Skip to main content
Breaking news · In-depth coverage · Analysis
Breaking news · In-depth coverage · Analysis
● Breaking
Latest headlines

இலங்கையர்களுக்கான தாய்லாந்து விசா அற்ற நுழைவு வசதி ரத்து: சட்டவிரோத செயல்களே காரணம் என அமைச்சர் விஜித ஹேரத் தகவல்


 இலங்கையர்களுக்கான தாய்லாந்து விசா அற்ற நுழைவு வசதி ரத்து: சட்டவிரோத செயல்களே காரணம் என அமைச்சர் விஜித ஹேரத் தகவல்


தாய்லாந்திற்குள் நுழைவதற்கு இலங்கையர்களுக்கு ஏற்கனவே வழங்கப்பட்டிருந்த விசா அற்ற அனுமதி வசதி ரத்து செய்யப்பட்டமைக்கான முதன்மை காரணம், இலங்கை பிரஜைகள் சிலர் தாய்லாந்தில் மேற்கொண்ட பல்வேறு சட்டவிரோத செயல்களே ஆகும் என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.


இன்று நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்தபோதே அவர் இதனைத் தெரிவித்தார். தாய்லாந்திற்குள் நுழையும் போது இலங்கையர்களுக்கு வழங்கப்பட்டு வந்த விசா அற்ற பயண வசதியை எதிர்வரும் செப்டெம்பர் 15 ஆம் திகதி முதல் இடைநிறுத்த தாய்லாந்து தூதரகம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதன் காரணமாக செப்டெம்பர் 15 ஆம் திகதிக்குப் பின்னர் தாய்லாந்து செல்லும் அனைத்து இலங்கையர்களும் பயணத்தை ஆரம்பிப்பதற்கு முன்னரே விசா அனுமதியைப் பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.


தாய்லாந்து அரசாங்கத்தின் இந்த அதிரடித் தீர்மானம் குறித்து இலங்கை அதிகாரிகள் அந்நாட்டுடன் கலந்துரையாடல்களை ஆரம்பித்துள்ளதாக அமைச்சர் விஜித ஹேரத் குறிப்பிட்டார். எதிர்காலத்தில் இரு நாடுகளுக்கும் இடையே புதிய இருதரப்பு ஒப்பந்தம் ஒன்றை மேற்கொள்வதற்கு முன்மொழியப்பட்டுள்ளதாகவும், அந்த ஒப்பந்தத்தின் ஊடாக மீண்டும் இலங்கையர்களுக்கு விசா அற்ற நுழைவு வசதியைப் பெற்றுக்கொள்ள எதிர்பார்ப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.


கே ஆர் டி வி நெட்வொர்க் - சர்வதேச செய்தி


ශ්‍රී ලාංකිකයින්ට තායිලන්තයට ඇතුළුවීමට ලබාදී තිබූ වීසා රහිත පහසුකම අහෝසි කිරීමට නීතිවිරෝධී ක්‍රියා හේතු වූ බව අමාත්‍ය විජිත හේරත් පවසයි


තායිලන්තයට ඇතුළුවීම සඳහා ශ්‍රී ලාංකිකයන්ට මීට පෙර ලබාදී තිබූ වීසා රහිත පහසුකම අහෝසි කිරීමට ප්‍රධානතම හේතුව වී ඇත්තේ ශ්‍රී ලාංකිකයන් එරට තුළ සිදුකළ විවිධ නීතිවිරෝධී ක්‍රියාකාරකම් බව අමාත්‍ය මණ්ඩල ප්‍රකාශක අමාත්‍ය විජිත හේරත් මහතා ප්‍රකාශ කර තිබේ.


අද දින පැවති කැබිනට් තීරණ දැනුම්දීමේ මාධ්‍ය හමුවට එක්වෙමින් අමාත්‍යවරයා මේ බව සඳහන් කළේය. තායිලන්තයට ඇතුළුවීමේදී ලබාදී තිබූ මෙම වීසා රහිත ඇතුළුවීමේ පහසුකම එළඹෙන සැප්තැම්බර් 15 වනදා සිට ක්‍රියාත්මක වන පරිදි අහෝසි කිරීමට තායිලන්ත තානාපති කාර්යාලය පියවර ගෙන ඇත. ඒ අනුව සැප්තැම්බර් 15 න් පසු තායිලන්තය බලා පිටත්ව යන සියලුම ශ්‍රී ලාංකිකයින් සිය ගමන ආරම්භ කිරීමට පෙර වීසා බලපත්‍රයක් ලබාගැනීම අනිවාර්ය වේ.


තායිලන්ත රජය ගත් මෙම තීරණය සම්බන්ධයෙන් ශ්‍රී ලංකා රජය තායිලන්තය සමඟ සාකච්ඡා පවත්වා ඇති බවත්, ඒ අනුව ද්විපාර්ශ්වික ගිවිසුමකට එළඹීමට යෝජනා කර ඇති බවත් අමාත්‍යවරයා මෙහිදී පෙන්වා දුන්නේය. ඉදිරියේදී දෙරට අතර අත්සන් තැබීමට නියමිත එම නව ගිවිසුම හරහා යළිත් ශ්‍රී ලංකාවට එම වීසා පහසුකම හිමිකර ගැනීමට අපේක්ෂා කරන බවද ඒ මහතා වැඩිදුරටත් කියා සිටියේය.


කේ ආර් ටීවී නෙට්වර්ක් - ජාත්‍යන්තර පුවත්


Illegal Activities by Sri Lankans Led to Revocation of Visa-Free Entry to Thailand, Confirms Minister Vijitha Herath


Cabinet Spokesman Minister Vijitha Herath stated today that unlawful activities carried out by certain Sri Lankan nationals in Thailand were the primary cause behind the cancellation of the visa-free entry facility previously granted to Sri Lankans.


Speaking at the weekly Cabinet decisions press briefing, the Minister clarified that the Royal Thai Embassy has moved to revoke the visa-exempt entry privilege for Sri Lankan passport holders with effect from September 15. Consequently, any Sri Lankan national traveling to Thailand after September 15 must obtain a valid visa prior to departure.


Minister Vijitha Herath further revealed that the Sri Lankan government has actively engaged with Thai authorities regarding the measure. A proposed bilateral agreement has been submitted, with both governments expected to formalize the pact in the near future in an effort to restore visa-free access for Sri Lankan citizens.


KR TV Network - International News

Comments