri Lanka without the financial means to satisfy the heavy monetary fine. Additionally, the appeal notes that the incarceration disrupted his scheduled marriage to a woman from an underprivileged background in his home village, while emphasizing that granting royal clemency would safeguard communal harmony and inter-religious coexistence in post-conflict Sri Lanka.


KR TV Network - International News / Saudi-Sri Lanka Relations and Humanitarian Diplomacy

Comments