அனோஜனின் மரண தண்டனைத் தீர்ப்புக்கு எதிராக சவூதி உச்ச நீதிமன்றத்தில் மேன்முறையீடு: எதிர்க்கட்சித் தலைவரிடம் உறுதியளித்தார் தூதுவர் அமீர் அஜ்வத்
அனோஜனின் மரண தண்டனைத் தீர்ப்புக்கு எதிராக சவூதி உச்ச நீதிமன்றத்தில் மேன்முறையீடு: எதிர்க்கட்சித் தலைவரிடம் உறுதியளித்தார் தூதுவர் அமீர் அஜ்வத்
சவூதி அரேபியாவில் மத நிந்தனைக் குற்றச்சாட்டின் கீழ் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ள அம்பாறை நற்பிட்டிமுனையைச் சேர்ந்த இலங்கைத் தொழிலாளியான சிவராசா அனோஜனின் குடும்பத்தினரை, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கொழும்பிலுள்ள தனது உத்தியோகபூர்வ அலுவலகத்தில் இன்று நேரில் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
அனோஜனின் தந்தை தம்பிராஜா சிவராசா, தாயார் யோகலட்சுமி மற்றும் சகோதரர் அம்சீதன் ஆகியோர் இச்சந்திப்பில் கலந்துகொண்டிருந்த வேளையில், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச சவூதி அரேபியாவுக்கான இலங்கைத் தூதுவர் ஓ.எல். அமீர் அஜ்வத்தை தொலைபேசி ஊடாகத் தொடர்புகொண்டு கலந்துரையாடினார். அப்போது தூதுவர் அமீர் அஜ்வத் கருத்துத் தெரிவிக்கையில், அனோஜனின் தீர்ப்பு தொடர்பான உத்தியோகபூர்வ எழுத்துமூல தீர்ப்பு நகல் கிடைத்தவுடன், அந்நாட்டின் உச்ச நீதிமன்றத்தில் (Supreme Court) மேன்முறையீடு செய்வதற்கு அனைத்து சட்ட நடவடிக்கைகளும் தூதரகத்தால் முன்னெடுக்கப்பட்டு வருவதாக உறுதிப்படுத்தினார். அத்துடன், சிறையிலுள்ள அனோஜனுடனும் தொலைபேசியில் உரையாடி நலம் விசாரித்த எதிர்க்கட்சித் தலைவர், வெளிவிவகார அமைச்சின் செயலாளர் அருணி ரணராஜவையும் தொடர்புகொண்டு அனோஜனைப் பாதுகாப்பாக மீட்பதற்கு அரசாங்க ரீதியாக முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்துக் கேட்டறிந்ததுடன் தனது முழுமையான ஆதரவையும் வெளிப்படுத்தினார்.
கே ஆர் டி வி நெட்வொர்க் - உள்நாட்டுச் செய்தி / இராஜதந்திரம் மற்றும் மனித உரிமைகள் விவகாரம்
අනුජන්ගේ මරණ දඬුවමට එරෙහිව සවුදි ශ්රේෂ්ඨාධිකරණයට අභියාචනයක්: විපක්ෂ නායකවරයාට තානාපති අමීර් අජ්වඩ් සහතික වෙයි
සවුදි අරාබියේදී ආගමික අපහාස චෝදනා මත මරණ දඬුවම නියම වී ඇති බවට තොරතුරු පළවන අම්පාර නාට්පිට්ටිමුනෙයි ප්රදේශයේ පදිංචි ශිවරාසා අනුජන් නමැති ශ්රී ලාංකික තරුණයාගේ දෙමාපියන් සහ ඥාතීන්, කොළඹ පිහිටි විපක්ෂ නායක කාර්යාලයේදී විපක්ෂ නායක සජිත් ප්රේමදාස මහතා හමුවී තිබේ.
අනුජන්ගේ පියා වන තම්බිරාජා ශිවරාසා, මව වන යෝගලක්ෂ්මී සහ සොහොයුරු හම්සිදන් යන අය මෙම හමුවට එක්ව සිටි අතරතුර, විපක්ෂ නායකවරයා සවුදි අරාබියේ ශ්රී ලංකා තානාපති ඕ.එල්. අමීර් අජ්වඩ් මහතා සමඟ දුරකථනයෙන් සෘජුව සම්බන්ධ වී දීර්ඝ ලෙස සාකච්ඡා කළේය. එහිදී තානාපතිවරයා පෙන්වා දුන්නේ, අධිකරණ තීන්දුවේ නිල ලිඛිත පිටපත ලැබුණු වහාම සවුදි ශ්රේෂ්ඨාධිකරණය හමුවේ අභියාචනයක් ඉදිරිපත් කිරීමට තානාපති කාර්යාලය සියලු නීතිමය පියවර ගනිමින් සිටින බවයි. එමෙන්ම බන්ධනාගාරයේ පසුවන අනුජන් සමඟද දුරකථනයෙන් කතාබහ කර සුවදුක් විමසූ විපක්ෂ නායකවරයා, අනතුරුව විදේශ කටයුතු අමාත්යාංශයේ ලේකම් අරුණි රණරාජා මහත්මියද අමතා රජය මඟින් ක්රියාත්මක කර ඇති නීතිමය හා රාජ්යතාන්ත්රික පියවර පිළිබඳව විමසා සිටි අතර, තරුණයා බේරාගැනීමට උපරිමයෙන් මැදිහත් වන බවට සහතික විය.
කේ ආර් ටී වී නෙට්වර්ක් - දේශීය පුවත් / රාජ්යතාන්ත්රික සහ මානව හිමිකම් පුවත්
Appeal to be Filed at Saudi Supreme Court Against Anojan's Death Penalty: Ambassador Ameer Ajwad Informs Opposition Leader
Sri Lankan Ambassador to Saudi Arabia, O.L. Ameer Ajwad, has affirmed that legal steps are being mobilized to file a decisive appeal before the Saudi Supreme Court contesting the reported death penalty imposed on Sri Lankan national Sivarasa Anojan, during a telephonic dialogue with Opposition Leader Sajith Premadasa.
The development unfolded when the parents and relatives of Anojan—including his father Tambirajah Sivarasa, mother Rasamanickyam Yogalakshmy, and brother Sivarasa Hamsidan—met the Opposition Leader at his office in Colombo today. Engaging the diplomatic front directly, Premadasa telephoned Ambassador Ameer Ajwad in Riyadh to examine ongoing legal remedies, during which the envoy confirmed the mission's readiness to lodge an appeal with the Supreme Judicial Court upon receipt of the certified written judgment. The Opposition Leader subsequently spoke directly via phone with Anojan to inquire after his wellbeing, and followed up with Foreign Affairs Ministry Secretary Aruni Ranaraja to assess state-level diplomatic initiatives, reiterating complete solidarity and collective efforts to secure the youth's safe release.
KR TV Network - Local News / Diplomatic and Human Rights Affairs
Comments