Skip to main content
Breaking news · In-depth coverage · Analysis
Breaking news · In-depth coverage · Analysis
● Breaking
Latest headlines

திருகோணமலையில் வெள்ளை வேனில் இடம்பெற்ற கடத்தல் சம்பவங்கள்: கன்சைட் முகாமில் கடமையாற்றிய இரு முன்னாள் கடற்படை வீராங்கனைகள் கைது – திடுக்கிடும் உண்மைகள் வெளியீடு!


 திருகோணமலையில் வெள்ளை வேனில் இடம்பெற்ற கடத்தல் சம்பவங்கள்: கன்சைட் முகாமில் கடமையாற்றிய இரு முன்னாள் கடற்படை வீராங்கனைகள் கைது – திடுக்கிடும் உண்மைகள் வெளியீடு!


திருகோணமலை (திருமலை) பகுதியில் கடந்த காலங்களில் வெள்ளை வேனில் மேற்கொள்ளப்பட்ட நபர் கடத்தல் மற்றும் காணாமல் ஆக்கப்பட்ட சம்பவங்கள் தொடர்பில் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ள பொலிஸார், கன்சைட் (Consite) முகாமில் கடமையாற்றிய முன்னாள் கடற்படை வீராங்கனைகள் இருவரைக் கைது செய்துள்ளனர்.


திருகோணமலைப் பகுதியில் பதிவான பல வெள்ளை வேன் கடத்தல் சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் குறித்த இரகசியத் தகவல்களின் அடிப்படையில் காவல்துறையினர் மற்றும் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேற்கொண்ட கூட்டு நடவடிக்கையின் மூலமாகவே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.


கைது செய்யப்பட்ட இருவரும் முன்னர் திருகோணமலை கன்சைட் கடற்படை முகாமில் உத்தியோகபூர்வமாகக் கடமையாற்றியவர்கள் என்பது விசாரணைகளில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.


குறித்த கடத்தல் சம்பவங்களுக்குப் பின்னால் உள்ள பிரதான சூத்திரதாரிகள் மற்றும் அவர்களுக்கு உடந்தையாகச் செயற்பட்ட ஏனைய நபர்கள் குறித்தும் பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.


கே.ஆர்.டி.வி. நெட்வொர்க் | தேசிய / குற்றவியல் & புலனாய்வுச் செய்தி


 ත්‍රිකුණාමලයේ සුදු වෑන් රථයෙන් සිදුවූ පැහැරගැනීම් සම්බන්ධයෙන්: කොන්සයිට් කඳවුරේ සේවය කළ හිටපු නාවික හමුදා කාන්තා සෙබළියන් දෙදෙනෙක් අත්අඩංගුවට!


ත්‍රිකුණාමලයේ (තිරුමලේ) පසුගිය කාලය තුළ සුදු වෑන් රථ මගින් සිදු කරන ලද පුද්ගලයින් පැහැරගැනීම් සහ අතුරුදන් කිරීම් සම්බන්ධයෙන් පුළුල් පරීක්ෂණ පවත්වන පොලිසිය, කොන්සයිට් (Consite) කඳවුරට අනුයුක්තව සේවය කළ හිටපු නාවික හමුදා කාන්තා සෙබළියන් දෙදෙනෙකු අත්අඩංගුවට ගෙන ඇත.


ත්‍රිකුණාමල ප්‍රදේශයේ වාර්තා වූ බරපතල සුදු වෑන් පැහැරගැනීම් සිද්ධීන් සමඟ සම්බන්ධ පුද්ගලයින් පිළිබඳ ලැබුණු രහසිගත තොරතුරු මත පොලිසිය සහ අපරාධ පරීක්ෂණ දෙපාර්තමේන්තුව එක්ව සිදු කළ මෙහෙයුමකදී මෙම අත්අඩංගුවට ගැනීම සිදු කර තිබේ.


අත්අඩංගුවට පත් වූ දෙදෙනා මීට පෙර ත්‍රිකුණාමලය කොන්සයිට් නාවික හමුදා කඳවුරේ සේවය කළ අය බව විමර්ශනවලදී තහවුරු වී ඇත.


අදාළ පැහැරගැනීම් පසුපස සිටින ප්‍රධාන සූත්‍රධාරීන් සහ ඔවුන්ට සහයෝගය දැක්වූ අනෙකුත් පුද්ගලයින් පිළිබඳව පොලිසිය විසින් වැඩිදුර පරීක්ෂණ ක්‍රියාත්මක කරමින් පවතී.


කේ.ආර්.ටී. වි. නෙට්වර්ක්  ජාතික / අපරාධ සහ ගවේෂණ පුවත් 


White Van Abduction Cases in Trincomalee: Two Former Navy Female Officers Serving at the Consite Camp Arrested!


Stepping up investigations into historical white van abduction and disappearance cases reported in the Trincomalee area, law enforcement authorities have arrested two former female naval personnel who previously served at the Consite camp.


Acting on intelligence regarding individuals linked to notorious white van abduction rings in Trincomalee, police and specialized investigative units conducted a coordinated operation leading to the apprehension of the suspects.


Investigations have confirmed that both arrested women were formerly deployed on active duty at the Trincomalee Consite Naval Camp.


Authorities are conducting comprehensive follow-up inquiries to unearth the masterminds behind the abductions and identify any other accomplices involved.


KRTV Network | National / Crime & Investigative News

Comments