Skip to main content
Breaking news · In-depth coverage · Analysis
Breaking news · In-depth coverage · Analysis
● Breaking
Latest headlines

அனோஜனை விடுவிக்க தேசிய ஷூரா சபை சவூதி மன்னருக்கு கருணை மனு: நிதானம் பேண சமூக வலைத்தள பயனாளர்களுக்கு வேண்டுகோள்


 அனோஜனை விடுவிக்க தேசிய ஷூரா சபை சவூதி மன்னருக்கு கருணை மனு: நிதானம் பேண சமூக வலைத்தள பயனாளர்களுக்கு வேண்டுகோள்


சவூதி அரேபியாவில் மத விவகாரம் தொடர்பான குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டு சட்ட நடவடிக்கைகளை எதிர்நோக்கியுள்ள இலங்கை பிரஜையான சிவராசா அனோஜனை விடுவித்து நாட்டிற்கு அழைத்து வர இராஜதந்திர மற்றும் சட்ட ரீதியான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில், இலங்கையின் தேசிய ஷூரா சபையும் சவூதி அரேபிய மன்னருக்கு விசேட கருணை மனுவொன்றை உத்தியோகபூர்வமாக அனுப்பி வைத்துள்ளது.


இலங்கை வெளிவிவகார அமைச்சு மற்றும் சவூதியில் உள்ள இலங்கைத் தூதரகம் ஆகியவை அந்நாட்டு நீதிமன்ற நடவடிக்கைகள் மற்றும் மன்னிப்புக் கோரும் வழிகள் ஊடாக உரிய முயற்சிகளை மேற்கொண்டு வருவதுடன், இலங்கை ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த தமிழ், முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் சிவில், சன்மார்க்க தலைமைகளும் மனிதாபிமான அடிப்படையிலான சகல நகர்வுகளையும் முன்னெடுத்து வருகின்றனர்.


இவ்வேளையில், அனோஜனின் விடுதலையைக் கருத்திற்கொண்டு சமூக வலைத்தளங்களில் பொதுமக்கள் மற்றும் செயற்பாட்டாளர்கள் மிக நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டும் எனவும், அவரது விடுதலைக்கு குந்தகத்தை ஏற்படுத்தும் வகையிலான பதிவுகளை இடுவதைத் தவிர்த்துக்கொள்ள வேண்டும் எனவும் சமூக அவதானி இனாமுல்லாஹ் மஷூஹூத்தீன் சுட்டிக்காட்டியுள்ளார். உணர்வுபூர்வமான மற்றும் இராஜதந்திர முக்கியத்துவம் வாய்ந்த ஒரு வழக்கை அரசியல் அல்லது குறுகிய நிகழ்ச்சி நிரல்களுக்காகப் பயன்படுத்துவதைத் தடுத்து, மக்கள் மத்தியில் வீண் குழப்பங்களை விளைவிக்கும் தவறான கருத்துக்களைப் பரப்புவதைத் தவிர்ப்பது அவசியமானது எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.


கே ஆர் டி வி நெட்வொர்க் - உள்நாட்டுச் செய்தி / இராஜதந்திரம் மற்றும் மனித உரிமைகள் விவகாரம்


අනුජන් වෙනුවෙන් ජාතික ෂූරා සභාවෙන් සවුදි රජුට කරුණා අයැදුම්පතක්: සමාජ මාධ්‍ය ක්‍රියාකාරීන්ට සංයමයෙන් කටයුතු කරන ලෙස ඉල්ලීමක්


සවුදි අරාබියේදී ආගමික අපහාස චෝදනා මත නීතිමය ක්‍රියාමාර්ගවලට මුහුණ දී සිටින ශ්‍රී ලාංකික තරුණයෙකු වන ශිවරාසා අනුජන් මුදාගෙන යළි මෙරටට ගෙන්වා ගැනීම සඳහා රාජ්‍යතාන්ත්‍රික හා නීතිමය පියවර ක්‍රියාත්මක වෙමින් පවතින පසුබිමක, ශ්‍රී ලංකාවේ ජාතික ෂූරා සභාව (National Shura Council) විසින්ද සවුදි රජු වෙත විශේෂ කරුණා අයැදුම්පතක් යොමු කර තිබේ.


ශ්‍රී ලංකා විදේශ කටයුතු අමාත්‍යාංශය සහ රියාද්හි ශ්‍රී ලංකා තානාපති කාර්යාලය අදාළ අධිකරණ ක්‍රියාමාර්ග හා රාජකීය සමාව ලබාගැනීමේ හැකියාවන් ඔස්සේ කටයුතු කරන අතරතුර, ආණ්ඩු පක්ෂය හා විපක්ෂය නියෝජනය කරන දෙමළ හා මුස්ලිම් පාර්ලිමේන්තු මන්ත්‍රීවරුන්ද, සිවිල් හා ආගමික නායකයන්ද හැකි උපරිම ප්‍රයත්නයන් දරමින් සිටියි.


මෙම සංවේදී අවස්ථාවේදී අනුජන්ගේ නිදහසට හානි සිදුවිය හැකි අන්දමේ ප්‍රකාශ හෝ වාද විවාද සමාජ මාධ්‍ය ඔස්සේ පළකිරීමෙන් වළකින ලෙස සමාජ විශ්ලේෂක ඉනාමුල්ලාහ් මෂූහුත්තීන් මහතා ඉල්ලා සිටියි. මෙම අධිකරණ හා රාජ්‍යතාන්ත්‍රික සංවේදී කරුණ ඇතැම් පාර්ශ්වයන් විසින් සිය පටු දේශපාලන අරමුණු වෙනුවෙන් භාවිත කිරීමට ඉඩ නොතැබිය යුතු බවත්, ජනතාව නොමඟ යවන සුළු ප්‍රකාශ සිදුකිරීමෙන් වැළකී බුද්ධිමත්ව කටයුතු කිරීම අත්‍යවශ්‍ය බවත් ඔහු පෙන්වා දී තිබේ.


කේ ආර් ටී වී නෙට්වර්ක් - දේශීය පුවත් / රාජ්‍යතාන්ත්‍රික සහ මානව හිමිකම් පුවත්


National Shura Council Submits Mercy Petition to Saudi King for Anojan: Public Urged to Exercise Restraint


Amid active diplomatic and legal engagements underway to secure the release of Sri Lankan national Sivarasa Anojan, who is facing judicial proceedings in Saudi Arabia, the National Shura Council of Sri Lanka has formally dispatched a mercy petition to the King of Saudi Arabia appealing for clemency.


The Ministry of Foreign Affairs and the Sri Lankan Embassy in Riyadh are actively pursuing judicial channels alongside clemency representations, supported by multi-partisan efforts involving Tamil and Muslim parliamentarians, alongside civil society and religious leadership across Sri Lanka.


In light of the delicate legal situation, public observer Inamullah Masooddeen has urged social media commentators to exercise utmost caution and avoid publishing contentious posts that could jeopardize judicial outcomes or impede diplomatic relief. He cautioned that stakeholders must not exploit the humanitarian situation for parochial political ends, adding that propagating speculative or ill-informed commentaries risks generating confusion among the public while diplomatic and judicial mechanisms are actively engaged.


KR TV Network - Local News / Diplomatic and Human Rights Affairs

Comments