இதய நோயாளிகளுக்குப் புதிய நம்பிக்கை - பிரான்ஸ் விஞ்ஞானிகளால் உருவாக்கப்பட்டது முழுமையான செயற்கை இதயம்!
இதய நோயாளிகளுக்குப் புதிய நம்பிக்கை - பிரான்ஸ் விஞ்ஞானிகளால் உருவாக்கப்பட்டது முழுமையான செயற்கை இதயம்!
உலகம் முழுவதும் இருதய நோயால் பாதிக்கப்பட்டு உறுப்பு தானத்திற்காகக் காத்திருக்கும் லட்சக்கணக்கானோருக்குப் பெரும் நம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில், பிரான்ஸ் நாட்டு விஞ்ஞானிகள் முழுமையாகப் பொருத்தக் கூடிய புதிய செயற்கை இதயத்தை (Artificial Heart) உருவாக்கியுள்ளனர்.
நோயாளியின் உடல் இயக்கத்திற்கு ஏற்ப இரத்த ஓட்டத்தைத் தானாகவே சரிசெய்து கொள்ளும் நவீன சென்சார்கள் இதில் பொருத்தப்பட்டுள்ளன. மேலும், தானமாகப் பெறப்படும் இதயத்தை மனித உடல் நிராகரிக்கும் (Organ Rejection) சிக்கல் இதில் ஏற்படாது என்பதே இதன் மிக முக்கியமான பலமாகக் கருதப்படுகின்றது.
இப்புதிய தொழில்நுட்பம் தற்போது ஆரம்பகட்ட மருத்துவச் சோதனைகளில் வெற்றிகரமாகச் சோதிக்கப்பட்டு வந்தாலும், இதன் நீண்டகாலப் பாதுகாப்பு மற்றும் செயல் திறன் குறித்து மருத்துவர்கள் தொடர்ந்து ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர். சோதனைகள் முழுமையாக வெற்றியடையும் பட்சத்தில், இருதயச் சிகிச்சi வரலாற்றில் இது ஒரு மாபெரும் திருப்புமுனையாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கே.ஆர்.டி.வி. நெட்வொர்க் | பன்னாட்டுச் செய்தி / அறிவியல்
හෘද රෝගීන්ට නව බලාපොරොත්තුවක් - ප්රංශ විද්යාඥයින්ගෙන් සම්පූර්ණයෙන්ම බද්ධ කළ හැකි කෘත්රිම හෘදයක්!
ලොව පුරා හෘද රෝගවලින් පෙළෙන සහ ඉන්ද්රිය පරිත්යාගයක් අපේක්ෂාවෙන් පසුවන ලක්ෂ සංඛ්යාත රෝගීන්ට නව මලාපොරොත්තුවක් ගෙන එමින්, ප්රංශ විද්යාඥයින් විසින් සම්පූර්ණයෙන්ම සිරුර තුළ රඳවා තැබිය හැකි නව කෘත්රිම හෘදයක් (Artificial Heart) නිර්මාණය කර තිබේ.
රෝගියාගේ ශරීරයේ ක්රියාකාරීත්වයට අනුව රුධිර සංසරණය ස්වයංක්රීයව පාලනය කර ගැනීමට හැකි නවීන සෙන්සර මෙහි අන්තර්ගත වේ. පරිත්යාග කරන ලද හෘදයක් ශරීරය විසින් ප්රතික්ෂේප කිරීමේ (Organ Rejection) ගැටළුව මෙහිදී ඇති නොවීම මෙහි ඇති ප්රධානම වාසියයි.
මෙම නව තාක්ෂණය මේ වන විට මූලික වෛද්ය අත්හදා බැලීම් අදියරේ පවතින අතර, එහි දිගුකාලීන ආරක්ෂාව සහ කාර්යක්ෂමතාව පිළිබඳව විද්යාඥයින් අඛණ්ඩව පර්යේෂණ සිදු කරමින් සිටිති. අත්හදා බැලීම් සම්පූර්ණයෙන්ම සාර්ථක වුවහොත්, හෘද ප්රතිකාර ඉතිහාසයේ මෙය දැවැන්ත පෙරළියක් වනු ඇත.
කේ.ආර්.ටී. වි. නෙට්වර්ක් ජාත්යන්තර පුවත / විද්යාව
A New Hope for Heart Patients: French Scientists Develop a Fully Implantable Artificial Heart!
Offering renewed hope to millions of patients worldwide awaiting organ donations, French scientists have successfully developed a fully implantable artificial heart equipped with cutting-edge technology.
Integrated with smart sensors, the artificial heart automatically adjusts blood circulation in real-time according to the patient's physical activity and physiological needs. A major advantage of this innovation is the elimination of the risk of organ rejection by the human body.
While initial clinical trials have yielded promising results, medical experts are continuing long-term safety and efficacy studies. If fully validated through ongoing research, this breakthrough could revolutionize the future treatment of terminal heart failure globally.
KRTV Network | International News / Science

Comments